ஸ்டாலின் அமெரிக்கா போன.. கேப்பில் இங்கே சல்லி சல்லியாக நொறுங்குதே! திருமா இப்படி முடிவெடுத்துட்டாரே?
சென்னை: சட்டமன்ற தேர்தலில் 200 இடங்களில் திமுக களமிறங்க வேண்டும் என்கிற திட்டமிடலோடு தேர்தல் பணிகளை ஒன்னரை ஆண்டுகளுக்கு முன்பாகவே தொடங்கிவிட்டது திமுக தலைமை. திமுகவின் இந்த வேகம், அதன் கூட்டணி கட்சிகளுக்கு கலக்கத்தை கொடுத்திருக்கிறது.
நாடாளுமன்றத்தேர்தலின் போதும், கூட்டணி கட்சிகளுக்கு முந்தைய தேர்தலில் ஒதுக்கப்பட்ட எண்ணிக்கையில் சீட் ஒதுக்கப்பட மாட்டாது ; அதிக அளவில் குறைக்கப்படும் என்று திமுக முடிவு செய்திருந்தது. இதனை அறிந்ததும் காங்கிரஸ், சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் முரண்பட்டன. எங்களுக்கு அதிமுக என்கிற உங்களின் எதிரி கட்சி இருக்கிறது ; அதனுடன் கூட்டணி வைப்போம் என்கிற மிரட்டலை திமுக தலைமைக்கு தெரிவிக்கும் வகையில் பொது வெளியில் அக்கட்சிகளின் பேச்சுக்கள் எதிரொலித்தன.

கடைசி நேரத்தில், இதற்கு பணிந்து கூட்டணியை தக்கவைத்துக்கொள்ள, முந்தைய தேர்தலில் ஒதுக்கப்பட்ட எண்ணிக்கையையே கூட்டணி கட்சிகளுக்கு மீண்டும் ஒதுக்கியது திமுக. கூட்டணியின் பலத்தில் 40 இடங்களையும் ஜெயித்தார்கள். அதனால், சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி கட்சிகளுக்கு அதன் விருப்பத்துக்கேற்ப சீட் ஒதுக்கப்படக்கூடாது என்கிற முடிவில்தான் திமுகவின் அரசியல் இருக்கிறது என்பதை திருமா உணர்ந்திருக்கிறார்.
கவலை இல்லை: அதனால், இந்த முறை அதிக சீட்டுகள் சிறுத்தைகளுக்கு கிடைக்க வேண்டுமானால் இப்போதே சில அஸ்திரங்களை எடுக்க வேண்டும் என திட்டமிட்டார். அதன் ஒரு கட்டம் தான், திமுகவுக்கு எதிராக பொதுப்பிரச்சனையை எழுப்புவோம் ; அதன் மூலம் திமுக நம்மிடம் சமாதானம் பேசும்; கூட்டணி பேரத்தை அதிகப்படுத்தலாம் என்கிற யோசனையில் இந்த மாநாட்டை நடத்த தீர்மானித்தார் திருமா.
ஆனால், இது குறித்து திமுக அலட்டிக்கொள்ளவே இல்லை ; சிறுத்தைகள் போனால் போகட்டும் என்ற மனநிலையில் இருக்கிறது. நாம் எடுத்த அஸ்திரம் திமுகவில் சலசலப்பைக் கூட உருவாக்கவில்லையே என யோசித்த திருமா, இரண்டாவது அஸ்திரமாக, மாநாட்டுக்கு அதிமுகவை அழைப்புவிடுத்தார். இதற்கான திமுகவின் ரியாக்சன், அது அவர்கள் விருப்பம் என்பதாக போகிற போக்கில் வெளிப்பட்டது. திமுக கூட்டணியில் சீட் பேரத்தை அதிகப்படுத்த திருமா எடுத்த அஸ்திரம், திமுகவில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதாகவே இருக்கிறது.
கூட்டணிக்கு சிக்கலா?: தமிழ்நாட்டில் திமுக கூட்டணியை உடைக்க ஒரு டீம் களமிறங்கி உள்ளதாம். முக்கியமாக ஆளும் திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை வெளியே கொண்டு வருவதற்கான மிக தீவிரமான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறதாம்.
விசிக - திமுக கூட்டணியை உடைக்க கடந்த சில காலமாகவே கடுமையான முயற்சிகளை சிலர் மேற்கொண்டு வருகின்றனர். ஒரு பக்கம் எடப்பாடி கடந்த லோக்சபா தேர்தலில் இருந்தே முயன்று வருகிறார். விஜய் அரசியலுக்கு வந்ததும் அவரும் இதே முயற்சியை மேற்கொள்வார் என்கிறார்கள். இது போக சில சமூக வலைதள ஆக்டிவிஸ்டுகள் இதே பணிகளை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார். திருமா கருத்து: இந்த விவகாரத்தில் திருமா மிகவும் காட்டமாக பேசி இருக்கிறார். அதில், ‛நான் என் அன்பு இளவலை இழந்துள்ளேன். ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலை கோழைத்தனமானது. கடும் கண்டனத்துக்குரியது.
தலைவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என்பது அரசின் கடமை, காவல்துறையின் கடமையாகும். இனிமேலாவது உளவுத்துறை விழிப்புடன் செயல்பட வேண்டும்; வரும் காலத்தில் இதுபோன்று நடக்க கூடாது. ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலை கோழைத்தனமானது. அவரது கொலையில் உண்மையான குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்பது தான் உண்மை என்று கூறி உள்ளார்.
இப்படிப்பட்ட நிலையில்தான் தற்போது மது ஒழிப்பு மாநாடு உள்ளிட்ட விவகாரம் காரணமாக திமுக - விசிக இடையே மீண்டும் லடாய் ஏற்பட்டு உள்ளது .












Click it and Unblock the Notifications