Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எலும்பும் தோலுமாய்.. நம்ம விஜயகாந்தா, நோ.. "மாமாவே நீ வேணும் ஏழுஏழு ஜென்மம் தான்".. குஷியில் தமிழகம்

விஜயகாந்த்தின் தற்போதைய போட்டோ மீண்டும் வெளியாகி உள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: "வீரபாண்டி தேரு போல பேரெடுத்த சிங்கம் தான்.. ராமா் என்ன தர்மரென்ன மாமன் மனசு தங்கம் தான் மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜென்மம் தான்" என்று வைரலாகி கொண்டிருக்கும் விஜயகாந்த் போட்டோவை பார்த்து, ரசிகர்கள் பாட்டு போட்டு கொண்டாடி கொண்டிருக்கிறார்கள்..!

பொதுவாக தமிழக மக்களுக்கு விஜயகாந்த் மேல் ஸ்பெஷல் பாசம் உள்ளது... அபரிமிதமான அன்பு உள்ளது.. அவருக்கு எப்போது உடம்பு சரியில்லை என்றாலும், முதலில் கோயிலுக்கு போய் அவருக்காக வேண்டி கொள்ளும் அளவுக்கு அக்கறை மிகுந்தவர்கள்.

இது வெறும் நடிகர் என்பதால் மட்டும் விஜயகாந்த்துக்கு கிடைத்த பெருமை கிடையாது.. அவருடைய கசியும் ஈர மனசுதான்..! அதேசமயம், தேமுதிக என்ற கட்சி ஆரம்பித்தவுடன் திடீரென தனக்காக போட்டுக்கொண்ட திரையும் கிடையாது.. இயல்பாகவே விஜயகாந்த்துக்கு உள்ள மனிதநேயம்தான், இப்போதுவரை தொடர்கிறது.

இன்னல்கள்

இன்னல்கள்

எத்தனையோ சறுக்கல்கள், எத்தனையோ கஷ்டங்கள், எத்தனையோ வலிகள், எத்தனையோ ஏமாற்றங்களை கடந்துதான், 'விஜி' என்ற செல்லமான அடைமொழியை பெற முடிந்திருக்கிறது.. எத்தனையோ திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு பெரிய படங்களில் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கி அவர்களின் வாழ்வில் ஒளியேற்றியதும், நூற்றுக்கணக்கான இயக்குனர்களை அறிமுகப்படுத்தியும், ஏழை மக்களுக்கு உதவியதும் என கண்ணுக்கு தெரியாத உதவிகள் எத்தனையோ...

 அரசியல்

அரசியல்

பொதுமக்களுக்கு இலவச மருத்துவமனை அமைத்து, அதனால், உயிர்பெற்று இன்று நடமாடுபவர்கள் லட்சத்திற்கும் மேல் என்று பெருமையாகவே சொல்லலாம்! அரசியலையும் தாண்டி ஒருவர் விரும்பப்படுவது இந்த காலத்தில் அபூர்வம்.. அதில், மிக முக்கியமானவர் விஜயகாந்த்.. கடந்த சில வருடங்களாகவே உடம்பு சரியில்லாமல் போய்விடவும் தளர ஆரம்பித்துவிட்டார்..

 கஷ்டங்கள்

கஷ்டங்கள்

ஏராளமான சிகிச்சைகள் தொடர்கின்றன.. என்னதான் அரசியல் தடுமாற்றம் வந்தாலும், உடல்நிலை தளர்ந்தாலும், "என் மக்களுக்கு ஒன்னுன்னா, இந்த விஜயகாந்த் பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டான்" என்ற கர்ஜித்தவரை நாடு இன்னமும் மறக்கவில்லை. ஆனால் சில தினங்களுக்கு முன்பு இவரது ஒரு போட்டோ வெளியானது.. உடல் மெலிந்துபோய் அதில் காணப்பட்டார்..

 மருந்து மாத்திரைகள்

மருந்து மாத்திரைகள்

தற்போதுவரை சிகிச்சை, மருந்து, மாத்திரைகள் எடுத்து கொள்வதால், தோற்றத்தில் மாறுபாடுகள் ஏற்படலாம் என்றாலும், அந்த போட்டோவில் மேலும் மெலிந்திருந்தது பலரையும் கண்களை கலங்க வைத்துவிட்டது.. விஜயகாந்த்தை இப்படி எங்களால் பார்க்க முடியவில்லை. தனித்து கம்பீரமாக வலம் வந்தவராச்சே.. என்று பரிதவித்துவிட்டனர்.

குதூகலம்

குதூகலம்

ஆனால், அது விஜயகாந்த் போட்டோவே இல்லை, அவர் இப்படி இப்போது இல்லை, நன்றாக இருக்கிறார்.. இது போலி போட்டோ என்று அப்போதே சிலர் மறுக்கவும் செய்தனர்.. இந்நிலையில், இன்னொரு போட்டோ வெளியாகி உள்ளது.. விஜயகாந்த் அனுப்புவது போலவே. அவரது குடும்ப புகைப்படம் இன்று சோஷியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது.. பிரேமலதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது வீட்டில் 2 மகன்கள், விஜயகாந்த் முன்னிலையில் கேக் வெட்டினார்... அந்த போட்டோதான் ஷேர் செய்யப்பட்டுள்ளது.

பிரேமலதா

பிரேமலதா

அதில், "இன்று எனது மனைவி திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை, எனது மகன்கள் விஜயபிரபாகரன் மற்றும் சண்முகப்பாண்டியனுடன், தெரிவித்த போது..." என்று குறிப்பிட்டுள்ளார்.. அதுமட்டுமல்ல, பிரேமலதாவின் கன்னத்தில் கைவைத்து போஸும் கொடுத்திருக்கிறார்.. இந்த போட்டோவை பார்த்து ரசிகர்கள் ஏக குஷியில் உள்ளனர்..

 குதூகலம்

குதூகலம்

"கண்ணுக்கொரு வண்ணக்கிளி, காதுக்கொரு கானக்குயில் நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா" என்றும், "வீரபாண்டி தேரு போல பேரெடுத்த சிங்கம் தான்.. ராமா் என்ன தர்மரென்ன மாமன் மனசு தங்கம் தான் மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜென்மம் தான்" என்ற வரிகளை பதிவிட்டு குதூகலமாகி வருகிறார்கள்.. மேலும், 'அந்த குழந்தை மனது, பசித்தவர்களுக்கு உணவு வழங்கி அழகு பார்த்த நல்ல உள்ளம் கொண்ட மனிதர் பல்லாண்டு வாழ்க' என்றும் பதிவிட்டு வருகிறார்கள்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+