ஒரு டிக்கெட்டை ரூ.2000க்கு விற்பவர் தான் நாட்டை பாதுகாக்க போறாரா? விஜயை விளாசிய அமைச்சர் அன்பரசன்
சென்னை: ஒரு படத்துக்கு ரூ.200 முதல் ரூ.250 கோடி சம்பளம் வாங்கி கொண்டு இலவசமாக டிக்கெட் கொடுக்காமல் ஒரு டிக்கெட்டை ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்பவர் வந்து தான் நாட்டை பாதுகாக்க போகிறாரா? என அமைச்சர் தாமோ அன்பரசன் விஜயை மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்து வருகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம்
மாங்காடு நகர திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. இதில் சிறு, குறு, குடிசை தொழில்துறை அமைச்சர் தாமோ அன்பரசன் கலந்து கொண்டார்.

இந்த வேளையில் திமுகவை கட்டமைப்பது, நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் பற்றி அவர் பேசினார். மேலும் திமுக இளைஞர் அணியில் அதிகமான இளைஞர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
இந்த மேடையில் அமைச்சர் தாமோ அன்பரசன் பேசும்போது நடிகர் விஜயை கடுமையாக விமர்சனம் செய்தார். விஜயின் பெயரை சொல்லாமல் அவர் விஜய் மீது விமர்சனங்களை முன்வைத்தார். இதுதொடர்பாக தாமோ அன்பரசன் பேசும்போது கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் வாங்க காரணம் என்னவென்றால் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே தேர்தல் பணியை தொடங்கியது தான். தேர்தல் பணியை திட்டமிட்டு செய்ததால் வெற்றி பெற்றோம்.
தற்போது ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள்தான் ஆவதுபோல் உள்ளது. ஆனால் மூன்றரை ஆண்டுகள் சென்றுவிட்டது. ஒரு படத்திற்கு ரூ.200 முதல் ரூ.250 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்கள். படம் ரிலீஸ் ஆகும் போது இலவசமாக டிக்கெட் கொடுக்க வேண்டும். ஆனால் ரசிகர்களுக்கு 2 ஆயிரத்திற்கு டிக்கெட் விற்கிறார்கள். இவர்களல் எப்படி நாட்டை பாதுகாத்திட முடியுமா?.
விஜய் போன வருஷத்தில் இருந்துதான் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசு கொடுத்து வருகிறார். நாம் 15 ஆண்டுகளாக கொடுத்து வருகிறோம். கட்சி ஆரம்பிக்க போவது தெரிந்து தான் ஒரு ஆண்டாக இதனை கொடுத்து வருகிறார். நாட்டிலேயே 75 வயதான கட்சி நமது திமுகதான். இந்தியாவிலேயே திமுகவை தவிர வேறு எந்த கட்சியும் இந்த பெருமையுடன் இல்லை. பாஜகவும், காங்கிரசும் தேசியக் கட்சிகள் தான்'' எனக்கூறினார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி உள்ளதோடு கட்சி கொடியை அறிமுகம் செய்துள்ளார்.கட்சியின் முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அனுமதியை தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கோரப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் திமுகவினர் தற்போது தொடர்ச்சியாக நடிகர் விஜய் மற்றும் அவரது கட்சியை மறைமுகமாக விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர். அந்த வகையில் தான் அமைச்சர் தாமோ அன்பரசனும் நடிகர் விஜயை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
-
யார் திட்டத்திற்கு யார் ஸ்டிக்கர் ஒட்டறது.. நிதி ஆயோக் கூட்டம்.. விஜய் மீது உதயநிதி விமர்சனம் -
அம்மா கொடுத்த அனுமதி.. ரஜினியை போல் விஜய்யும் எனக்கு நெருக்கம்.. ராகவா லாரன்ஸ் சொன்ன வார்த்தை! -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
அமைச்சரவையில் இடம்.. இதனால்தான் விஜய்யை ஆதரித்தோமா? ஐயுஎம்எல் காதர் மொய்தீன் விளக்கம்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
Z பாதுகாப்பை கூட நம்ப மாட்டார்? விஜய் நம்பும் ஒரே ஆள் நயீம் மூஸா! முதல்வரின் இடது கை! யார் இவர்? -
சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு அப்போ பவரே இல்லையா.. வழக்கு போட முடியாது! விசாரிக்கவும் முடியாதாம்! -
“சாக்கு போக்கு சொல்லக்கூடாது”.. விஜய் பிறந்தநாளையொட்டி தவெக தொண்டர்களுக்கு அமைச்சர் ஆனந்த் அட்வைஸ்! -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
எம்ஜிஆர் பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு வெள்ளி வாள் வழங்கி தரிசனம் -
வருகிறது சென்னை டூ கன்னியாகுமரி HSR ரயில்.. விஜய் பிடித்த பாயிண்ட்.. மோடி மீட்டிங்கில் செம சம்பவம்! -
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. ஜூன் 15ல் நீதிமன்றத்தில் விசாரணை.. அடுத்தது என்ன?












Click it and Unblock the Notifications