இதுவும் ஜோசியரின் ஐடியாவா? முதலமைச்சர் விஜய்யின் புதிய போட்டோவை வைக்க உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டிருக்கும் முதலமைச்சர் விஜய்யின் படம் தற்போது மாற்றப்பட்டிருக்கிறது. புதிய படத்தை வைக்க உத்தரவு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த உத்தரவு பல்வேறு விமர்சனங்களை கிளப்பியிருக்கிறது.

அரசு அலுவலகங்களில் முதலமைச்சரின் படம் இடம்பெற வேண்டும். அந்த வகையில், விஜய் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் அனைத்து அரசு அலுவலகங்களிலும் எந்த படத்தை பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன்படி அனைத்து அரசு அலுவலகங்களிலும் உத்தரவில் குறிப்பிடப்பட்ட படம் பயன்படுத்தப்பட்டது.

CM Vijay

ஆனால், அந்த படம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. தவெகவினரே இந்த போட்டோவில் இருக்கும் விஜய், அவரது சிரிப்பு உள்ளிட்டவை செயற்கையாக இருக்கிறது என்று கருத்துக்களை தெரிவித்திருந்தனர். எனவே வேறு ஒரு போட்டோவை மாற்ற வேண்டும் என்றும் கோரி வந்தனர். இப்படி இருக்கையில், தற்போது விஜய்யின் புதிய போட்டோ வெளியிடப்பட்டிருக்கிறது. இனி அரசு அலுவலகங்களில் இந்த போட்டோவைதான் பயன்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

இது தொடர்பான உத்தரவில், நடைமுறையில் உள்ள முதலமைச்சர் மற்றும் முன்னாள் முதலமைச்சர்களின் புகைப்படங்களை அரசு கருவூல பணத்தை வீணடிக்காமல் வைத்திடலாம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இருப்பினும், தமிழ்நாட்டின் தலைமை செயலகம், 43க்கும் மேற்பட்ட முதன்மை துறைகள், 38 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சிகள், நகராட்சிகள், வட்டாட்சியர் அலுவலகங்கள், காவல் நிலையங்கள் மற்றும் 12,500க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகள் என பல்லாயிரக்கணக்கான அரசு நிறுவனங்கள் உள்ளன. இதில் அனைத்தையும் படங்களை மாற்ற நிறைய செலவாகும்.

தோராயமாக கணக்கு போட்டு பார்த்தால் கூட சுமார் ரூ.6.17 கோடி வருகிறது. இவ்வளவு தொகையை புகைப்படத்திற்கு செலவு செய்வதற்கு பதில், கழிப்பறை இல்லாத அரசு பள்ளிகளுக்கு புதிய கழிப்பறையை கட்டலாம், விளையாட்டு மைதானத்தை ரெடி செய்யலாம் இப்படி பல விஷயங்களை செய்யலாம் என்று பலரும் கூறி வருகின்றனர்.

இதையெல்லாம் விட, முதல்வரின் படத்தை மாற்ற யார் ஐடியா கொடுத்தது? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். வழக்கமாக முதல்வர் விஜய், அவரது ஆஸ்தான ஜோதிடரின் ஆலோசனையின் பேரில்தான் செயல்படுவார் என்றும்.. அவர் சொல்லிதான் இந்த படம் மாற்றும் ஐடியா வந்திருக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியிருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+