மிஷன் சக்கஸ்.. சந்திரயான் 3 திட்டத்தின் பிரதான நோக்கமே இதுதான்! விஞ்ஞானி சொன்ன முக்கிய தகவல்
சென்னை: நிலவின் தென் துருவத்தில் இறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ள சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டரும், ரோவரும் தற்போது உறக்க நிலையில் இருக்கிறது. இதனை எழுப்ப விஞ்ஞானிகள் தொடர்ந்து முயன்று வருகின்றனர். இந்நிலையில், இந்த முயற்சி தோல்வியா? வெற்றியா? என்பது குறித்து மத்திய அரசின் விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் விளக்கமளித்துள்ளார்.
நிலவின் தென் துருவத்தில் உள்ள பள்ளத்தாக்குகளில் பல பில்லியன் ஆண்டுகளாக சூரிய ஒளியே படாமல் இருக்கிறது. இந்நிலையில் இங்கு நீர் இருப்பதற்கான சாத்தியங்களை சந்திரயான்-1 விண்கலம் கண்டுபிடித்து சொன்னது. 312 நாட்களாக நிலவை 3,400 சுற்றுகளை சுற்றிய பின்னர்தான் இதை சந்திரயான் 1 உறுதி செய்தது. அதன் பின்னர் நிலவை யார் ஆக்கிரமிக்கப்போகிறார்கள் என்கிற போட்டி தொடங்கியது. இதனையடுத்து நிலவில் ரோவரை இறக்கி அதில் அதன் மூலம் ஆய்வு செய்ய கடந்த 2019ம் ஆண்டு சந்திரயான்-2 திட்டத்தை செயல்படுத்தியது இஸ்ரோ.

ஆனால் இந்த திட்டத்தில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்ப தவறால் நிலவில் தரையிறங்க இருந்த ரோவர் கட்டுப்பாட்டை இழந்து நிலவில் வேகமாக மோதி உடைந்தது. இருப்பினும் இதனை கொண்டு சென்ற ஆர்பிட்டர் தற்போது வரை செயல்பட்டு வருகிறது. எனவே மீண்டும் மற்றொரு ரோவரை அனுப்புவது என்று முடிவெடுத்து சந்திரயான்-3 திட்டம் செயல்படுத்தப்பட்டது.
அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் கடந்த 23ம் தேதியன்று மாலை 6.04 மணிக்கு திட்டமிட்டபடி நிலவில் மெல்ல தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது. விண்வெளி துறையின் முன்னோடியான ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் கூட நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்க முடியாமல் நிலவில் மோதி செயலிழந்த நிலையில், இந்தியாவின் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கி இருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
திட்டமிட்டபடி தனது வேலையை முடித்துக்கொண்ட பிரக்யான் ரோவர், தற்போது உறக்க நிலையில் இருக்கிறது. நிலவில் தற்போது பகல் பொழுது பாதி முடிந்துள்ள நிலையில் இதுவரை லேண்டரையும், ரோவரையும் எழுப்ப மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இந்த முயற்சி தோல்வியில் முடிந்ததாக பலரும் கூறியுள்ளனர். ஆனால் இது தோல்வியில்லை வெற்றிதான் என்று மத்திய அரசின் மூத்த விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தனியார் செய்தி ஊடகத்தற்கு பேட்டியளித்த அவர், "நிலவில் பகல் பொழுதுக்கும் இரவு பொழுதுக்கும் இடையே இருக்கும் வெப்ப வேறுபாடு ஏறத்தாழ 200 டிகிரி செல்சியஸ். பொதுவாக அதிக வெப்பநிலையில் பொருட்கள் விரிவடையும், அதிக குளிரில் பொருட்கள் சுருங்கும் என்பது அறிவியல் விதி. இந்த விதியின் அடிப்படையில்தான் விண்கலத்தில் உள்ள பொருட்களும் பாதிப்படைந்திருக்கின்றன. சீனா போன்ற நாடுகள் அனுப்பிய விண்கலத்தில் இயற்கை கதிரியக்க மின்கலம் (பேட்டரி) பயன்படுத்தப்படுகிறது. எனவேதான் அது ஓராண்டு வரை செயல்படுகிறது.
அதேபோல இந்த ரோவரையும், லேண்டரையும் சந்திரனின் இந்த ஒரு நாள் முடிவதற்குள் எழுப்ப முடியவில்லை என்றால் அடுத்த நாளில் எழுப்ப வாய்ப்பு கிடையாது. இதனை எழுப்ப முடியாததால் இந்த திட்டம் தோல்வியா என்று பலரும் கேட்கின்றனர். இந்த திட்டத்தின் நோக்கம் என்பது நிலவை ஆய்வு செய்வது என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் சந்திரயான் 3 திட்டத்தின் நோக்கம் என்பது சரியான இடத்தில் தரையிறங்குவதுதான். நமக்கு முன்னர் விண்கலனை ஏவிய ரஷ்யாவுக்கும், பின்னர் விண்கலனை அனுப்பிய ஜப்பானுக்கும் இதுதான் நோக்கம்.
இதற்கு முன்னரும் பல நாடுகள் நிலவில் விண்கலத்தை தரையிறக்கியுள்ளன. ஆனால், அப்போது பின்பற்றப்பட்ட தொழில்நுட்பம் வேறு. இப்போது செயல்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பம் வேறு. பிற்காலங்களில் நிலவில் குடியிருப்புகள் உருவானால் அங்கு பொருட்களை கொண்டு செல்ல சரியான தொழில்நுட்பம் அவசியம். அதைதான் இஸ்ரோ முயன்று பார்த்திருக்கிறது. குறிப்பிட்ட இடத்தில் திட்டமிட்டபடி பாதுகாப்பாக தரையிறங்குவதுதான் சந்திரயான் 3 திட்டத்தின் முழு நோக்கம்.
இது 100 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது. அதற்கு நாம் நடத்திய ஆய்வுகள், அதில் கிடைத்த தகவல்கள் எல்லாம் போனஸ்தான். அந்த வகையில் சந்திரயான் 3 திட்டம் வெற்றிதான்" என்று கூறியுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications