Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பான் எண்ணை வைத்து உங்களுக்கே தெரியாமல் யாரும் கடன் வாங்கியிருக்கிறார்களா? செக் செய்வது எப்படி தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 10 இலக்கங்களை கொண்ட பான் எண் என்பது நிதி சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு மிக மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்த பான் கார்டுகளை பயன்படுத்தி மோசடிகள் எதுவும் நடைபெற்றால் அதனை கண்டுபிடிப்பது எப்படி? அதாவது உங்கள் பான் எண்ணை வைத்து உங்களுக்கே தெரியாம யாரும் கடன் வாங்கியிருக்கிறார்களா என்பதை எப்படி செக் செய்ய முடியும், என்பது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.

பான் கார்டு என்பது மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வரி செலுத்தும் நபரின் அனைத்து பரிவர்த்தனைகளையும் வருமான வரித் துறைக்கு தெரிவிக்க பான் கார்டு உதவுகிறது. வரி கட்டணம், டிடிஎஸ்/டிசிஎஸ், வருமான வரி கணக்கு, குறிப்பிட்ட பரிவர்த்தனைகள் உள்ளிட்டவையும் இதில் அடங்கும்.

is-someone-using-your-pan-card-to-take-loans-heres-how-to-check

பான் கார்டு

ஒருவரின் முதலீடுகள், கடன், தொழில் செயல்பாடுகள் ஆகியவற்றையும் வருமான வரி கணக்குடன் ஒப்பிடுவதற்கு பான் பயன்படுகிறது. அவ்வளவு ஏன்? வாகனம் வாங்குவது / விற்பது, வங்கி கணக்கு தொடங்குவது, கிரெடிட் அல்லது டெபிட் கார்டு வாங்குவது, டீமாட் கணக்கு தொடங்குவது, 50,000 ரூபாய்க்கு மேல் பில் செலுத்துவது, 50,000 ரூபாய்க்கு மேல் வெளிநாட்டு பயணங்களுக்கு செலவிடுவது, மியூச்சுவல் ஃபண்டில் 50,000 ரூபாய்க்கு மேல் முதலீடு செய்வது உள்ளிட்டவற்றிற்கும் பான் கார்டு கட்டாயம் ஆகும்.

எப்படி கண்டறிய வேண்டும்?

நிதி சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் பரிவர்த்தனைகளுக்கு மிக முக்கியமான ஆவணமாக இருக்க கூடிய பான் கார்டு எண்ணை யாரேனும் தவறாக பயன்படுத்தினால் தேவையில்லாத சிக்கல்கள் எழக்கூடும். நமது பான் விவரங்களை யாராவது தவறாக பயன்படுத்தியிருக்கிறார்களா? என்பதை எப்படி கண்டறிய வேண்டும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

* பான் கார்டு எண்ணை சமூக வலைதளங்கள் அல்லது பாதுகாப்பற்ற இணையதளங்களில் பகிர்வதை தவிர்க்க வேண்டும். பான் கார்டு விவரங்களை யாருக்கும் வழங்காமல், அதை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். பான் கார்டு தொலைந்தால், உடனடியாக புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்கவும்.

கிரெடிட் ரிப்போர்ட்

* கடன் அறிக்கையை (credit report) அவ்வப்போது எடுத்து பார்ப்பது பான் கார்டு தவறாக பயன்படுத்தப்பட்டதா என்பதை அறிய உதவும். சிபில், எக்ஸ்பெரியன் ஆகியவற்றை பயன்படுத்தி கிரெடிட் ரிபோர்ட்களை பெறலாம். இவை ஆண்டுதோறும் இலவசமாகவே இந்த கிரெடிட் ரிப்போர்ட்டை வழங்குகின்றன. அவற்றை சரிபார்த்து, நமக்கு பரிட்சயம் இல்லாத கணக்குகள் ரிபோர்ட்டில் இடம் பெற்றுள்ளதா என கவனிக்க வேண்டும்.

* கடன் அறிக்கையில் தவறான கணக்கு எண்கள் அல்லது விண்ணப்பிக்காத கடன்கள் இருந்தால், மோசடி நடைபெற்றுஇருக்க வாய்ப்பு உள்ளது. இத்தகைய பதிவுகளை கண்டறிந்தால், உடனடி நடவடிக்கை எடுப்பது அவசியம் ஆகும்.

பான் கார்டு தொலைந்தால்

* மோசடியான கடன்களை கண்டறிந்தால், அதனை கடன் வழங்கிய நிறுவனம், வங்கி ஆகியவற்றிற்கும், கடன் தகவல் அமைப்புக்கும் தெரிவிக்க வேண்டும். மேலும், சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். மேலும் ஒரு நீங்கள் ஒரு பிரமாணப்பத்திரமும் கடன் மோசடி நடைபெற்றது தொடர்பாக சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.

* உங்கள் பான் கார்டு தொலைந்தால், உடனடியாக பான் அட்டை ரீ பிரிண்ட் கார்டு அப்ளை செய்து பெற்றுகொள்ள வேண்டும். அதன்பிறகு அடுத்த சில மாதங்களுக்கு உங்களின் கிரெடிட் அறிக்கையை அவ்வப்போது செக் செய்வது நல்லது.
* பான் கார்டுடன் இணைக்கப்பட்ட அனைத்து கணக்குகளுக்கும் வலுவான பாஸ்வேர்டுகளை பயன்படுத்த வேண்டும். SMS மற்றும் இமெயில் அலர்ட்களை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்.

ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து

* கடன் அறிக்கையை 3 முதல் 6 மாதங்களுக்கு ஒருமுறை சரிபார்ப்பது நல்லது. குறைந்தபட்சம் வருடத்திற்கு ஒரு முறையாவது சரிபார்க்க வேண்டும். இதனை இலவசமாகவே செய்யும் வாய்ப்புகள் உள்ளன. இதனால், மோசடிகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க முடியும்.பான் கார்டு தொடர்பான தகவல்களை ஆன்லைனில் பார்க்க CIBIL அல்லது Experian போன்ற அமைப்புகளின் இணையதளங்களைப் பயன்படுத்தலாம். அதில் அனைத்து கடன்களின் விவரங்களும் கிடைக்கும்.

யாராவது உங்கள் பான் கார்டைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக கடன் வாங்கினால், உங்களுக்கு உண்மையாகவே தேவைப்படும் போது, கடன்கள் வாங்குவது கடினமாக ஒன்றாக இருக்கும். எனவே, உடனடி நடவடிக்கை எடுத்து உங்கள் நிதி நிலையை பாதுகாக்க வேண்டும். பான் கார்டின் தவறான பயன்பாடுகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பது முக்கியம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+