மத்திய அரசா, மாநில அரசா.. யார் பொறுப்பு? போதைக் கடத்தலில் NO 1 குஜராத்தா? தமிழ்நாடா?
சென்னை: போதைப் பொருள் கடத்தல் அதிகரித்து வருவதற்குக் காரணம் யார்? மத்திய அரசா? மாநில அரசா?
போதை கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் ஜாபர் சாதிக்கை வைத்து பலரது தலைகள் உருள ஆரம்பித்துள்ளன. குறிப்பாக இந்த விவகாரம் திமுகவுக்குப் பெரிய நெருக்கடியாக உருவெடுத்துள்ளது.

ஜாபர் சாதிக் கடத்தல் மூலம் சம்பாதித்த பணம் திரைத்துறைக்குள் அதிகம் புழங்கி வந்ததாகத் தகவல்கள் சொல்கின்றன. இந்த விவகாரத்தால் இயக்குநர் அமீருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பலரும் அவரை டார்கெட் செய்து கேள்விகளைக் கேட்டு வருகின்றன.
குறிப்பாக பாஜக, இந்த விவகாரத்தில் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்த ஒருவருக்கு திமுகவில் எப்படி சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டது என்று கேள்வி எழுப்பி வருகின்றது.
இந்நிலையில், இன்று ஜாபர் சாதிக் விவகாரம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி, செய்தியாளர்கள் சந்திப்பில் சில விமர்சனங்களை முன்வைக்க இருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால், அவர் சாதிக் பற்றி எதையும் பேசாமல் செய்தியாளர்கள் சந்திப்பை 'சைலண்ட்' ஆக முடித்துக் கொண்டுள்ளார் ஆளுநர்.

தேர்தல் நெருங்க நெருங்க இந்த விவகாரம் இன்னும் திமுகவுக்குத் தலைவலி தரும் சமாச்சாரமாக மாறும் என்று சொல்லப்படுகிறது. பாஜக அதற்காக வியூகங்களை வகுத்து வருவதாக அக்கட்சிக்குள் உள்ளவர்கள் சொல்கிறார்கள்.
சில நாள்கள் முன்னதாக தமிழ்நாடு வந்த பிரமர் மோடி, 'தமிழ்நாட்டில் புழங்கும் போதைப் பொருள்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எச்சரித்துவிட்டுச் சென்றுள்ளார்.
அவரது பேச்சு, கட்டாயம் மக்களவைத் தேர்தலில் இந்த விவகாரம் எதிரொலிக்கும் என்பதை உறுதி செய்துள்ளது.

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தைக் கையில் எடுத்து அரசியலாக்கி திமுக கடந்த மக்களவைத் தேர்தல் அதிமுகவுக்கு எதிராகப் பிரச்சாரம் மேற்கொண்டது. அதனால் அரசியல் ரீதியாக திமுகவுக்கு அமோக ஆதரவும் கிடைத்தது.
அதைப்போலவே, ஜாபர் சாதிக் விவகாரத்தைக் கையில் எடுத்து இந்தத் தேர்தலில் திமுகவை வீழ்த்த திட்டம் வகுத்துள்ளது அதிமுக.
அதற்கு முன்னோட்டமாகப் போராட்டங்களையும் நடத்தி உள்ளது. அந்தப் போராட்டத்தில் போது பேசிய கே.பி.முனுசாமி, தமிழ்நாட்டைவிடக் குஜராத்தில்தான் போதைப் பொருள்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதாக பாஜக பக்கம் குண்டை வீசி எறிந்தார்.

மத்திய அரசு இந்த விவகாரத்தில் மாநில அரசைக் குற்றம் சொல்கிறது. மாநில அரசு தங்களின் கட்டுப்பாட்டில் போதை தடுப்பு பிரிவு இல்லை என்று கைவிரிக்கிறது.
திமுக குஜராத்தான் போதைக் கடத்தலில் முதலிடம் என்கிறது. பாஜக, போதைப் பொருள்கள் கடத்தலில் சிக்கிய ஜாபர் சாதிக் பின்னால் திமுக உள்ளது என்கிறது. இதைக் கேட்கும் மக்கள் யார்தான் இதற்குப் பொறுப்பு என்ற சந்தேகம் எழலாம். உண்மையில் இதற்கு யார் பொறுப்பு?
"இதற்கு மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்துதான் பொறுப்பு. அதைத்தாண்டி Narcotics Control Bureau என்ற சுயேச்சையான அமைப்பு உள்ளது. இது மத்திய அரசின் கீழ் வரும் துறைதான். ஆனால். அனைத்து அரசுகளுடன் இணைந்து தான் இது செயல்படுகிறது.

தேர்தலை மனதில் வைத்து இந்தப் போதைப் பொருள் விவகாரத்தை அரசியலாக்குகிறார்கள். அது தவறு. Narcotics Control Bureau போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக மிகக் கடுமையாகப் போராடி வருகிறது. அதை நாம் எளிதாகக் குறை சொல்லக் கூடாது" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன்.
கடந்த 2022 ஆம் ஆண்டில் என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் கேரளாவில் அதிகபட்ச மாக 29,257 வழக்குகள் பதிவாகி உள்ளன. பஞ்சாப் 16,831 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா நகரத்தில் தான் அதிகப்படியான வழக்குகள் பதிவாகி உள்ளதாக மத்திய அரசு இறுதியாக வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

அடுத்தாக மகாராஷ்டிராவில் 11,400, உபியில் 10,732, கர்நாடகாவில் 6,884, மத்தியப் பிரதேசத்தில் 6,082, ஹரியானாவில் 5,025 வழக்குகள் எனத் தெரிய வந்துள்ளது.
இந்த விவகாரத்தில் இதுவரை தமிழ்நாட்டில் பெரிய அளவில் குற்றச்செயல்கள் நடைபெற்றதாகத் தரவுகள் இல்லை. அந்த நல்ல பெயரை காலி செய்திருக்கிறது ஜாபர் சாதிக் விவகாரம்.
லட்சங்களில் புழங்கி வந்த தமிழ்நாட்டுப் போதைப் பொருள் சந்தையை சாதிக் சர்வதேச மாஃபியா அளவுக்குக் கொண்டு போய் அவப்பெயரை எடுத்துக் கொடுத்துள்ளார்.

இந்தப் போதைப் பொருள் சந்தைப் பற்றிய சில தரவுகளை அய்யநாதன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவர், ஹெராயின் போதைப் பொருள்கள் கடந்த 2017 முதல் 2021 வரையான மொத்தம் 5 ஆண்டுகளில் மட்டும் 300% அளவுக்குப் போதைப் பொருள் பறிமுதல் அதிகரித்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டி உள்ளார். அதாவது 2017இல் 2146 கிலோ என்ற நிலையில் 2021இல் 7282 கிலோ ஆக அது உயர்ந்துள்ளது என்கிறார்.
அதைப்போல ஓபியம் 2551 கிலோ 2017இல் இருந்துள்ளது. 2021இல் அது 4386 கிலோ ஆக உயர்ந்துள்ளது. அப்படியென்றால் 172% அதிகரித்துள்ளது. கேனபி 3,52539 கிலோ இருந்தது 6,75631 கிலோ ஆக 2021இல் உயர்ந்துள்ளது. இது 191% அதிகரிப்பு என்கிறார் அய்யநாதன்.

இந்தியாவை டார்கெட் செய்து இந்தக் கடத்தல் தொழில் நடைபெறுகிறது. பலரும் கடல் வழியாகப் போதைப் பொருள்கள் இந்தியாவுக்குள் வருவதாக நம்பிக் கொண்டுள்ளனர்.
ஆனால், Director General of Narcotics Control Bureau S.N. Pradhan கொடுத்துள்ள அறிக்கையின் படி அஞ்சல் வழியாகக் கூட அதிக போதைப் பொருள்கள் இந்தியாவிற்குள் வருவதாகச் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்தியாவில் அதிக இளைஞர்கள் உள்ளனர். அந்தச் சந்தையை மையமாகக் கொண்டே இந்தியாவில் போதை கடத்தல் தொழில் அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் பலர் இணையத்தின் மூலம் இதை ஆர்டர் செய்கின்றனர். டார்க் நெட் மூலம் தான் நடக்கிறது. இந்தப் போதைப் பொருட்களைப் பணம் கொடுத்து வாங்க முடியாது. கிரிப்டோ கரன்சி வழியாகத்தான் இந்த இணையத்தில் வாங்கலாம்.

இந்தக் கடத்தல் தொழிலுக்குள் கள்ளப் பணம் அதிகம் புழங்குகின்றன. பண மோசடி நடக்கிறது.
இந்தியாவில் போதைப் பொருள் கடத்தல் என்பது கடல்வழியாக நடக்கின்றன. ஏனென்றால் சுமார் 7700 கிமீட்டர் கடல் பாதையை இந்தியா கொண்டுள்ளது. தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத் என்று மிகப்பெரிய கடல்வழி பாதை உள்ளதால், அதைக் கண்காணிப்பது கடினம்.
சமீபத்தில் குஜராத் கடலுக்கு அப்பால் 3300 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன் மதிப்பு 2200 கோடி. அதற்கு முன் 21000 கோடி மதிப்பிலான பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடல் வழியாகவும் மற்றும் இந்திய ஹிமாலய பகுதிகளிலிருந்துதான் அதிக கடத்தல் பொருள்கள் உள்ளே வருகின்றன.
இது வெறும் போதை கடத்தல் தொழில் சம்பந்தப்பட்டதல்ல, இந்திய இளைஞர்களின் சக்தியைச் சீரழிக்கும் சர்வதேச சதி அதன் உள்ளாக உள்ளது.
ஆகவேதான் அதற்கு Narcotic-Drugs-and-Psychotropic-Substances-Act-1985 என்று வைத்துள்ளார்கள். அதாவது அது உடல்நலத்துடன் மனநலத்தையும் காலி செய்து சைக்கோவாக மாற்றும். ஆகவேதான் சட்டத்திற்கு அதன் பொருள் உணர்ந்து சரியான பெயரை அரசு வைத்துள்ளது.
இந்தோ திபேத்யன் எல்லைக் காவல் படைத் தொடங்கி கன்னியாகுமரி கடற்படை வரை உள்ள அனைவருக்கும் இந்தப் போதைக் கடத்தலை ஒழிக்கும் பொறுப்பு உள்ளது. ஆக, மத்திய அரசா? மாநில அரசா எனத் தலைப்பு வைத்து வாதிடுவதற்கு இது சாலமன் பாப்பையா பட்டிமன்றம் அல்ல.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications