பாஜகவில் இருந்து விலக கவுதமிக்கு நெருக்கடி கொடுத்தார்களா? சந்தேகம் கிளப்பும் வானதி சீனிவாசன்
சென்னை: நடிகை கவுதமி பாஜகவில் இருந்து விலகுவதாக இன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கவுதமி விலகுவதாக அறிவித்த பின்னர் புகாரை தமிழக அரசு பதிவு செய்கிறது ஏன் என்றும் கட்சியில் இருந்து விலகினால் தான் நாங்கள் புகாரை பதிவு செய்வோம் என்று நெருக்கடி கொடுத்தார்களா என தெரியவில்லை என்றும் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
நடிகை கவுதமி பாஜகவில் இருந்து விலகுவதாக திடீரென்று இன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடுமையான விமர்சனங்களை வைத்துவிட்டு பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார் கவுதமி. இன்று நான் என் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத நெருக்கடியான கட்டத்தில் இருக்கிறேன், என் நம்பிக்கைக்கு துரோகம் செய்து, என் வாழ்நாள் சேமிப்பை ஏமாற்றி விட்டார்கள், கட்சி மற்றும் தலைவர்களிடமிருந்து எனக்கு எந்த ஆதரவும் இல்லை என்றும் விமர்சனங்களை முன்வைத்து விட்டு கவுதமி பாஜகவில் இருந்து வலகியிருக்கிறார்.

பாஜகவின் இந்த விமர்சனமும் அவரது விலகலும் தமிழக பாஜக வாட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. இந்த நிலையில், கவுதமி கட்சியில் இருந்து விலகியது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், அவர் முழுமையாக என்ன பிரச்சினை என்பதை எங்களிடம் தெரிவிக்கவில்லை. கட்சியில் இருந்து விலகுவதற்கு அவர் முழுமையான காரணம் என்ன என்பதை சொல்லியிருந்தால் நாங்கள் உதவி செய்வதற்கு ஒரு வாய்ப்பாக இருந்திருக்கும் என்று கூறினார்.
கடும் வேதனை: மேலும், இன்றைக்கு கவுதமி பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்த பின்னர் புகாரை தமிழக அரசு பதிவு செய்கிறது ஏன். அப்போ கட்சியில் இருந்து விலகினால் தான் நாங்கள் புகாரை பதிவு செய்வோம் என்று நெருக்கடி கொடுத்தார்களா என தெரியவில்லை என சந்தேகம் எழுப்பியுள்ளர். இது தொடர்பாக வானதி சீனிவாசன் அளித்த பேட்டியின் விவரம்:- எனக்கு திருமதி கவுதமி மீது அதீதமான அன்பு, பாசம், மரியாதை உள்ளது. கட்சியில் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக உழைக்கக்கூடிய ஒரு பெண்மணி.
எந்த அளவுக்கு அவர்கள் கட்சியை நேசித்தார்கள் என்பது எனக்கு தெரியும். அதனால் இந்த கடிதத்தை பார்த்ததும் எனக்கும் கடுமையான வேதனை இருக்கிறது. மகளிர் அணியில் இணைவதற்கு கூட கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கேட்டிருந்தேன். எல்லாத்தையும் துணிச்சலாக, தைரியமாக செய்யக்கூடியவர். தன்னம்பிக்கையும், தைரியமும் கொண்ட பெண்மணி. அவர்கள் கொடுத்த வழக்கில் கட்சிக்காரர்கள் சட்டத்திற்கு புறம்பாக எதுவும் செய்துவிட முடியாது. அவர் முழுமையாக என்ன பிரச்சினை என்பதை எங்களிடம் தெரிவிக்கவில்லை.

நெருக்கடி கொடுத்தார்களா?: கட்சியில் இருந்து விலகுவதற்கு அவர் முழுமையான காரணம் என்ன என்பதை சொல்லியிருந்தால் நாங்கள் உதவி செய்வதற்கு ஒரு வாய்ப்பாக இருந்திருக்கும். நான் கேட்டேன். முழுசா சொல்லுங்க நான் சப்போர்ட் செய்கிறேன் என்று கூறியிருந்தேன். ஆனால் மாநில அரசு, புகார் கொடுத்து இத்தனை நாள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. பாஜகவில் இருந்ததால் தான் நடவடிக்கை எடுக்காமல் இருந்தார்களா?
ஏன் இத்தனை நாட்களாக புகாரை பதிவு செய்யவில்லை. இன்றைக்கு கவுதமி பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்த பின்னர் புகாரை பதிவு செய்கிறது ஏன். அப்போ கட்சியில் இருந்து விலகினால் தான் நாங்கள் புகாரை பதிவு செய்வோம் என்று நெருக்கடி கொடுத்தார்களா என்று எங்களுக்கு தெரியவில்லை. அதனால் இந்த விஷயத்தில் எனக்கும் மகளிர் அணி தலைவராக மன வருத்தத்தை தந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications