Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிளான் பக்காவா ரெடி.. டெல்லியில் இருந்து வந்த சிக்னல்.. "குறி" வைத்துவிட்ட பாஜக.. திமுகவில் டென்ஷன்

தமிழக பாஜக அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி செல்கிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் தற்போது பாஜக பயங்கர பிஸியாக இருக்கிறது.. அதன் செயல்பாடுகள், யோசனைகள், அதிரடிகள் என அனைத்துமே மற்ற கட்சிகளை வியக்க வைக்கும் அளவுக்கு உயர்ந்து வருகிறது.. அந்த வகையில் புது அதிரடியை கையில் எடுத்துள்ளதுதான் தற்சமய ஹாட் டாபிக்..!

இந்த முறை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் திமுகவுக்கு எப்படி வரலாற்று வெற்றியோ, கிட்டத்தட்ட அதே அளவுக்கு தங்களுக்கும் வெற்றி என்ற ரீதியில் பாஜக பார்க்கிறது..

காரணம், அதிமுக, மற்றும் கூட்டணி கட்சிகளை தவிர்த்து, தனியே களம் இறங்கி படுதோல்வியை சந்தித்தன.. பல பெரிய கட்சிகள் டெபாசிட்கூட வாங்கவில்லை.

உற்சாகம்

உற்சாகம்

ஆனால் பாஜக, குறிப்பிட்ட இடங்களில் வெற்றி பெற்றது, அக்கட்சிக்கு பலத்தை தந்துள்ளது.. நம்பிக்கையை தந்துள்ளது.. உற்சாகத்தை தந்துள்ளது.. மேலிடத்தில் நன்மதிப்பை தந்துள்ளது.. தனித்து போட்டியிட்டதால் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது... ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளது.. மற்ற கட்சியினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.. வாக்கு எண்ணிக்கை வெளியான அன்று, பிரதமர் மோடியே, தமிழக பாஜக தலைவரை போனில் கூப்பிட்டு நிலவரங்களை கேட்டு பேசியதாகவும், வரப்போகிற எம்பி தேர்தலுக்கும் இதே ஃபார்முலாவை தொடர வேண்டும் என்று அறிவுறுத்தியதாகவும் செய்திகள் கசிந்தன..

 பிரதமர் மோடி

பிரதமர் மோடி

இப்போதும் அந்த வகையில் இன்னொரு சிக்னல் டெல்லியில் இருந்து வந்துள்ளதாம்... சமீப காலமாகவே அதிமுகவுக்குள் உட்கட்சி பூசல் தலைதூக்கி வருகிறது.. சசிகலா வருவாரா? மாட்டாரா? என்பதற்கு இப்போதைக்கு விடை கிடைக்காது போல தெரிகிறது.. இதனால், தொண்டர்கள் டயர்ட் ஆகிவிட்டனர்.. அதிமுக தலைகள் அதிருப்தியால் மோதிக் கொள்வதை பார்த்து, தலையில் கை வைத்து சோர்ந்து போய் உட்கார்ந்துவிட்டனர்.. இதனால் கட்சியின் வளர்ச்சியும் பெரிதாக பாதிக்கப்பட்டு வருகிறது..

 லோக்கல் பாலிட்டிக்ஸ்

லோக்கல் பாலிட்டிக்ஸ்

மேலிடத்தை சமாதானப்படுத்த முடியாமல் 2-ம் கட்ட தலைவர்கள், நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்... இதுபோக, மாஜி அமைச்சர்கள் எப்போது தங்கள் பக்கம் ரெய்டு வரும், திமுக அரசு அடுத்து என்ன செய்ய போகிறதோ என்ற கலக்கத்தில் உள்ளனர். கிட்டத்தட்ட திமுகவிலும் இதே நிலைமைதான் உள்ளது.. மேல்மட்ட அளவில் எந்தவிதமான பெரிய பிரச்சனைகள், புகார்கள் இல்லாவிட்டாலும், லோக்கல் பாலிட்டிக்ஸ் பெருகி வருவதாக தெரிகிறது..

 ஸ்டாலின் விதித்த கெடு

ஸ்டாலின் விதித்த கெடு

குறிப்பாக, மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில், அக்கட்சி அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து, போட்டி வேட்பாளர்கள் களம் இறங்கினர்.. இவர்கள் பல இடங்களில் வெற்றியும் பெற்றனர். ஆனால், இவர்களை ராஜினாமா செய்யும்படி கட்சி தலைமை உத்தரவிட்டது.. சிலர் அப்போதே ராஜினாமா செய்தனர்.. சிலர் மறுத்து இன்னமும் பொறுப்பில் சொல்பேச்சு கேளாமல் உள்ளனர்.. விரைவில் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கெடுவும் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களும் கட்சி தலைமை மீது அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது..

 திமுக ஸ்டாலின்

திமுக ஸ்டாலின்

ஏற்கனவே சீட் கிடைக்காமல் உள்ளவர்கள், திமுக பக்கம் தாவியும் பெரிதாக பதவி கிடைக்காதவர்கள், என பலர் உள்ளதாக தெரிகிறது. இப்படி, அதிமுக, திமுகவில் உள்ள இந்த அதிருப்தி தலைகளை எல்லாம், பாஜக குறி வைத்துள்ளதாம்.. திமுகவின் பல முக்கிய நிர்வாகிகள், அதிமுகவின் மாஜிக்கள் என பலரை கொக்கி போட்டு அலேக்காக தூக்க பாஜக கணக்கு போட்டு வருகிறது.. இருந்தாலும், ஏற்கனவே பிற கட்சிகளில் இருந்து பாஜகவுக்கு சென்ற பிரமுகர்களில் பலருக்கு இன்னும் பதவிகள் பெரிதாக வழங்கப்படாத நிலைமையில், சிலர் பாஜகவில் இணைய தயக்கம் காட்டுவதாக தெரிகிறது..

 டெல்லி மேலிடம்

டெல்லி மேலிடம்

எனவே, மாற்று கட்சியில் இருந்து யார் வந்தாலும் இணைத்து கொள்ள வேண்டும், அவர்களின் தகுதிக்கேற்ப முக்கிய பதவிகள் வழங்க அனுமதி வேண்டும் என்பன உட்பட சில கோரிக்கைகளை மேலிடத்துக்கு, தமிழக பாஜக தரப்பு அனுப்பி வைத்ததாம்.. அதற்குதான் கட்சி மேலிடம் ஓகே சொல்லிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்போது மிக தெம்பாக, மாற்று கட்சியினரை தன் பக்கம் இழுக்க, பாஜக முழு ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது...

 திமுக - அதிமுக

திமுக - அதிமுக

எனவே, அடுத்த சில தினங்களில் அதிமுக, திமுக என இரு கட்சிகளிலும் இருந்து, முக்கிய நிர்வாகிகளும், மாஜிக்களும் பாஜக பக்கமும் எந்நேரமும் தாவக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. திமுக தரப்பில் எப்போது வேண்டுமானாலும் தங்கள் மீது வழக்கு பாயலாம், ரெய்டு நடக்கலாம் என்று கலங்கி கிடக்கும் ஒருசில மாஜிக்கள், பாஜகவுக்கு சென்றால் பாதுகாப்பாக இருக்கலாம் என்று நினைத்தும் தூது படலத்தையும் ஆரம்பித்துள்ளனராம்.. என்ன நடக்க போகிறது என்று தெரியவில்லை.. பார்ப்போம்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+