என்னது சாக்லேட்டில் தலைமுடி கலக்கப்படுகிறதா? பகீர் கிளப்பிய வீடியோ! விளக்கமளித்த மிஸ்டர் ஜி.கே

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகம் முழுவதும் சாக்லேட் விரும்பி சாப்பிடக்கூடிய பொருளாக மாறியுள்ள நிலையில், இது தலை முடியிலிருந்து தயாரிக்கப்படுகிறது என வீடியோ ஒன்று பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இது உண்மையா? இதற்கான ஆதாரங்கள் இருக்கின்றனவா? என்பது குறித்து பிரபல யூடிபரான Mr.GK விளக்கமளித்துள்ளார்.

சாக்லேட்டுக்கு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. முதன் முதலில் இந்த சாக்லேட் ஒரு பானமாகதான் அறிமுகப்படுத்தப்பட்டது. கோகோ விதைகளிலிலிருந்து உருவாக்கப்பட்ட இந்த சாக்லேட்டை குடிப்பதன் மூலம் பாலுணர்வு அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டதால் அப்போது பணம் வைத்திருந்தவர்கள் இதனை விரும்பி சாப்பிட்டனர். இப்படியாக தொடங்கிய சாக்லேட்டின் பயணம் 18ம் நூற்றாண்டில் பரிணாமம் அடைந்தது. அதாவது, இந்த சாக்லேட்டுடன் இனிப்பு சேர்க்கப்பட்டது.

 Is the L-cysteine found in chocolate derived from human hair? Explanation given by YouTuber Mr. G.K

அவ்வளவுதான் சாக்லேட்டின் வளர்ச்சி விண்ணை எட்டியது. பொதுவாக சாக்லேட் குறித்து பேசப்படும் போது அதன் கசப்பான பின்னணி மறைக்கப்படுவது வழக்கமாகும். இப்போதும் ஆப்பிரிக்க நாடுகளில் சாக்லேட் தயாரிக்க பயன்படும் மூலப்பொருளான கோகோ விதைகளை சேகரிக்க குழந்தை தொழிலாளர்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றனர் என்பதுதான் இந்த பின்னணி. ஆனால் தற்போது இதையெல்லாம் பேசாமல் மற்றொரு விஷயம் ஒன்று வீடியோவாக ஷேராகி வருகிறது.

அதில் பிரபல யூடியூபர் ஒருவர் சாக்லேட் தயாரிக்க L-cysteine எனப்படும் வேதிப்பொருள் மிகவும் இன்றியமையாது என்றும், அது மனித முடிகளிலிருந்துதான் எடுக்கப்படுகிறது என்றும் கூறியுள்ளார். திருப்பதி கோயிலில் காணிக்கையாக செலுத்தப்படும் மனித முடியை சாக்லேட் தயாரிக்கும் நிறுவனங்கள் வாங்குவதாகவும் கூறியிருந்தார். இந்த வீடியோ அதிக அளவில் ஷேர் ஆகியிருந்த நிலையில், இது குறித்து பலரும் கேள்வியெழுப்பியிருந்தனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் உள்ள உண்மை குறித்து பிரபல யூடிபரான Mr.GK விளக்கமளித்துள்ளார்.

அதில், "L-cysteine எனப்படும் வேதிப்பொருளை இந்தியாவில் இருக்கும் அனைத்து சாக்லேட் நிறுவனங்களும் பயன்படுத்துவதில்லை. ஒரு சில நிறுவனங்கள்தான் அதனை பயன்படுத்துகிறது. சாக்லேட் குறிப்பிட்ட வடிவம் பெறுவதற்கும், சுவையை அதிகரிப்பதற்கும் இது உபயோகப்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த சேர்க்கையின் அளவு மிகவும் குறைவாகதான் இருக்கும். ஒரு கிலோ சாக்லேட்டில் வெறும் 90 மில்லி கிராம்தான் L-cysteine சேர்க்கப்படுகிறது.

கடந்த 1950களில் சாக்லேட்டின் சுவையை கூட்ட என்னென்ன சேர்க்கலாம் என்று ஆய்வு நடத்தப்பட்டபோது இந்த L-cysteine-ஐ சேர்த்தால் சுவை கூடும் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. சரி இந்த L-cysteine-ஐ எங்கிருந்தெல்லாம் எடுக்க முடியும் என்று தேடப்பட்டபோது, அது கோழியின் இறகிலும், மனிதனின் முடியிலும், சில வகை தாவரங்களிலும் இது இருப்பது தெரிய வந்தது.

இதில் எதிலிருந்து எளிமையான முறையில் L-cysteine-ஐ பெறமுடியும் என்று ஆய்வு நடத்தியபோது செயற்கை ரசாயனங்களை சேர்த்து நொதித்தல் முறை மூலம் பெறப்படும் L-cysteineதான் மிகவும் எளிய முறையில் கிடைத்தது. அதேபோல, இதை தயாரிக்க ஆகும் செலவும் கம்மி. எனவே சாக்லேட் நிறுவனங்கள் இதன் மூலம் L-cysteine-ஐ பெற்று அதனை தங்களது சாக்லேட்டில் சேர்த்துக்கொண்டது. பிரபல யூடியூபர் சொல்வதை போல மனித முடியிலிருந்து L-cysteine-ஐ எடுக்க வேண்டும் எனில் அதற்கு மிகவும் சிரமப்பட வேண்டும்.

1 டன் மனித முடியிலிருந்து வெறும் 100 கி.கி L-cysteineதான் பெறமுடியும் என்பதால் இதனை சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்கள் கைவிட்டனர். இதயும் மீறி அவர்கள் மனித முடியிலிருந்தோ அல்லது கோழியின் இறகிலிருந்தோ இந்த L-cysteine-ஐ எடுத்து சாக்லேட் தயாரிப்பில் பயன்படுத்தினால் அதிலிருந்து வரும் துர்நாற்றத்தை சமாளிக்க மேலும் கூடுதல் ரசாயனங்களை சேர்க்க வேண்டி இருக்கும். எனவே L-cysteine-ஐ எடுத்து சாக்லேட் தயாரிப்பில் பயன்படுத்துவதை தவிர்க்க இதுவும் ஒரு காரணமாகும்" என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோவுக்கு அடுத்து சாக்லேட்டில் L-Cysteineதான் கலக்கப்படுகிறது என்று கூறியிருந்ததை யூடியூபர் சில ஆதாரங்களை வெளியிட்டிருந்தார். அதேபோல இவருக்கு அதரவாக மற்றொரு பிரபல யூடியூபர் பாரிசாலனும் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். ஆனால் இந்த இரண்டு வீடியோக்களிலும் சாக்லேட்டில் L-Cysteineதான் கலக்கப்படுகிறது என்பதற்கு ஆதாரம் இல்லை என்று Mr.GK தெளிவாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+