Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஸ்வகர்மா குலத்தொழில் திட்டமா? யார் கருத்து சரி? யார் என்ன சொன்னார்கள்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நடைமுறைப்படுத்த மாட்டோம் என அறிவித்துள்ள நிலையில், அதைப் பற்றிய யார் யார் என்ன கருத்துகளை முன்வைத்தார்கள்? அது என்ன?

கடந்த ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி பிரதமர் மோடியால் 'விஸ்வகர்மா யோஜனா திட்டம்' அறிமுகம் செய்யப்பட்டது. அதற்காக 2023-24 நிதியாண்டு முதல் 2027-28 வரை ஆக மொத்தம் 5 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.13,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டும் வருகிறது.

vishwakarma yojana mk stalin

இந்தத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தாது என்று முதல்வர் ஸ்டாலின் இப்போது அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "சாதிய அடிப்படையிலான தொழில்முறையை வலுப்படுத்தும் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தைத் தற்போதைய வடிவில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது. குலக் கல்வித் திட்டத்தை எதிர்த்து வென்ற தலைவர்களின் கொள்கை வாரிசுகளான நாங்கள், குலத் தொழில்முறையை ஊக்குவிக்கும் திட்டங்கள் எந்த வடிவில் வந்தாலும் ஆதரிக்க மாட்டோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் கைவினை கலைஞர்களின் ஊக்குவிக்கவும் கைவினைப் பொருட்களை மதிப்புக் கூட்டி அதை மேம்படுத்தவும் மத்திய அரசு இதனைச் செயல்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த ஒரு வருடம் முன்பாக இந்த விஸ்வகர்மா யோஜனா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டபோதே அதைக் கடுமையாகக் கண்டித்திருந்தார் திருமாவளவன். "இது மீண்டும் குலக் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்ற முயற்சி. இது விருப்பம் உள்ளவர்கள் விரும்புகின்ற தொழிலைக் கற்றுத்தருவதற்காகத் திட்டம் இல்லை. பரம்பரைப் பரம்பரையாகச் செய்து வருகின்ற குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 18 வயது நிரம்பியதும் கடனுதவி அளித்து குலத் தொழிலைச் செய்வதாகாது. அதை அரசே வெளிப்படையாக அறிவித்துள்ளது" என்று கூறியிருந்தார்.

அதேபோல், திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள்மொழி, "ஒரு பிள்ளை 18 வயதில் படித்து முடித்ததும் கல்லூரி மேற்படிப்பைத் தொடங்க தமிழக அரசு மாதம் 1000 ரூபாய் வழங்குகிறது. அவர்கள் விரும்பிய படிப்பை எங்கும் படிக்கலாம். அதற்குத் தடை இல்லை. ஆனால், விஸ்வகர்மா திட்டம் 18வயது முடிந்ததும் குடும்பத் தொழிலைச் செய்யக் கடனுதவி அளிக்கிறது. அது குலத்தொழில் இல்லாமல் வேறு என்ன? இதைத் தட்டிக்கேட்டும் ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான்" என்று பேசி இருக்கிறார்.

கடந்த ஆண்டு பிரதமர் தனது பிறந்தநாளில் இத்திட்டத்தைத் தொடங்கும் போதே தமிழ்நாட்டில் அதைக் குலத் தொழில் திட்டம் என அழைப்பதை தமிழிசை செளந்தரராஜன் கண்டித்து இருந்தார். அது தவறாகத் திரித்துச் சொல்லப்படுகிறது என்றும் அத்திட்டத்தில் எத்தனைவிதமான தொழில்கள் அழிந்து வருகின்றன என்பதைப் பற்றி ஒரு பட்டியல் போடப்பட்டுள்ளது. அது குறித்து மோடி சிந்தித்திருக்கிறார். ஆகவே, அந்தத் தொழிலாளர்கள் தங்களின் கட்டமைப்பை உருவாக்க வேண்டித்தான் இந்தக் கடனுதவி திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார் என்று பேசி இருந்தார்.

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, "இது சாதியை ஊக்குவிக்கும் திட்டம்தான். ஆனால், சாதியை மீண்டும் இருக்கமாக வைப்பதற்கும் அதிலிருந்து யாருமே வெளியே வந்துவிடக் கூடாது என்பதற்கும்தான் இது கொண்டுவரப்பட்டுள்ளது" என்று அடித்துப் பேசி இருந்தார்.

இந்த விவகாரம் குறித்து ஒரு பத்திரிகையில் அர்ஜுன் சம்பத் நீண்ட கட்டுரையை ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் குடும்பத் தொழிலை, தந்தையின் தொழிலைச் செய்வதன் மூலம் நமது பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு பாதுகாக்கப்பட்டு, மேம்படுத்தப்படுகிறது. நமது பாரம்பரிய தொழில்களை 'குலத் தொழில்' என்று முத்திரை குத்துவதால் நாம் தாழ்வு மனப்பான்மை கொள்ள வேண்டிய அவசியமில்லை. குலத் தொழில் எதுவும் கேவலமானதல்ல. இழி தொழில் என்று எதுவும் இல்லை, செய்யும் தொழிலே தெய்வம்" என்று எழுதி இருக்கிறார்.

vishwakarma yojana mk stalin

இதைப் பற்றி சர்ச்சை உருவான போது இத்திட்டத்தை எஸ்.வி.சேகர் அதை ஆதரித்து இருந்தார். "நாம் அனைவரும் குலத் தொழில்தான் செய்கிறோம். என் அப்பா நடிகர். நான் ஒரு நடிகன். என் மகன் ஒரு நடிகர். நாங்கள் குலத் தொழில்தான் செய்கிறோம். அதில் என்ன அசிங்கம் இருக்கிறது. நீங்கள் சேட்டுக்கடைகளில் யார் இருக்கிறார்கள்? ஒரு சேட்டு மகன்தான் இருக்கிறார். ஒரு ஜவுளிக்கடையில் ஒரு முதலாளியின் மகன் தான் நிர்வகிக்கிறார்.

ஆனால், செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன் செருப்புதான் தைக்க வேண்டும் என சொல்லக்கூடாது. அவன் பையனுக்கு உண்டான வாய்ப்பை கொடுக்கவேண்டும். அவனைப் பெரிய அளவில் உயர்த்த வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ஜீன் என்று ஒன்று உள்ளது. ஒரு டாக்டர் மகன் டாக்டராகவே வர முயற்சி செய்வான். வக்கீல் மகன் வக்கீலாக வரவே முயற்சி செய்வான்" என்று பேசி இருந்தார்.

vishwakarma yojana mk stalin

திகவை சேர்ந்த மதிவதனி, "சாதியை ஒழிப்பது, சாதி சார்ந்த பழமை வாதத்தை ஒழிப்பது என்பது ஒரு அரசின் கடமை. மக்கள் நலனுக்காகத்தான் அரசு. இந்த விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை மத்திய அரசுதான் கொண்டுவந்துள்ளது. இந்தத் திட்டம் எதற்காகக் கொண்டு வந்துள்ளோம் என்பதற்காக விளக்கத்தை அரசு இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்றால், குரு, சிஷ்யன் பரம்பரை என்ற உறவைப் பலப்படுத்தவே இதைக் கொண்டுவருகிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

பாரம்பரியமாக கற்று வைத்துள்ள குடும்பத் தொழிலை ஊக்குவிப்பதற்காக இதைக் கொண்டு வருகிறோம் என்றும் கூறியுள்ளனர். குடும்பத் தொழில் என்றால் என்ன? அது குலத் தொழிலில் வராதா? அப்படி என்றால் அதன் பெயர் என்ன? என் அப்பா, தாத்தா ஒருதொழிலைச் செய்து வந்தார்கள். அதனால் சமூகத்தில் ஒரு இழிவு ஏற்படுகிறது. அதே தொழிலை நானும் செய்தால் எனக்கும் அதே நிலைதானே வரும். அதிலிருந்து என்னை வெளியே கொண்டுவருவதுதானே அரசின் கடமை?" என்கிறார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+