பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் இருக்கிறாரா இல்லையா.. வந்து விழுந்த கேள்வி.. பொன் ராதாகிருஷ்ணன் பளிச் பதில்
சென்னை: லோக்சபா தேர்தலுக்கான பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் அணி இருக்கிறார்களா இல்லையா என்ற கேள்விக்கு முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த பாஜக தலைவருமான பொன் ராதாகிருஷ்ணன் வெளிப்படையாகப் பதில் அளித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெறும் நிலையில், இதற்கான தேர்தல் பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் ஆரம்பித்துள்ளன. பாஜக தரப்பில் தேசியளவில் ஏற்கனவே முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டது. பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட 195 பேரின் பெயர்கள் அதில் இருந்தது.

அதேநேரம் தமிழ்நாட்டில் இருந்து எந்தவொரு வேட்பாளர் பெயரும் அதில் இடம்பெறவில்லை. கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிவிட்ட நிலையில், வலுவான ஒரு கூட்டணியை அமைக்கும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. இதன் காரணமாகவே பாஜக வேட்பாளர் லிஸ்டில் தமிழக வேட்பாளர்கள் இல்லை எனக் கூறப்படுகிறது.
பொன் ராதாகிருஷ்ணன்: இங்கே ஓபிஎஸை பொறுத்தவரை அவர் தாங்கள் பாஜக கூட்டணியில் தான் இருக்கிறோம் எனத் தொடர்ந்து கூறி வருகிறார். இருப்பினும், இதுவரை பாஜக தரப்பில் இருந்து யாரும் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அதேபோல மோடி பங்கேற்ற பல்லடம் பொதுக்கூட்டத்திலும் ஓபிஎஸுக்கு அழைப்பு இல்லை. இதனால் அவர் கூட்டணியில் இருக்கிறாரா இல்லையா என்பதில் சஸ்பென்ஸ் தான் இருந்தது. இதற்கிடையே பாஜக தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் இதற்குப் பதிலளித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், "ஒவ்வொரு கட்சியாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். நாங்கள் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துவிட்டோம் என நாங்கள் சொல்லவில்லை. ஒவ்வொரு கட்சியாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். யாருடன் எந்த நேரத்தில் பேச வேண்டுமோ அவர்களுடன் தக்க நேரத்தில் பேசுவோம்.
கூட்டணி பேச்சுவார்த்தை: ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். கூட்டணி என வரும் போது பேச்சுவார்த்தை குறித்த அனைத்து விஷயங்களையும் வெளியே சொல்ல முடியாது. தனித்தனியாக யாருடன் எங்கே பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமா அதையெல்லாம் நாங்கள் செய்து வருகிறோம்.
யாரெல்லாம் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக வர வேண்டும் என விரும்புகிறார்களோ.. அவர்களுடன் நாங்கள் கூட்டணி வைப்பதில் எங்களுக்கு எந்தவொரு தயக்கமும் இல்லை. கூட்டணி பேச்சுவார்த்தையை நாங்கள் இப்போது தான் ஆரம்பித்துள்ளோம். பிரதமர் வருகையால் அடுத்த சில நாட்களுக்குப் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. வரும் நாட்களில் கட்டாயம் அனைத்து கட்சிகளையும் நாம் பார்ப்போம்.
புது விளக்கம்: நாங்கள் நடத்தும் கூட்டங்களில் கலந்து கொள்பவர்கள் மட்டுமே கூட்டணியில் இருப்பதாக எல்லாம் அர்த்தம் இல்லை. பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட திட்டம் வேலைகளைப் பொருத்தம் மாறும்" என்றார்.
ஓபிஎஸ் தரப்புடன் பேச்சுவார்த்தை நடக்கிறதா என்ற கேள்விக்கு அவர், "கூட்டணி என்பது ரொம்பவே முக்கியமானது. வெளியே சுற்றும் யூகங்கள் அடிப்படையில் எல்லாம் பதில் சொல்ல முடியாது. இங்கே ஒவ்வொரு வார்த்தைக்கும் விலை தர வேண்டி இருக்கும். நான் பேச வேண்டிய வார்த்தைக்கும் விலை தர வேண்டி இருக்கும். ஓபிஎஸ் பேசும் வார்த்தைக்கும் விலை தர வேண்டி இருக்கும். இது அனைத்து கட்சிகளும் தான். எனவே, யூகத்தின் அடிப்படையில் எந்த கேள்விக்கும் பதில் சொல்ல முடியாது" என்றார்.
வேட்பாளர்கள் அறிவிப்பு எப்போது: தொடர்ந்து லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளர்களை பாஜக எப்போது அறிவிக்கும் என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "இப்போது தான் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இப்போதே வேட்பாளர்களை அறிவித்தால் கூட்டணிக்கு மரியாதையாக இருக்காது. எனவே, கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து முடிந்த பிறகே வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்" என்று அவர் தெரிவித்தார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications