Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கூட்டணி கட்சியாக இருந்தாலும்.. விசிகவில் இருந்து அடுத்தடுத்து திமுகவிற்கு பாயும் கேள்விகள்.. பின்னணி

திமுக கூட்டணியில் இருந்து விசிக விலகுமா என்ற சந்தேகம் மீண்டும் எழுந்துள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக்குறிச்சி மற்றும் திருவள்ளூர் மாணவிகளின் மரணத்தின் அதிர்ச்சி பிடியில் இருந்து தமிழகம் இன்னமும் மீள முடியாத நிலையில், திமுக அமைச்சரிடம், மக்கள் சார்பாக, விசிக ஒரு கேள்வியை எழுப்பி உள்ளது.

பாஜக மேலிடத்தை பொறுத்தவரை, "திமுகதான் நம்பர் ஒன் எதிரி" என்பதில் மாற்றுக் கருத்தில்லை.. அதனால்தான் தமிழக அரசை எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடத்தினால், இதற்கு பாஜக தலைமை முழு ஆதரவு தரும்" என்று பச்சை கொடி காட்டி நம்பிக்கையை ஏற்கனவே தந்தாராம் அமித்ஷா...

இப்போது விஷயம் என்னவென்றால், எம்பி தேர்தல் வர உள்ள நிலையில், பாஜக சில புதிய வியூகங்களை கணக்கு போட்டு வருகிறது.. அதன்படி, திமுக கூட்டணியை பலவீனப்படுத்துவது.. இன்னொன்று மாற்று கட்சியில் இருந்து அதிருப்தியாளர்களை தங்கள் பக்கம் இழுப்பது என்ற பிளானில் உள்ளதாம்..

திருமாவளவன்

திருமாவளவன்

மற்றொரு பக்கம் திமுக கூட்டணியை பொறுத்தவரை, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், விசிக கட்சிகள், தர்மசங்கடத்தில் உள்ளன.. பேரறிவாளனை கட்டிப்பிடித்தது, பட்டினப்பிரவேசம், கருணாநிதி உருவபடத்தை வெங்கைய்யா நாயுடு திறந்து வைத்தது, போன்ற காரணங்களினால் இந்த கூட்டணிகள், திமுகவை சரமாரி விமர்சிக்காமல், அதேசமயம் மென்று விழுங்கி கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.. எனவே, அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாமா என்ற மனநிலைமைக்கும் இவைகளில் சில கட்சிகள் வந்துள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகள் மறைமுகமாக நடத்தி வருவதாகவும் கடந்த மாதமே செய்திகள் கசிந்தன.

வானகரம்

வானகரம்

அதிலும் திருமாவளவன் சமீபகாலமாகவே அதிமுக தொண்டர்கள் குறித்து சில ட்வீட்களை பதிவிட்டு வருகிறார்.. "அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லை. வானகரம் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைக் காண அதிகாலை புறப்பட்டு சென்றேன். வானகரம் அருகே போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டேன். அதிமுக பொதுக்குழுவுக்கு வந்திருந்த அக்கட்சியினர் என்னைச் சூழ்ந்துகொண்டு கைக் குலுக்கியது நெகிழ்வாயிருந்தது." என்று பதிவிட்டிருந்தது குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.

உஷார்

உஷார்

அதேபோல, தாங்கள்தான் எதிர்க்கட்சி என்று ஒவ்வொரு முறையும் தமிழக பாஜக சொல்லும்போதும், அதிமுக பாஜகவிடம் உஷாராக இருக்க வேண்டும் என்று வார்னிங் தந்து எச்சரித்து கொண்டிருப்பவரும் திருமாளவன்தான்.. மற்றொருபுறம், பள்ளிகளில் மாணவிகள் தற்கொலைகள் அதிகரித்து வரும்நிலையில், திருமாவளவன் எங்கே போயிட்டாரு? ஏன் இதற்கு பதில் சொல்லவில்லை என்று தமிழக பாஜகவே அன்று கேள்வி எழுப்பியிருந்தது.. இதற்கு பிறகு, திமுகவிடம் விசிக கேள்வி கேட்கவும் ஆரம்பித்துள்ளது.. அந்தவகையில், திமுக அரசில், முதலில் சலசலப்பாக வெடித்து கிளம்பியதே லாக்கப் மரணங்கள்தான்..

அப்செட்டில் கூட்டணி

அப்செட்டில் கூட்டணி

ஒருமுறை திருமாவளவன் பேட்டி தரும்போது, "லாக்கப் மரணங்கள், ஆளும் கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்துவதாக அமையும்... இனி அது போல் நடக்காமல் இருக்க காவல் துறை மரணங்கள் குறித்து உண்மையை கண்டறிய ஒரு விசாரணை குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும்" என்று சொந்த கூட்டணி என்றும் பாராமல் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தார் திருமாவளவன்... இப்போது கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தினால் தமிழகமே கொந்தளிப்பில் உள்ள நிலையில், திருவள்ளூரில் இன்னொரு மாணவியும் உயிரிழந்தது மக்கள் மனதில் அதிர்ச்சியை உண்டுபண்ணி உள்ளது.

விசிக நறுக்

விசிக நறுக்

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் கடந்த 23ம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது... அதேபோல், தூக்கிட்டு தற்கொலை செய்த திருவள்ளூவர் மாணவியின் உடலும் நல்லடக்கம் செய்தனர்... ஆனால், இந்த இரண்டு துயர நிகழ்விலும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்காதது பெரும் விமர்சனங்கள் பொதுமக்கள் மத்தியில் சம்பாதித்து வருகிறது.. இதைத்தான் விசிக இன்று கேள்வியாக கேட்டுள்ளது..

அன்பில் மகேஷ்

அன்பில் மகேஷ்

இதுதொடர்பாக அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னிஅரசு பதிவிட்டுள்ள ட்வீட்டில், கள்ளக்குறிச்சி மாணவியின் மரணத்தை தொடர்ந்து, திருவள்ளூர் மாணவி மரணித்துள்ளார்... இருவர் உடலும் நல்லடக்கம் செய்தாலும், மாணவிகளின் நல்லடக்கத்தில் பங்கேற்று குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லக்கூட அமைச்சர் அன்பில் மகேஷ் ஏன் போகவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்... அமைச்சர் பதில் சொல்வாரா? என கேள்வி வன்னியரசு எழுப்பியுள்ளார்.

தர்மசங்கடம்

தர்மசங்கடம்

பொதுமக்கள் சார்பாக விசிக, இந்த கேள்வியை கேட்டாலும், இதற்கான உரிய பதிலை திமுக தருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.. தரப்பில் மேலும், ஒரே கூட்டணியில் இருந்து கேள்வி எழுப்பி உள்ளது திமுகவுக்கு தர்மசங்கடத்தை தந்து வருகிறது... காரணம், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், திமுக வெற்றி பெறுவதற்கு விசிகவின் பங்கும் மிக முக்கிய காரணம்.. அந்தவகையில், கூட்டணியில் வலுவாக உள்ள விசிக, ஒருவேளை எம்பி தேர்தலில் தன் நிலைப்பாட்டை மாற்றினால், திமுகவின் கணக்கு நொறுங்கவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள்.. இங்கு இன்னொரு விஷயத்தையும் நாம் நினைவுகூர வேண்டி உள்ளது..

கொட்டம்

கொட்டம்

ஒருமுறை டிவி பேட்டியில், திமுகவுடன் கூட்டணி தொடருமா? என்று திருமாவளவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.. அதற்கு திருமாவளவன், பாஜகவின் கொட்டத்தை அடக்க வேண்டுமானால், அதன் வளர்ச்சியை தடுத்தே ஆக வேண்டுமானால், இதே திமுக கூட்டணி, அடுத்த தேர்தலிலும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்" என்று கூட்டணியை விட்டுக்கொடுக்காமல் அழுத்தம் திருத்தமாக பேசியிருந்தார்.. ஆனாலும், தமிழகத்தை உலுக்கி எடுத்து கொண்டிருக்கும் பிரச்சனைகளால், தற்போதைய நிலைப்பாடுகள் யாருக்கும், எப்படியும் மாறலாம்.. காரணம், அரசியலில்தான் எதுவும் நிரந்தரமில்லையே... பார்ப்போம்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+