Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹிட்லர், கோட்சே, ஆளுநர் ரவி.. “தேசபக்தி” அற்றவர்கள் என முத்திரை குத்த நினைப்பது கேவலம்: விசிக தாக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாசிசம் எப்போதுமே யாருக்கு எதிராகப் பாய்கிறதோ அவர்களை தேசபக்தி அற்றவர்கள் என்று முத்திரை குத்துவது வழக்கம். அதுபோன்ற சூழ்ச்சியை ஆளுநர் செய்துள்ளார் என கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார் திமுக எம்.எல்.ஏ சிந்தனைச்செல்வன்.

தமிழ்நாடு சட்டசபையில், இந்த ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட உரையானது ஆளுநரிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டது. அதன்படி இன்று காலை சட்டப்பேரவைக்கு வருகை புரிந்த ஆளுநரை சபாநாயகர் அப்பாவு, செயலாளர் சீனிவாசன் ஆகியோர் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

Is patriotism more by singing the national anthem 2 times? VCK MLA attacks Governor Ravi

சட்டசபைக்கு வந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசின் உரையை முழுவதுமாக புறக்கணித்தார். தேசிய கீதத்தை தொடக்கத்திலும் இறுதியிலும் பாட வேண்டும் என்ற தனது கோரிக்கையை நிராகரிக்கப்பட்டதாக கூறி அவர் உரையை படிக்காமல் அமர்ந்தார். இதை தொடர்ந்து ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்து முடித்தார். இதையடுத்து, தேசிய கீதம் பாடுவதற்கு முன்பாகவே, ஆளுநர் ரவி அவையில் இருந்து வெளியேறினார்.

ஆளுநர், உரையை வாசிக்காமல் புறக்கணித்து, பாதியில் அவையில் இருந்து வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுநரின் செயலை திமுக மற்றும், அதன் கூட்டணி கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. ஆளுநர் ரவி, சட்டமன்ற மரபை மீறிவிட்டதாக சபாநாயகர் அப்பாவு குற்றம்சாட்டினார். திமுக கூட்டணி கட்சித் தலைவர்களும் கடுமையாக ஆளுநரை விமர்சித்துள்ளனர்.

விசிக எம்.எல்.ஏ சிந்தனைச்செல்வன் பேட்டி: விசிக சட்டமன்றக் குழுத் தலைவர் சிந்தனைச்செல்வன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "சட்டசபையில் ஆளுநர் இரட்டை நிலைப்பாட்டுடன் செயல்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசு தயார் செய்த ஆளுநர் உரைக்கு ஆளுநர் இசைவளித்த பிறகுதான் ஆளுநர் உரையாக தட்டச்சு செய்து வழங்கப்படுகிறது. அவர் ஒப்புதல் அளித்த உரைக்கு எதிராகவே அவரே இன்று கருத்துகளை கூறியிருப்பது வியப்பைத் தருகிறது.

Is patriotism more by singing the national anthem 2 times? VCK MLA attacks Governor Ravi

ஆர்.எஸ்.எஸ் சங் பரிவார கும்பலின் கருத்தியல் ஊதுகுழலாக ஆளுநர் செயல்படுகிறார் என்பதற்கு இதுவே சான்று. அவர் ஏற்று இசைவளித்த கோப்பை அவரே மறுத்து அதை அவையில் வந்து சொல்வது விளம்பரம் தேடும் மிக மலினமான செயல். ஆளுநர் ஏன் விளம்பரம் தேடுகிறார் என்பது நம் முன்னால் இருக்கும் மிகப்பெரிய கேள்வி. அதற்கு இன்று விடை கிடைத்துள்ளது.

தேசபக்தி ஆயுதம்: பாசிசம் எப்போதுமே யாருக்கு எதிராகப் பாய்கிறதோ அவர்களை தேசபக்தி அற்றவர்கள் என்று முத்திரை குத்துவது வழக்கம். ஜெர்மனியில் ஹிட்லர், யூதர்களை பலி கொடுப்பதற்கு முன் அவர்கள் தேசபக்தி அற்றவர்கள் என முத்திரை குத்தினார். கோட்சே, காந்தியை படுகொலை செய்தபோது, தேசபக்தியால் இந்தக் கொலையைச் செய்வதாக கூறினார்.

தேசபக்தி என்ற அளவுகோலை வைத்து தமிழர்கள் தேசபக்தி இல்லாதவர்கள் என்ற சித்திரத்தை ஆளுநர் இன்று உருவாக்க முயன்றுள்ளார். இது அருவருக்கத்தக்கது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும் நிறைவாக தேசிய கீதமும் பாடப்படுவது வழக்கம். ஆனால் தேசிய கீதமே பாடப்படாத நிகழ்ச்சியைப் போல ஆளுநர் சித்தரித்திருக்கிறார்.

அருவெறுப்பான அரசியல்: தேசிய கீதத்தை ஒரு முறை பாடுபவர்கள் தேச பக்தி இல்லாதவர்கள் போலவும், இரு முறை பாடுபவர்கள் தான் அதிகமாக தேச பக்தி உடையவர்கள் என்பது போலவும் அவர் பேசியிருப்பது சிறுபிள்ளைத்தனமானது. தமிழர்கள் தேசிய கீதத்தைப் பாட மறுதலிப்பவர்கள், தேச பக்திக்கு எதிரானவர்கள் என்பது போன்ற பொய்யான சித்திரத்தை ஆளுநர் உருவாக்க முயற்சிப்பது சங் பரிவார கும்பலின் அருவெறுப்பான அரசியல்.

தமிழகத்தின் சாதனைகள் மக்களிடம் சென்று சேர்ந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் இந்த நிகழ்ச்சியை ஆளுநர் சீர்குலைத்துள்ளார். அதற்காக சட்டமன்ற வளாகத்தை ஆளுநர் பயன்படுத்திக் கொண்டது அரசியலமைப்பு சாசனத்துக்கு விரோதமானது. தேசிய கீதம் பாடும் வரை பொறுமை காக்காமல் தேசிய கீதத்தையும் அவர் அவமதிப்பு செய்திருக்கிறார்" எனக் காட்டமாக விமர்சித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+