Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலகிலேயே நம்பர் 1.. இ வாகனங்கள் உற்பத்தியில் முதலிடம் பிடிக்கும் தமிழ்நாடு? இது லிஸ்டுலேயே இல்லையே

Subscribe to Oneindia Tamil

சென்னை: மின்சார வாகனங்கள் உற்பத்தியில் தமிழ்நாடு உலகிலேயே நம்பர் 1 இடத்தை பிடிக்கும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

திமுக ஆட்சிக்கு வந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் அடுத்தடுத்து தமிழ்நாட்டை நோக்கி முதலீடுகள் குவிந்து வருகின்றன. தமிழ்நாட்டில் முதலீடுகளை பெறுவதற்காக முதல்வர் ஸ்டாலின் சில மாதங்களுக்கு முன் வெளிநாடு பயணம் மேற்கொண்டதும், பல்வேறு தெற்காசிய நிறுவனங்களுடன் ஆலோசனை மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. முக்கியமாக 'Made in Tamil Nadu' என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்ததும் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக கடந்த 2 வருடங்களில் ஏகப்பட்ட முதலீடுகள் தமிழ்நாட்டில் குவிந்து உள்ளன. தமிழ்நாட்டில் பெரு நிறுவனங்கள் செய்த முதலீடுகள், ஒப்பந்தங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்

Is Tamil Nadu becoming No 1 Electronic vehicle making in India and all over the world?

2021 மே 2021 முதல் புதிய திமுக அரசு முதல்வர் ஸ்டாலினின் கீழ் பொறுப்பேற்றதில் இருந்து 227 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு உள்ளது. இதுவரை ₹2.6 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை தமிழ்நாடு ஈர்த்துள்ளது. கையெழுத்திட்ட மொத்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், 80% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்கனவே முதலீட்டை உறுதி செய்துள்ளன அல்லது மாநிலத்தில் ஏற்கனவே வேலை செய்யத் தொடங்கியுள்ளன என்று மாநில தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேட்டி ஒன்றிலும் தெரிவித்துள்ளார்.

2024ல் EV, பசுமை ஹைட்ரஜன் மற்றும் ஆட்டோ முதலீடுகளில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளோம். தற்போது, ​​எங்களிடம் அதிக எண்ணிக்கையிலான EV நிறுவனங்கள் உள்ளன, 2024க்கு பிறகு தமிழ்நாடு EV உலகின் தலைநகராக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று மாநில தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேட்டி ஒன்றிலும் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு இ மின்சார தயாரிப்பில் உலகில் டாப் இடத்தை பிடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

மின்சாரத் துறை: முக்கியமாக மின்சார துறையில் தமிழ்நாட்டில் தொடர்ந்து முதலீடுகள் குவிந்து வருகின்றன. சமீபத்தில் 2023-24ம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் கடந்த சில நாட்களுக்கு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போதைய நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் தனது உரையில், தமிழ்நாடு 2 ஆண்டுகளில் அதிகளவிலான தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறது; உலக முதலீட்டாளர் மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரியில் நடத்தப்படும். கடந்த ஆண்டு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட இருசக்கர மின் வாகனங்களில் 46% வாகனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவை. தமிழ்நாடு இ வாகனங்களில் இந்தியாவின் தலைமையிடமாக மாறி வருகிறது என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து இருந்தார்.

கொரோனாவிற்கு பின்பாக 2022ல் தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. 2022ம் ஆண்டு மட்டும் தமிழ்நாட்டில் 1 லட்சம் கோடிக்கும் மேல் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் பொருளாதார ரீதியாக கடுமையான பின்னடைவை சந்தித்த போதும், கொரோனாவிற்கு பின் பல்வேறு மாநிலங்கள் கடுமையாக கஷ்டப்பட்ட போதும் கூட தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிந்துள்ளன.

முக்கியமாக இந்தியாவில் மின்சார வாகனங்களின் உற்பத்தியில் தமிழ்நாடுதான் முன்னிலை வகித்து வருகிறது. ஏற்கனவே ஆட்டோமொபைல் சாதனங்களின் உற்பத்தியில் சென்னைதான் இந்தியாவின் டெட்ராய்டு என்று அழைக்கப்படுகிறது.அந்த அளவிற்கு சென்னை முழுக்க கார், பைக் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில்தான் உலகிலேயே மிகப்பெரிய பைக் உற்பத்தி ஆலையை ஓலா நிறுவனம் கிருஷ்ணகிரியில் அமைத்தது.

ஓலா பைக்: ஓலா பைக் உற்பத்தியும் நடைபெற்று வருகிறது. உலகிலேயே மிகப்பெரிய இருசக்கர மின்சார வாகன உற்பத்தி மையம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 500 ஏக்கர் பரப்பளவில் இந்த இருசக்கர உற்பத்தி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கே உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படும் ஓலா முழுக்க முழுக்க எலக்ட்ரிக் பவரில் இயங்கும் பைக் ஆகும். ஓலாவை தொடர்ந்து இ வாகனங்களின் உற்பத்தி தமிழ்நாடு நோக்கி திரும்ப தொடங்கி உள்ளது. பல்வேறு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இ வாகனங்களை உற்பத்தி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன.

நிசான் நிறுவனம்: இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் ₹5300 கோடி முதலீடு செய்ய நிசான் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது. நிசான் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை விரிவாக்கத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ஏற்கனவே இருக்கும் நிசான் நிறுவன ஆலை விரிவுபடுத்தப்பட உள்ளது. முன்பு உள்ள ஆலையில் எஞ்சின் கார்கள் மட்டுமே உருவாக்கப்பட்டு வந்தன. தற்போது இங்கே புதிய எலக்ட்ரானிக் கார் உருவாக்க ஆலை அமைக்கப்பட உள்ளது.

Is Tamil Nadu becoming No 1 Electronic vehicle making in India and all over the world?

சென்னையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தி செய்ய நிசான் நிறுவனத்துடன் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 5,300 கோடி மதிப்பில் முதலீடு செய்யப்படுவதால் 2,000 பேருக்கு சென்னையில் வேலைவாய்ப்பு உருவாகும். அதோடு ஆர் அண்ட் டி ஆராய்ச்சிகளும் இங்கே மேற்கொள்ளப்பட உள்ளது. இங்கே உற்பத்தி செய்யப்படும் நிசான் எலக்ட்ரிக் வாகனங்கள் உலகம் முழுக்க ஏற்றுமதி செய்யப்படும். நிசானின் எலக்ட்ரிக் வாகனங்கள் சென்னையில் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாக்ஸ்கான்: இந்த நிலையில்தான் ஆப்பிள் நிறுவனமான பாக்ஸ்கான் நிறுவனம் இ மின்சார வாகனங்களை உருவாக்க முடிவு செய்துள்ளது. இதற்காக இந்தியாவில் அந்த நிறுவனம் தொழிற்சாலையை தொடங்க உள்ளது. இது தொடர்பாக தீவிர ஆலோசனைகளை அந்த நிறுவனம் செய்து வரும் நிலையில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடாகவுடன் போட்டி போட்டு தமிழ்நாட்டின் இதன் தொழிற்சாலையை தொடங்குவதற்கான பணிகளை தமிழ்நாடு தொழிற் துறை மேற்கொண்டு வருவதாக அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விரைவில் இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் வாய்ப்புகள் உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+