இதெல்லாம் சரிப்பட்டு வராது.. அதிமுகவிற்கு "நோ".. தனி ரூட்டு எடுக்கும் விஜய்.. உருவாகும் அந்த அணி?
சென்னை: அதிமுகவோடு விஜய் கூட்டணி வைப்பாரா என்ற கேள்விகள் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பரவி வந்தது. இவர்கள் இருவரும் கூட்டணி வைத்தால் திமுகவை வீழ்த்த முடியும் என்று வாதங்கள் வைக்கப்பட்டன.
நடிகர் பவன் கல்யாண் ஆந்திர பிரதேசத்தின் துணை முதல்வராக உள்ளார். இதற்கு காரணம் வலிமையான ஜெகன் மோகன் ரெட்டியை அவர் வீழ்த்தியதுதான். அதற்கு தெலுங்கு தேசத்தின் சந்திர பாபு நாயுடு - பவனின் ஜன சேனா கட்சிகள் ஒன்றாக கூட்டணி வைத்தது முக்கிய காரணமாக அமைந்தது.

அந்த பார்முலாவை தமிழ்நாட்டில் விஜய் கொண்டு வரப்போகிறார் என்று தொடக்கத்தில் செய்திகள் வந்தன. அதாவது அதிமுக உடன் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கூட்டணி வைக்கும்.. ஜெகனை வீழ்த்தியது போல ஸ்டாலினை வீழ்த்துவார்கள் என்றெல்லாம் அதிமுகவினர் வாதங்களை வைத்தனர்.
இவர்கள் இருவரும் கூட்டணி வைத்தால் திமுகவை வீழ்த்த முடியும் என்று வாதங்கள் வைக்கப்பட்டன. ஆனால் விஜய் அந்த முடிவில் இல்லை என்று கூறப்படுகிறது. அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் திட்டம் அவருக்கு இல்லை, மூன்றாவது அணியை அமைத்துக்கொள்ளலாம் என்ற முடிவில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது.
விஜய் அமைக்க போகும் மூன்றாவது அணி பற்றியும், அதிமுகவை அவர் ஏன் வேண்டாம் என்று நினைக்கிறார் என்பது பற்றியும் தகவல்கள் வர தொடங்கி உள்ளன.
1. விஜய் தொடங்குவது தனி கட்சி. முதல் தேர்தலிலேயே அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் விஜய் மீது முத்திரை குத்தப்படும்.
2. விஜய்க்கு நெருக்கமான சிலர் அவரிடம் இதை பற்றி பேசி உள்ளனராம். தனியாக நில்லுங்கள் இல்லை தனி கூட்டணி அமையுங்கள் என்று.
3. அதிமுகவுடன் ஏற்கனவே சர்க்கார் சமயத்தில் இருந்தே , அதற்கு முன் தலைவா சமயத்திலும் விஜய்க்கு பிரச்சனை உள்ளது. அதனால் விஜய் அவர்களுடன் செல்ல வாய்ப்பு குறைவாம்.
4. நடிகர் விஜய் ரகசியமாக கூட்டணி பேச்சு வார்த்தைகளை தொடங்கிவிட்டார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை உடைத்து தங்கள் பக்கம் கொண்டு வருவதே அவரின் திட்டம் என்கிறார்கள்.
5. முக்கியமாக விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுகளில் ஒன்றை குறிவைக்கிறார் விஜய் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இவர்களை இழுக்க அதிமுக முயன்றது. ஆனால் அதிமுக எப்போது வேண்டுமானாலும் பாஜகவுடன் சேரலாம். அதனால் பாஜக மீதான அதிருப்தி காரணமாக அதிமுகவையும் இந்த கட்சிகள் புறக்கணித்தன. ஆனால் விஜய்க்கு அப்படி ஒரு பிம்பம் இல்லை. அவர் பாஜகவுடன் நெருக்கமாக இல்லை. பாஜக பக்கம் செல்ல வாய்ப்பு இல்லை.
6. இதனால் விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுகளில் ஒன்றை குறிவைக்கிறார் விஜய் என்று கூறப்படுகிறது. அவர்களிடம் பேசி வருகிறார். ஆனால் இன்னும் அவர்கள் ஓகே சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. விரைவில் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்நாட்டில் கூட்டணி காட்சிகள் மாறலாம்.
7. இவர்கள் இல்லையென்றால் நாம் தமிழரை வைத்து தனி அணியை உருவாக்கும் திட்டமும் விஜய்க்கு உள்ளதாம். ஆனால் யார் முதல்வர் வேட்பாளர் என்ற கேள்வி எழும்.
8. பலரும் . தமிழ்நாட்டில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் + அதிமுக + நாம் தமிழர் கூட்டணி உருவாகலாம் என்று அதிமுக ஆதரவு ஆலோசகர்கள் சிலர் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதை விட திமுக கூட்டணியை உடைப்பதே விஜயின் முக்கிய திட்டம் என்று அவருக்கு நெருக்கமான சிலர் தெரிவிக்கின்றனர்.
-
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
ஓஎஸ் மணியன் ஏமாற்றிவிட்டார்.. சீட் தராததால் அதிமுக சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ கட்சி பதவி ராஜினாமா! -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
அதிமுகவை நம்பி சாத்தூரில் களமிறங்கும் நயினார் நாகேந்திரன்.. கைகொடுக்குமா முக்குலத்தோர் வாக்குகள்? -
எடப்பாடி முதல்வராக கூடாது.. ஓ.எஸ்.மணியன் டார்கெட் அதுதான்.. அதிமுக நிர்வாகியின் பகீர் குற்றச்சாட்டு! -
அதிமுகவுக்கு ஆப்பு வைக்கப் போறாரு விஜய்! இப்பவே உஷாராவது நல்லது! அடித்துச் சொல்லும் ஜெ.வின் நிழல்! -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான் -
ஒரே ஒரு தோட்டா.. காட்டி விடுவேன் டாட்டா.. சமூக விரோதிகளுக்கு சீமான் வார்னிங் -
ஒரு சதுர அடி வெறும் ரூ.4.5.. மொத்தம் 25 ஏக்கர்! சீமான் தன் மனைவிக்கு வாங்கிய சொத்து! இடிக்குதே! -
Land Rover Defender கான்வாயில் வரும் ஸ்டாலின் பெயரில் ஒரு வாகனம் கூட இல்லை! சீமான் சொத்து எவ்வளவு? -
"150 கிராம் தங்கம், ரூ.39 லட்சம் சொத்து.. ரூ.5.11 லட்சம் கடன்.." சீமானின் சொத்து மதிப்பு இதுதான்












Click it and Unblock the Notifications