இது மட்டும் நடந்தா அவ்வளவுதான்.. ஸ்டாலின் திடீர் மீட்டிங்.. அந்த அறிவிப்பு வருகிறதா? அப்போ மாஸ்தான்!
சென்னை: முதல்வர் ஸ்டாலின் நேற்று சிறப்பு செயலாக்க திட்டங்கள் குறித்தும், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்தும் ஆலோசனை செய்தார். இதில் முக்கியமான ஒரு திட்டம் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலின் போது திமுக அறிவித்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்த நிலையில், அதன்படியே சமீபத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.

இது போக பெண்களுக்கு மாதம் ரூ1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டது. அதன்படியே இந்த திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலவர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் இன்னும் நடைமுறைக்கு வராமல் இருந்தது. கடந்த பட்ஜெட்டில் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரவில்லை. பொருளாதார ரீதியாக அரசுக்கு இருக்கும் சில சிக்கலால் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வராமல் இருந்தது. திமுகவின் இந்த தேர்தல் வாக்குறுதி பல்வேறு காரணங்களுக்காக இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.
இந்த உரிமைத் தொகை ஏழ்மையான குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே அளிக்கப்படும் என்றும் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான லிஸ்ட் எடுக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம், தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மட்டும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 2.15 கோடி ரேஷன் அட்டை உள்ளது.
இதில் 80 லட்சம் ரேஷன் கடைகளுக்கு இந்த பணம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் நேற்று சிறப்பு செயலாக்க திட்டங்கள் குறித்தும், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்தும் ஆலோசனை செய்தார். இதில் முக்கியமான ஒரு திட்டம் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.
என்ன பேசினார்?: அதன்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. அரசு ஊழியர்கள் இடையே பழைய ஓய்வூதிய திட்டம் மிக முக்கிய கோரிக்கையாக இருந்து வந்தது. ஆனால் இதை செயல்படுத்த முடியாது என்று முன்பு நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையிலேயே தெரிவித்து இருந்தார்.
பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் கடந்த வருடம் பேசுகையில், தனிநபர் ஒருவருக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் செலவாகிறது. அதேநேரம் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் தனிநபர் ஒருவருக்கு ரூ.50,000 தான் செலவாகிறது. எனவே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமற்றது"என்று தெரிவித்தார்.
அவரின் இந்த பேச்சு அரசு ஊழியர்கள் இடையே பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியது.இந்த நிலையில்தான் தற்போது தமிழ்நாடு நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு தொழிற் சங்கங்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன
இந்த நிலையில்தான் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி தி இந்து ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், இது தொடர்பாக மத்திய அரசு குழு அமைத்துள்ளது. அரசு ஊழியர்களின் நலனில் மாநில அரசு எப்போதும் கவனமாக இருக்கும்.இது தொடர்பாக பலர் எங்களிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தேவையான நடவடிக்கையை நாங்கள் விரைவில் எடுப்போம் என்று தங்கம் தென்னரசு கூறி உள்ளார். அமைச்சர் பிடிஆர் போல பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர மாட்டோம் என்று மறுக்காமல் தங்கம் தென்னரசு அளித்த பதிலால், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில்தான் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications