Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரேமலதா தாக்குப் பிடிப்பாரா? விஜயகாந்த் வெற்றி ரகசியம் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிகவின் பொதுச்செயலாளராக விஜயகாந்த் மனைவி பிரேமலதா நியமிக்கப்பட்டிருக்கிறார். ஏறக்குறைய கட்சி தொடங்கப்பட்டு 18 ஆண்டுகள் வரை அக்கட்சிக்கு ஒரு புதிய பொதுச்செயலாளர் கிடைத்திருக்கிறார்.

பிரேமலதாவுக்கு இந்தப் பதவி, அதிகாரப்பூர்வமாக இப்போது கிடைத்திருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போதே அவர் கட்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்று அக்கட்சியை விட்டு வெளியேறிய பலரும் கூறியுள்ளனர்.

Is there a future for DMDK? Will Premalatha Vijayakanth save the party?

பிரேமலதா விஜயகாந்த் புதிய அடையாளம்:

விஜயகாந்தின் நிழலாக அவரே பல ஆண்டுகளாக இருந்து வருகிறார். ரசிகர் மன்றங்கள் சார்பில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னால் இலவச திருமணங்கள் நடைபெற்றபோது பிரேமலதா மேடையை விஜயகாந்துடன் பங்குபோட்டுக் கொண்டுள்ளார். ஆகவே அவரது வருகை ரசிகர் மன்றக் காலங்களிலிருந்து தொடர்ந்துள்ளது.

ஆனால், அதில் சில வேறுபாடுகள் இருக்கின்றன. அன்றைக்கு விஜயகாந்தின் புகழ் உச்சத்திலிருந்தபோது அவருடன் துணையாக பிரேமலதா இருந்தார். அவரது புகழில் இவரும் ஒளிர்ந்தார்.

இப்போது நிலைமை அப்படி இல்லை. அவரும் அவரது கட்சியும் மிகுந்த நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அந்த மாதிரியான காலகட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளராக அவர் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்.

எனவே இது அவருக்குச் சவாலான காலகட்டம். சவால் நிறைந்த பதவி. அதை உணர்ந்ததால் தான் மேடையில் அவர் பேசும் போது 'இந்தப் பதவி மலர் கிரீடம் அல்ல; முள் கிரீடம். அது எனக்கு நன்றாகத் தெரியும்' என்று கூறினார்.

உண்மையில் இது முள் கிரீடம்தான். அவர் ஒரு பக்கம் தன் கணவரைக் காப்பாற்ற வேண்டும். அவரது மனைவியாக அது அவரது மிகப் பெரிய கடமை. இன்னொரு பக்கம் விஜயகாந்த் கனவை, அதாவது தேமுதிகவை வளர்த்து எடுக்க வேண்டும். இந்தப் பதவியில் அவர் எந்தளவுக்கு வெற்றி பெறப்போகிறார் என்பதைக் காலம் தான் சொல்ல வேண்டும்.

ஏனெனில் சிலர் தேமுதிகவுக்கு இனி அரசியல் எதிர்காலமே இல்லை என்று கருத்துச் சொல்லி வருகிறார்கள். ஒரு ஜனநாயக அமைப்பில் எந்தக் கட்சியையும் அவ்வளவு எளிமையாக எடை போட்டுவிட முடியாது.

Is there a future for DMDK? Will Premalatha Vijayakanth save the party?

பிரேமலதா வெல்வாரா? மாட்டாரா?

பிரேமலதா வருங்காலத்தில் ஜெலிப்பாரா என்பதை நாம் சொல்ல முடியாது. அதற்கான பதில் மக்களிடம் உள்ளது. வரலாற்றில் விஜயகாந்தின் கடந்தகால நிகழ்வுகள் நமக்குச் சொல்லும் பாடம் அதுதான்.

விஜயகாந்த் அவரது ரசிகர் மன்றங்களை 2003 ஆண்டு வாக்கில் அரசியல் கட்சியாக மாற்றும் வேலைகளை முன்னெடுத்தார். அதன் தொடர்ச்சியாக விஜயகாந்த் ரசிகர் மன்றங்களுக்கு என்று தனியாக ஒரு கொடியை அறிமுகப்படுத்தினார் அன்றைக்கு விஜயகாந்தின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்த இப்ராகிம் ராவுத்தர்.

மெல்ல அரசியல் பாதைக்கு அடிப்போடுகிறார் விஜயகாந்த் என்று பேச்சு அடிப்பட்ட போது பத்திரிகையாளர் ஞாநி, அவரால் கட்சியைத் திறமையாக நடத்த முடியாது என்றார்.

பலரும் அப்படித்தான் சொன்னார்கள். வெறும் சினிமா வெளிச்சம், ரசிகர் மன்ற பலம் மட்டுமே கட்சியை நடத்த உதவாது என்றார்கள்.

அந்தப் பேச்சுக்களை எல்லாம் விஜயகாந்த் சட்டை செய்யவே இல்லை. தொடர்ந்து வட தமிழ்நாட்டில் தனது ரசிகர் மன்றங்களைத் தீவிரமாக ஒருங்கிணைக்கும் முயற்சிகளை எடுத்தார். அதற்காகப் பல ஊர்களுக்குப் பயணங்களை மேற்கொண்டார்.

Is there a future for DMDK? Will Premalatha Vijayakanth save the party?

ரசிகர் மன்றம் டு தேமுதிக:

அவரது ரசிகர் மன்றங்களை அரசியல் கட்சி போலவே நடத்தினார். தலைவர், செயலாளர், பொருளாளர் என்று பதவிகள் வழங்கப்பட்டன. வெறும் நற்பணி மன்றமாக அது இருக்கவில்லை. பல ஊர்களில் இலவசமாகத் திருமணங்களை நடத்தி வந்தார். அப்போதும் அவரது மனைவி மேடையில் முன்வரிசையில் அமர்த்தினார்.

அந்தப் புகழ்தான் அவரை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக உயர்த்தியது. ரஜினி, கமல் போன்ற உச்ச நட்சத்திரங்களே ஏற்க மறுத்த தலைவர் பதவியில் 2முறை அமர்ந்தார்.

கலைநிகழ்ச்சிகளைத் திறமையாக நடத்தி, 20 வருடங்களாகக் கடனில் தத்தளித்து வந்த நடிகர் சங்கத்தை மீட்டார். அது அவர் மீது பெரிய நம்பிக்கையை உருவாக்கியது.

கட்சிகளைக் கடந்து அவரைப் பல நடிகர்கள் ஆதரிக்கத் தொடங்கினர். அவர் நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது திமுகவைச் சேர்ந்த சரத்குமார் மற்றும் நெப்போலியன் அவருக்குப் பக்கபலமாக இருந்தனர்.

அதேபோல் அதிமுகவிலிருந்த எஸ்.எஸ்.சந்திரன் ராதாரவியும் அவருடன் கரம் கோர்த்து உடன் நின்றனர். அது மிகப் பெரிய சாமர்த்தியமாக அன்றைக்குச் சொல்லப்பட்டது.

இந்தப் பதவியால் அவர் இன்னும் வெளிச்சம் பெற்றார். மேலும் அவர் துணிச்சல் மிக்கவராக இருந்தார். வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பது அவரது பாணியாக இருந்தது.

அவர் அரசியல் கட்சிக்கான அட்சரம் போடுகிறார் என்பதை உணர்ந்ததால், அவர் மீது பாமகவின் பார்வை பட்டது. காரணம், வட தமிழ்நாட்டில் அவரது ரசிகர் மன்றம் வலுவாக இருந்தது. ஆகவே, அவரது வருகை தங்களின் வாக்கைக் குறைக்கும் என்று பாமக நம்பியது.

அதுவரை விஜயகாந்திற்கு அரசியல் எதிரி என்று யாரும் இல்லை. அவர் மூப்பனாருடன் பழகினார். மு.கருணாநிதியுடன் அவருக்கு நெருக்கம் இருந்தது. எம்.ஜி.ஆருடன் அவருக்கு எந்த முரண்பாடும் இருந்ததில்லை.

Is there a future for DMDK? Will Premalatha Vijayakanth save the party?

பாமக- விஜயகாந்த் மோதல்கள்:

அப்படியான காலத்தில்தான் பாமகவுடன் அவருக்கு மோதல் உண்டானது.

2004 ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சியில் விஜயகாந்த் ரசிகர் மன்றக் கூட்டத்தில் பேசிய போது 'மக்களைச் சந்திக்காமலே மத்திய அமைச்சராக ஆகிறார்கள்' என்று சொல்ல அது அன்புமணி ராமதாஸைதான் குறிப்பதாக விசயம் சீரியஸாக இந்த மோதல் உருவானது.

பாமக தொண்டர்களுக்கும் விஜயகாந்த் ரசிகர்களுக்கு நீறுபூத்த நெருப்பாக இருந்த பூசல் கள்ளக்குறிச்சியில் கலவரமாக வெடித்தது.

அப்போது பாமக நிறுவனர் ராமதாஸ் 'ரசிகர் மன்றுகளை ஒட்டுமொத்தமாகக் கலைக்க வேண்டும். ஒரு நடிகரின் ரசிகர் எனச் சொல்லிக் கொள்பவர்கள் நெற்றியில் முட்டாள் என்று எழுதிக் கொண்டவர்கள்' என்று காரசாரமாகப் பேட்டிகள் அளித்தார்.

அப்போது அவர் ரஜினிகாந்த் போல் பூசி மொழுகவில்லை. "அரசியலுக்கு வரவேண்டும் என்ற சூழ்நிலை வந்துவிட்டால், நான் வருவேன். யாருக்கும் பயப்படமாட்டேன்" என்றார்.

சொன்னதுடன் நிற்காமல் சுற்றுப்பயணம் செய்தார். முறையாக ஒரு அரசியல் கட்சித் தலைவரைப் போல் தமிழ்நாட்டைச் சுற்றிவந்தார்.

ஜெயலலிதாவை மிகக் கடுமையாக விமர்சித்ததால் ரஜினியின் அரசில் வாழ்க்கை பெரிய அளவில் பேசப்பட்டது. விஜயகாந்த் அப்படி இல்லை. அவர் ஆரம்பக்காலங்களில் யாரையும் பகைத்துக் கொள்ளவில்லை.

சாதியை மட்டுமே விமர்சித்தார். அதன் மூலம் பாமகவுடனே அவருக்கு மோதல் போக்கு எழுந்தது. அவர் அரசியல் களத்திற்கு வருகிறார் எனப் பேச்சுகள் வந்தபோது, 'ரஜினி அளவுக்கு விஜயகாந்த் சக்தி வாய்ந்தவர் இல்லை' என்று கணித்திருந்தார் அரசியல் விமர்சகர் ஞாநி. ஆனால், அது பொய்யானது.

Is there a future for DMDK? Will Premalatha Vijayakanth save the party?

கணிக்க முடியாத விஜயகாந்த் வளர்ச்சி:

அவர் கட்சி ஆரம்பிக்கும் போது அவரது கொள்கையில் குழப்பம் இருப்பதாகப் பலரும் கூறினர். திராவிடம் என்பது தேசியத்திற்கு எதிரானது. இவர் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்கிறார் என விமர்சித்தனர். ஆனால், அந்தப் பெயர் பிரச்சினை எல்லாம் மக்களை ஒன்றும் செய்யவில்லை.

ஆரம்பக்காலங்களில் விஜயகாந்த் வளர்ச்சியைப் பற்றி அதிகம் கருத்துச் சொல்லாமல் இருந்த மு.கருணாநிதி, பின்னாளில் அவரது கூட்டணிக்காகக் காத்திருந்தார். 'பழம் நழுவி பாலில் விழும்' என்று பழமொழி பேசினார்.

திமுக, அதிமுக என எந்தக் கட்சியுடனும் தேமுதிக சேராது என்றார் விஜயகாந்த். அவர் ஒரு பக்கம் பாமகவுக்கு எதிரியானார். அதைப்போல் திருமாவளவனும் தேமுதிக எதிரியாக மாறியது.

விஜயகாந்த் 2005இல் கட்சித் தொடங்கிய வேகத்தில், பாமகவின் கோட்டையாகக் கருதப்பட்ட விருத்தாசலம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக 2006இல் தனியாக நின்று வென்றும் காட்டினார். அதுவரை அவர் மதுரையில் நிற்பார் என்ற எதிர்பார்ப்பை உடைத்து விருத்தாசலத்தில் களம் இறங்கி, சாதித்தும் காட்டினார்.

யாருமே எதிர்ப்பாக்க முடியாத அளவுக்குக் கட்சி வளர்ந்தது. 2011இல் எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்தார். எம்.ஜி.ஆர் காலத்தில்கூட அந்த நாற்காலி மு.கருணாநிதிக்கு மட்டுமே என்று இருந்த நிலையை மாற்றி எழுதினார்.

விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தால் நடிகர் பாக்யராஜுக்கு நேர்ந்த கதிதான் நடக்கும் என்றார் அன்றைக்கு பாமக சட்டமன்ற உறுப்பினராக இருந்த பண்ருட்டி வேல்முருகன் கூறி இருந்தார். அந்த விஜயகாந்த்தான் எதிர்க்கட்சி தலைவராகப் பின்னாளில் உருவெடுத்தார்.

ஜெ - விஜயகாந்த் மோதல்கள்:

2011இல் தேர்தல் பிரச்சார மேடையைக் கோவையில் ஜெயலலிதா அமைத்த போது, அன்றைய ஹைலைட் நியூஸ் ஆக விஜயகாந்த் அந்தக் கூட்டத்திற்கு வருவாரா மாட்டாரா? என்பதே பேசு பொருளாக இருந்தது. பலரும் சொன்னதைப் போல் அவர் மேடைக்கு வரவில்லை.

அந்தப் பூசல் பெரியதாகச் சட்டமன்றத்தில் வெடித்தது. தனித்து நிற்கத் திராணி உள்ளதா? எனச் சட்டமன்றத்தில் விஜயகாந்த்தைப் பார்த்துக் கர்ஜித்தார் ஜெயலலிதா.

அதன்பின்னர் அவரது செல்வாக்கு மட்டும் இல்லை; உடல்நிலையும் சரிந்தது. அன்று முதல் தேமுதிகவுக்குக் கஷ்ட காலம்தான்.

Is there a future for DMDK? Will Premalatha Vijayakanth save the party?

அப்பாவை வெற்றிபெற வைத்த விஜயராஜா:

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தேமுதிகவை அதிமுகவும் திமுகவும் கண்டு கொள்ளவே இல்லை. அந்தளவுக்கு அரசியலில் அனுபவம் இல்லாமல் கட்சியை வழிநடத்தியவர் பிரேமலதா. இதை நாம் சொல்லவில்லை. பண்ருட்டி ராமச்சந்திரன் போன்ற மூத்த அரசியல் தலைவர்களே சொல்லி இருக்கிறார்கள்.

ஆனால், விஜயகாந்த் அப்படி இல்லை. 50 ஆண்டுக்கு முன் மதுரை வார் 1இல் கவுன்சிலர் பதவிக்கு அழகர்சாமி என்பவர் போட்டியிட்டார். அவர் தோல்வியடைந்தார். அப்பாவின் இந்தத் தோல்வி விஜய ராஜாவுக்கு அதிர்ச்சியைத் தந்தது.

அடுத்த தேர்தலில் அதே வார்டில் அழகர்சாமியை நிற்க வைத்தார் விஜயராஜா. பிரச்சாரம் களைக்கட்டுகிறது. வீதி வீதியாக வாக்கு அப்பாவுக்காக விஜய ராஜா வாக்குகளைக் கேட்டார். முதலில் 7 வாக்குகளில் தோற்றுப் போன அழகர்சாமி இந்த முறை 370 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறார்.

அந்த வெற்றியைத் தேடித்தந்த விஜயராஜா வேறு யாரும் இல்லை. விஜயகாந்த் தான்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+