விழிபிதுங்க வைத்த விலைவாசி.. ரேஷனில் வரும் அதிரடி மாற்றம்.. மக்களை மயக்கும் "மளிகை பேக்கேஜ்"
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் சமயங்களில் கொடுப்பது போல இந்த முறை மளிகை பேக்கேஜ் வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
எல்லா வருடமும் பொங்கல் சமயத்தில் அரசு சார்பாக சிறப்பு பரிசு பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம். அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் இந்த பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படியே கடந்த வருடமும் பொங்கலுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்ட பரிசு பொருட்கள் கடந்த வருடம் வழங்கப்பட்டது. அதோடு வழங்கப்படாத மற்ற பொருட்களுக்காக 1000 ரூபாய் பணம் வழங்கப்பட்டது. கரும்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கரும்பு விநியோகம் செய்யப்படவில்லை. 1000 ரூபாய் பணம் வழங்கப்படுவது மக்கள் இடையே வரவேற்பை பெற்றது.
மொத்தம் 21 பொருட்கள் அடங்கிய பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது விலை ஏற்றத்திற்கு இடையில் இதேபோன்ற மளிகை பேக்கேஜ் வழங்கப்பட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதன்படியே தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் சமயங்களில் கொடுப்பது போல இந்த முறை மளிகை பேக்கேஜ் வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
மிளகாய் தூள், தக்காளி, வெங்காயம், டீ தூள், பருப்பு வகைகள் என்று அனைத்தின் விலையும் அதிகரித்து உள்ளதால் எல்லா பொருட்களும் அடங்கிய பேக்கேஜ் வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன. தமிழ்நாட்டில் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அபரிமிதமாக அதிகரிக்கத் தொடங்கிய தக்காளியின் விலை, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் ₹100ஐ எட்டியது.
ஜூன் 12ம் தேதி கிலோ ₹20 ஆக இருந்தது. அதுவே தற்போது வேகமாக உயர்ந்து ஒரு கிலோவுக்கு ₹100 என்ற விலையில், தக்காளியின் விலை இப்போது சந்தையில் விற்கப்படுகிறது. கலர் பெல் பெப்பர்ஸ் மற்றும் ப்ரோக்கோலி போன்ற வெளிநாட்டு காய்கறிகளை விட தக்காளி விலை அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக தற்போது ரேஷன் கடைகளில் கூட தக்காளி விற்கும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இன்று முதல் தமிழ்நாடு முழுக்க ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்பட உள்ளது. சென்னையில் மட்டும் 90 ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் தக்காளி விலை உயர்விற்கு இடையில் தற்போது துவரம் பருப்பின் விலையும் உயர்ந்து உள்ளது. தக்காளி இல்லாமல் கூட தமிழ்நாட்டில் குடும்பம் நடத்திவிடலாம். ஆனால் துவரம் பருப்பு மிகவும் அவசியம். அதிலும் சைவம் சாப்பிடுபவர்களுக்கு துவரம் பருப்பு மிக முக்கிய புரத சத்து கொடுக்கும் பொருள்.
அதன் விலையும் உயர்ந்துள்ளது. துவரம் பருப்பின் விலை ஒரு கிலோ ரூ.140 முதல் ரூ.170 வரை விற்பனையாகிறது. கடந்த வாரம் 70-90 ரூபாய்க்கு விற்ற பருப்பு தற்போது 50-60 ரூபாய் வரை உயர்ந்து உள்ளது. அண்டை மாநிலங்களில் விளைச்சல் கம்மியாக இருப்பதால் பருப்பு விலை உட்பட மளிகை பொருட்களின் விலை உயர்ந்து உள்ளது. இந்த நிலையில்தான் ஏற்கனவே ரேஷனில் வழங்கப்படும் தக்காளி, துவரம் பருப்புடன் சேர்த்து மற்ற மளிகை பொருட்கள் ரேஷனில் வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications