வங்கக்கடல் விடாது.. வருகிறது புதிய புயல்.. அடுத்த 7 நாட்கள் குறிச்சு வச்சுக்கோங்க.. ரொம்ப முக்கியம்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ள நிலையில் வங்கக்கடலில் புதிய புயல் உருவாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அங்கே புயல் உருவாவதற்கான சூழ்நிலை எப்படி உள்ளது என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்ககடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதையடுத்து தமிழ்நாட்டில் இன்று 12 - 20 செமீ மழைக்கு வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திடீரென வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருகிறது. அடுத்த வாரம் திங்கள் - செவ்வாய் வாக்கில் இந்த தாழ்வு பகுதி முழுமையாக உருவாக வாய்ப்பு உள்ளது.
புயலாக மாறுமா?; தமிழ்நாட்டில் இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ள நிலையில் வங்கக்கடலில் புதிய புயல் உருவாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அங்கே புயல் உருவாவதற்கான சூழ்நிலை எப்படி உள்ளது என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
பொதுவாக புயல் உருவாவது எப்படி?; பொதுவாக ஒரு சுழற்சி கடலுக்கு மேலே இருக்க வேண்டும். இது வெப்ப நிலை காரணமாக வலிமை அடைந்து தாழ்வு மண்டலமாக மாறும்.
1, இந்திய தாழ்வு மண்டலம் வலிமை அடைந்து புயல் ஏற்பட கடலின் மேல் வெப்பநிலை 26 டிகிரி செல்சியசுக்கு மேல் இருக்க வேண்டும். அதாவது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்படுகிறதே, அதன் மையத்தில் இந்த வெப்பநிலைக்கு மேல் இருக்க வேண்டும்.
2, அல்லது காற்றழுத்த தாழ்வு பகுதியின் மையத்தில் இதை விட அதிக வெப்பநிலை இருக்க வேண்டும். அந்த வெப்பநிலை இருந்தால் மட்டுமே புயலுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். தற்போது கோடைகாலம் என்பதால் இந்த சூழ்நிலை சரியாக உள்ளது.
3. அதேபோல் கடலுக்கு நடுவே.. நிலத்தில் இருந்து இன்னும் நீண்ட தூரத்தில் இருந்தால் கண்டிப்பாக இது புயலாக மாறும். எவ்வளவுக்கு எவ்வளவு பூமியில் இருந்து தூரத்தில் இருக்கிறதோ அவ்வளவு நல்லது. அப்போதுதான் அது முழுதாக உருவாக முடியும்.
4. ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் பூமிக்கு அருகில் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுவோம். இது முழுமையாக உருவாகும் முன் அது கரையை கடக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதனால் பல தாழ்வு மண்டலங்கள் புயலாக மாறாமல் போய் இருக்கின்றன.
5. அதேபோல் இன்னொரு விஷயம் வறண்ட காற்று. இந்த வறண்ட காற்று பொதுவாக தாழ்வு மண்டலம் உருவாக விடாமல் தடுக்கும். வறண்ட காற்று காரணமாக தாழ்வு மண்டலம் வேகமாக வலிமை இழக்கும். குளிர்ந்த காற்று இருந்தால் தாழ்வு மண்டலம் வேகமாக வலிமை அடையும்.
6.வறண்ட காற்று என்பது தாழ்வு மண்டலத்தை செயல் இழக்க செய்யும், ஆக்ரோஷத்தை குறைக்கும் ஒன்றாகும். இப்போது கோடைகாலம் என்றாலும் கடந்த வாரம் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வந்த குளிர்ந்த காற்று புயலுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கிவிட்டது.
இந்த விஷயங்கள்தான் பொதுவாக ஒரு புயல் உருவாவதற்கான சூழ்நிலையை தீர்மானிக்கும். இந்த விஷயங்கள் சாதகமாக அமைந்தால் புயல் உருவாவதற்கான ஏற்ற சூழ்நிலைகள் இருக்கும். வங்கக்கடலில் இந்த எல்லா விஷயங்களும் தற்போது புயலுக்கு சாதகமாக உள்ளது. இதனால் அந்த புயல் உருவாக வாய்ப்புகள் அதிகம் உள்ளன.












Click it and Unblock the Notifications