பாகிஸ்தான் ஏவிய டிரோன்களுக்கு பின் உள்ள.. சீனா, துருக்கியின் "மூளை".. அதிர வைக்கும் தகவல்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்த முயன்ற டிரோன் தாக்குதல்களுக்கு பின் சீனா, துருக்கியின் "மூளை" உள்ளது. இது தொடர்பாக அதிர வைக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன.

ஜம்மு விமான நிலையம், சம்பா, ஆர்எஸ் புரா, ஆர்னியா உள்ளிட்ட பகுதிகளை நோக்கி பாகிஸ்தானில் இருந்து தாக்குதல்நடத்தப்பட்டு வருகிறது. பாகிஸ்தானில் இருந்து வந்த 8 ஏவுகணைகளை தடுத்து எஸ்400 சுதர்சன் சக்ரா தடுப்பு அமைப்புகள் முறியடித்தது.

பாகிஸ்தானின் 8 ஏவுகணை அடுத்தடுத்து தடுக்கப்பட்டு உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் விமான தளத்தில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றது. இதற்கு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்துள்ளது. இதற்காக multi-layered air defence network முறை தடுப்பு நடவடிக்கை பயன்படுத்தப்பட்டு உள்ளது.

பாகிஸ்தானின் இந்த டிரோன் தாக்குதல்களுக்கு பின் சீனா, துருக்கியின் "மூளை" உள்ளது. பாகிஸ்தானிடம் 6 வகையான டிரோன்கள் மட்டுமே உள்ளன. இந்தியாவை போல பாகிஸ்தானும் "Suicide Drones" ஆயுதங்களை பயன்படுத்தி உள்ளன. இதை loitering munitions என்பார்கள். அதாவது இங்கும் அங்கும் மாறி மாறி மிதந்து சென்று அதன்பின்னர் தாக்கும் ஏவுகணைகள்.

Is Pakistan using drones from China Turkey to retaliate against India

நீங்கள் ஏவுகணை தாக்குதல் வீடியோக்களை பார்த்து இருக்கலாம். அதில் ஒரு டார்கெட் செய்யப்பட்டால்.. அது நேரடியாக சென்று தாக்கும். ஆனால் ஒரு ஏவுகணை பறந்து செல்கிறது. அதில் டார்கெட் கொடுக்கப்படவில்லை. மாறாக பறந்து செல்லும் போதே டார்கெட்டை கண்டுபிடிக்கிறது. இதற்காக அந்த ஏவுகணை இங்கும் அங்கும் நகர்ந்து செல்கிறது. அதாவது அதில் இருக்கும் கேமராக்கள், சென்சார்கள் மூலம் தீவிரவாத கேம்ப் கண்டுபிடிக்கப்படுகிறது. ஒரு ஆள் இல்லாத டிரோன் போல தீவிரவாத கேம்ப்பை இதை கண்டுபிடிக்கிறது. அப்படி கண்டுபிடித்த பின் இந்த ஏவுகணை அங்கே விழுந்து வெடிக்கிறது என்றால் எப்படி இருக்கும். இதுதான் "Suicide Drones".

அதாவது ஒரே சமயத்தில் ட்ரோன் போல பறந்து டார்கெட்டை கண்டுபிடித்து அதன்பின் அங்கேயே விழுந்து ஏவுகணை போல அட்டாக் செய்யும் என்பதால் இதை "Suicide Drones" என்கிறார்கள். பாகிஸ்தானிடம் 6 வகையான டிரோன்கள் மட்டுமே உள்ளன. அதன் லிஸ்ட் இங்கே.

1. Bayraktar TB2
விற்பனை செய்த நாடு: துருக்கி

வகை: நடுத்தர உயர நீண்ட தூரம் தாங்கும் (MALE) ட்ரோன்

திறன்கள்: துல்லியமான வெடிமருந்துகளுடன் ஆயுதம் ஏந்தி செல்லக்கூடியவை. கண்காணிப்பு மற்றும் தாக்குதல் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன

2. விங் லூங் II
விற்பனை செய்த நாடு: சீனா

வகை: நீண்ட தூரம் செல்ல கூடிய ஆயுதம் ஏந்திய ட்ரோன்

திறன்கள்: நீண்ட தூர தாக்குதல், கண்காணிப்பு மற்றும் உளவு பார்த்தல்

3. CH-4 (ரெயின்போ-4)
விற்பனை செய்த நாடு: சீனா

வகை: நீண்ட தூரம் செல்ல கூடிய போர் மற்றும் கண்காணிப்பு ட்ரோன்

திறன்கள்: துல்லிய வழிகாட்டும் ஏவுகணைகள் மற்றும் குண்டுகளை சுமந்து செல்லும்

4. ஷாபர்-II
விற்பனை செய்த நாடு: உள்நாட்டு (பாகிஸ்தானின் உலகளாவிய தொழில்துறை மற்றும் பாதுகாப்பு தீர்வுகள் - GIDS ஆல் உருவாக்கப்பட்டது)

வகை: போர் UAV. நீண்ட தூரம் செல்லாது.

திறன்கள்: வழிகாட்டப்பட்ட வெடிமருந்துகளுடன் உளவு பார்த்தல் மற்றும் போர் திறன்கள்

5. பர்ராக்
விற்பனை செய்த நாடு: உள்நாட்டு (சீன வடிவமைப்புகளை அடிப்படையாகக் கொண்டது)

வகை: ஆயுதம் ஏந்திய UAV

திறன்கள்: கண்காணிப்பு மற்றும் துல்லியமான தாக்குதல்கள்; பாகிஸ்தானின் முதல் ஆயுதமேந்திய UAV

6. அன்கா (சாத்தியமான கையகப்படுத்தல் அல்லது ஆர்வம்)
தோற்றம்: துருக்கி

வகை: நீண்ட தூரம் செல்ல கூடியது.

மேற்கண்ட லிஸ்டில் 6ல் 2 பாகிஸ்தான் உருவாக்கியது. இந்த 2ம் நீண்ட தூரம் செல்ல கூடியது அல்ல. அதேபோல் வலுவான திறன் கொண்டது அல்லது. சிறிய வகை. அப்படி என்றால் பாகிஸ்தான் மீதம் உள்ள 4 டிரோன்களை மட்டுமே பயன்படுத்தி இருக்க முடியும்.

இந்த 4ம் சீனா அல்லது துருக்கி மூலம் உருவாக்கப்பட்டது. சீனா, துருக்கியின் இந்த டிரோன்களைத்தான் இந்தியா அடித்து காலி செய்து நொறுக்கி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+