வலை மாறி விழுகுது திமிங்கலம்.. திமுக கூட்டணிக்கு தாவும் "அந்த" கட்சி.. இதெல்லாம் லிஸ்டுலேயே இல்லையே

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கட்சி லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்தி வரும் நிலையில்.. திமுக கூட்டணிக்கு வேறு ஒரு கட்சி தாவும் திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

லோக்சபா தேர்தலுக்காக சிங்கிள் பிளான் ஒன்றை திமுக களமிறக்க உள்ளதாம். அதாவது ஒற்றை இலக்க பிளான். அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை கொடுத்தது போல 10 தொகுதி தரப்படாது. ஒற்றை இலக்கத்தில் 8 தொகுதிகள் வரை மட்டுமே கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

 Is Pudhiya Tamizhagam going to DMK alliance in Lok Sabha election

இன்னொரு பக்கம் விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 1 இடங்கள் மட்டுமே கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் இவர்களுக்கு தலா 2 தொகுதிகள் வழங்கப்பட்டன. இந்த முறை 2 இடங்கள் வழங்கப்படாது. மாறாக ஒரே ஒரு தொகுதி மட்டுமே வழங்கப்படும். காங்கிரஸ் கட்சிக்கு திமுகவின் ராஜ்ய சபா இடங்களில் ஒன்று வழங்கப்படும். மற்றபடி 25 - 30 இடங்களில் திமுக போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

5-7 இடங்கள்தான் கொடுப்போம்.. உங்கள் கட்சியில் தேர்வாக உள்ளவர்களின் லிஸ்டை தயார் செய்யுங்கள் என்று தகவலை காங்கிரஸ் கட்சிக்கு திமுக தெரிவிக்க உள்ளதாம்.

விசிக என்ன கோரிக்கை: லோக்சபா தேர்தல் 2024ல் கூட்டணி வைப்பதற்கு திமுகவிடம் முக்கியமான சில கோரிக்கைகளை விசிக கட்சி வைத்து வருகிறது. அதன்படி இந்த முறை 3 தொகுதிகள் வேண்டும் என்று திமுகவிடம் விசிக கேட்க உள்ளதாம்.

அதேபோல் திமுகவிடம் 3ல் 1 தனி தொகுதி, 2 பொதுத்தொகுதி வேண்டும் என்றும் விசிக கேட்க உள்ளதாம். அதோடு 3லும் பானை சின்னத்தில் மட்டுமே போட்டியிடுவோம் என்றும் அந்த கட்சி கோரிக்கை வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

விசிகவை எப்படியாவது கூட்டணிக்குள் இழுக்க எடப்பாடி பழனிசாமி முயன்று வருகிறார். அதை பயன்படுத்தி திமுகவிடம் இந்த டிமாண்டை வைக்க விசிக முடிவு செய்துள்ளதாம்.

புதிய தமிழகம்: திமுக கட்சி லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்தி வரும் நிலையில்.. திமுக கூட்டணிக்கு வேறு ஒரு கட்சி தாவும் திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்த புதிய தமிழகம் திமுக கூட்டணிக்கு வர காய் நகர்த்தி வருகிறதாம்.

புதிய தமிழகம் ஏற்கனவே பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. அதிமுக கூட்டணியிலும் அக்கட்சிக்கு பெரிதாக சீட்டு கிடைக்காது. பாஜக இந்த கட்சியை வைத்து தென் தமிழ்நாட்டில் பெரிய பிளான் போட்டது. தேவேந்திர குள வேளாளர் வாக்குகளை அள்ள திட்டங்களை வகுத்தது.

இதன் காரணமாகவே மோடி கூட தன்னை நரேந்திரர் - தேவேந்திரர் என்றெல்லாம் பேசினார். ஆனால் கடந்த சட்டசபை தேர்தலில் அது பெரிதாக பலன் அளிக்கவில்லை.

இந்த நிலையில்தான் பாஜக - அதிமுக இரண்டையும் விட்டுவிட்டு மொத்தமாக திமுக பக்கம் ஐக்கியம் ஆகும் திட்டத்தில் புதிய தமிழகம் இருக்கிறதாம். ஆனால் திமுகவோ வெற்றி கூட்டணியை உடைக்கும் எண்ணத்தில் இல்லையாம். இப்போது இருக்கும் வெற்றி கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்தை தவிர கூடுதலாக வேறு கட்சிகளை சேர்க்கும் திட்டம் அந்த கட்சிக்கும் இல்லையாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+