10 வயதில் இருந்தே குடிக்கும் இளம் கூட்டம்.. அரசாங்கம் மட்டுமே பொறுப்பா? ஆதங்கத்துடன் பேசிய வைரமுத்து
சென்னை: எத்தனை பேருக்கு பீடி வாங்கி வந்து கொடுத்து இருப்பேன்... எத்தனை பேருக்கு சிகரெட் வாங்கி வந்து கொடுத்து இருப்பேன்.. புகைத்தது இல்லையே..ஒழுக்கம் என்பது புறச்சூழல்களால் அமைவது இல்லை, அகச்சூழல்களால் அமைவது ஒழுக்கம் என்று கவிஞர் வைரமுத்து பேசியுள்ளார்.
ஒழுக்கம் என்பது புறச்சூழலால் அமைவது மட்டும் இல்லை. அகச்சூழலால் அமைவது ஒழுக்கம் என்பதை ஆசிரிய பெருமக்களோ.. பெற்றோர்களோ.. எங்கள் பிள்ளைகளுக்கு எப்போது சொல்லி கொடுப்பீர்கள் என்று கவிஞர் வைரமுத்து பேசியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கவிஞர் வைரமுத்து இது தொடர்பாக பேசியதாவது:-

எங்கள் பிள்ளைகளுக்கு கல்வியை கற்றுக்கொடுத்தீர்களே.. காவலை கற்றுக்கொடுத்திருக்கிறீர்களா.. ஒழுக்கத்தை கற்றுக்கொள்வதற்கு.. காத்துக்கொள்வதற்கான காவல் அரண்கள் கட்டப்பட்டுள்ளதா? 10 வயதில் இருந்து தமிழ்நாட்டில் குடிப்பதற்கு கற்றுக்கொண்டுள்ள ஒரு இளம் கூட்டம் உருவானதற்கு யார் பொறுப்பு?.. அரசாங்கம் மட்டுமே பொறுப்பா.. மதுக்கடைகள் மட்டுமே பொறுப்பா..
கள்ளச்சாராயம் காய்ச்சுகிறவர்கள் ஊரில் தான் நாங்கள் எல்லாம் வாழ்ந்து வந்தோம்.. அந்த பக்கம் திரும்பாமல், அதனை பார்க்காமல் வாழ்ந்து வந்தோம். எத்தனை பேருக்கு பீடி வாங்கி கொடுத்திருப்பேன்.. எத்தனை பேருக்கு சிகரெட் வாங்கி கொடுத்திருப்பேன்.. எத்தனை பேருக்கு என் உறவினர்களுக்கு சுருட்டு வாங்கி கொடுத்திருப்பேன்.. ஆனால் நாங்கள் புகைத்தது கிடையாதே..
அப்படியானால், ஒழுக்கம் என்பது புறச்சூழலால் அமைவது மட்டும் இல்லை. அகச்சூழலால் அமைவது ஒழுக்கம் என்பதை ஆசிரிய பெருமக்களோ.. பெற்றோர்களோ.. எங்கள் பிள்ளைகளுக்கு எப்போது சொல்லி கொடுப்பீர்கள். நான் மிக மிக வருத்தப்படுவது கிராமப்புற வாழ்க்கையிலும், நகர்ப்புற வாழ்க்கையிலும் குடியின் பெருக்கம் மனித வாழ்வை தின்றுகொண்டிருக்கிறது என்பது தான். மேல்நாட்டுக்கும் நம் நாட்டுக்கும் ஒரு வேறுபாடு இருக்கிறது பெரியவர்களே.
மேல் நாட்டில் குடிக்காதவர்கள் இல்லை. மேல் நாட்டில் குடி ஒரு குற்றம் இல்லை. மேல் நாட்டில் குடி என்பது உணவு பழக்க வழக்கங்களில் ஒன்றாகி விட்டது. கொஞ்சம் சான்விச், கொஞ்சம் ரொட்டி, கொஞ்சம் இறைச்சி, ஒரு முட்டை, ஒரு விஸ்கி அல்லது ஒரு பிராந்தி, ஒரு பீர் என்பது அங்கு சராசரி உணவு. இட்லிக்கு சட்னி சாம்பார் தொட்டுக்கொள்வது போல.. ஆனால் என்ன வேறுபாடு இருக்கிறது என்றால், மேல்நாட்டில் மதுவை அவன் குடிக்கிறான்..
ஆனால் நம் நாட்டில் மது மனிதனை குடிக்கிறது. நம் நாட்டில் மது மனிதர்களுக்கு திரவமாகிவிடுகிறது. உடம்பில் இருந்து இரத்தத்தை வெளியேற்றி விட்டு மதுவை உள்நிறுத்திக்கொள்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. 14.6 விழுக்காடு தமிழர்கள் மது குடிக்கிறார்கள் என்று சொன்னால் இதை நான் எங்கு போய் சொல்லி அழுவது. நான் அரசாங்கத்திற்கு விரோதமாகவோ.. ஆதரவாகவோ பேசவில்லை.
மதுவுக்கு விரோதமாக சமூகத்துக்கு சார்பாக பேசுகிறேன். மதுவுக்கு விரோதமாக பேசுவதும், சமூகத்துக்கு சார்பாக பேசுவதும் ஒரு படைப்பாளியின், ஒரு கவிஞனின், ஒரு எழுத்தாளரின் தன்னை வளர்த்த சமூகத்திற்கு அவன் செய்யும் கடமையாகிறது. 14.6 சதவிகிதம் தமிழக மக்கள் குடிக்கிறார்கள் என்றால் இதனை எங்கே போய் சொல்லி தொலைப்பது. இந்தியாவில் 7 பேரில் ஒருவர் குடிக்கிறார்.
2014-ல் தமிழ்நாட்டில் மது விற்ற தொகை 3 ஆயிரத்து 649 கோடி ரூபாய். 20222, 2023 -ல் 44 ஆயிரம் கோடி ரூபாய். சின்ன பையன்கள் எல்லாம் செத்துப்போயிக்கொண்டிருக்கிறார்கள்.. 40 வயதில் பல பேரை காணவில்லை. 50 வயதுக்கு மேல் பலபேர் கண்ணுக்கு தென்படுகிறீர்கள் என்றால் நீங்கள் எல்லாம் மதுவை தொட்டு பார்த்திருக்க மாட்டீர்கள். எந்த உலகத்திற்கு சென்றாலும் தமிழனுக்கு ஒரு தனி அடையாளம் உண்டு.
இந்த குடி தான் விபத்துக்களை உண்டாக்குகிறது. இந்த குடிதான் தற்கொலைகளை உண்டாக்குகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் தற்கொலைகள் அதிகமாக நடக்கிறது. உலகத்தில் ஜப்பானுக்கு அடுத்தப்படியாக இந்தியா இருக்கிறது. ஆனால் இந்தியாவில் தமிழ்நாடு என்று கருதப்படுகிறது போது விபத்துக்களுக்கும் தற்கொலைகளுக்கும் காரணம் இந்த குடி தான்.
தன்னம்பிக்கையோடு வளர வேண்டும். வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும். எதிர்கொண்டு வாழ வேண்டும். அந்த உணர்ச்சியோடு நீங்கள் வாழ வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்கு வழங்கப்பட்ட தொகை குறைவு தான். எண்ணிக்கையும் குறைவு தான். என் அறக்கட்டளை வளர வளர இந்த மண்ணுக்கு நான் வழங்குகிற உதவிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பேன்.
எண்ணிக்கையை மட்டுமல்ல. தேனி மாவட்டத்துக்கு மட்டும் இந்த நிதியை வைத்திருக்கிறேன். இதை மெல்ல மெல்ல தென் மாவட்டங்களுக்கு நீட்டிப்பேன். பிறகு தமிழ்நாட்டுக்கு நீட்டிப்பேன். எனக்கு பிறகும் என் பிள்ளைகள் இந்த பணியை தொடர்வார்கள் என்ற உத்தரவாதத்தை நான் உங்களுக்கு கொடுக்கிறேன். இவ்வாறு வைரமுத்து பேசினார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications