ஏன்டா டேய்.. இதுவா என் அடையாளம்? மேடையிலேயே ஆதார் கார்டை தூக்கி வீசிய சீமான்!
சென்னை: எனது ஆதார் எனது அடையாளமாம்.. என் மொழியே இல்லாத ஆதார் அட்டை என் அடையாளமா என ஆவேசமாக பேசியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
தமிழ் மொழியை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக அறிவிக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வலியுறுத்தி கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பகவத் சிங் தலைமையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் வழக்கறிஞர்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

இன்று 7வது நாளாக உண்ணவிரத போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், போராட்டம் நடக்கும் இடத்துக்கு நேரில் சென்று, வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்கக் கோரி போராடும் வழக்கறிஞர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து மேடையில் பேசிய சீமான், "நான் தமிழன். அதுதான் என் அடையாளம். என் முகம் சிதைந்து இறந்து கிடந்தால் என் முகத்தை உன்னால் அடையாளம் காட்ட முடியாது. அப்படி மொழி சிதைந்து அழிந்தால் உன் இனத்தை அடையாளம் காட்ட முடியாது.
இமயம் வரை பரவியிருந்த நீ, காலடிகள் குறுக காரணம், மொழிச் சிதைவு, மொழி அழிவு. 1800 ஆண்டுக்கு முன்பு ஏது கன்னடம்? 1600க்கு முன்புக்கு ஏது தெலுங்கு? 15ஆம் நூற்றாண்டுக்கு முன்பு மலையாளம் என்ற மொழியே இல்லை. எல்லாம் தொலைந்து, இன்று மூத்த மொழி தமிழை தொலைக்கப் பார்க்கிறார்கள்." என்றார்.
மேலும், கூட்டத்தில் இருந்த ஒருவரின் ஆதார் அட்டை ஜெராக்ஸை வாங்கிய சீமான், "இந்தியா நமக்கு கொடுக்கும் அடையாளத்தை பாருங்கள். ஆதார் அட்டையில் முதலின் என் பெயர் இந்தியில் உள்ளது. இரண்டாவதாக ஆங்கிலத்தில் எழுதி இருக்கிறது. என் தாய்மொழியே இதில் இல்லை, இது எனது அடையாளமா? டேய், என் அடையாளம் தமிழ் தான். இதுவா என் அடையாளம்?" என ஆவேசமாகப் பேசி, அந்த ஆதார் அட்டை காப்பியை வீசி எறிந்தார் சீமான்.
-
Thaaimaaman seer: சீமான் மகளுக்கு தாய்மாமன் சீர் ஏன்? அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு விளக்கம் -
பசு, மாடு, ஆடுகளை வெட்ட தடை.. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு உண்மையில் சொல்வது என்ன? விளக்கம் -
நாளை பக்ரீத்.. தமிழகத்தில் பொது இடங்களில் மாடுகளை வெட்ட தடை.. ஐகோர்ட் போட்ட முக்கிய உத்தரவு! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications