கேபினட் கூட்டத்தில் ‘சரவெடி’ முடிவு.. முதியோர், கைம்பெண், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உயர்வு!
சென்னை: முதியோர் உதவித் தொகை மற்றும் ஆதரவற்ற கைம்பெண்களுக்கான உதவித்தொகையை 1,000 ரூபாயில் இருந்து 1,200 ரூபாயாக உயர்த்த இன்று நடைபெற்று வரும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மாற்றத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.1000-லிருந்து ரூ.1500 ஆக உயர்த்தப்பட உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை செயல்படுத்துவது, ஆளுநர் ஆர்.ரன்.ரவியின் செயல்பாடுகள் மற்றும் திமுக அமைச்சர்கள் மீதான அமலாக்கத்துறை சோதனைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கேபினட் மீட்டிங்கில் ஆலோசனை: மேலும், இந்தக் கூட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை செயல்படுத்துவது, மகளிர் உரிமைத் தொகைக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. முதியோர் உதவித்தொகையை உயர்த்தி வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஆதரவற்ற முதியோர் மற்றும் கைம்பெண்களுக்கான மாத உதவித்தொகையை ரூ. 1,000 லிருந்து ரூ. 1,200 ஆக உயர்த்தவும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறைத்து, அமைச்சரவை கூட்டம் முடிந்ததும் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மகளிர் உரிமைத்தொகை: அண்ணா பிறந்தநாளான செப். 15ஆம் தேதி, ஒரு கோடி மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணிகள் கடந்த ஜூலை 20ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் தொடங்கியுள்ளன. விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்ட பிறகு பெறப்பட்டு, தகவல்களைச் சரிபார்த்து பயனாளிகள் பட்டியல் தயார் செய்யப்படும்.
முன்னதாக, மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான தகுதி நிபந்தனைகளும் வெளியிடப்பட்டன. அதன்படி, 21 வயதுக்கு மேற்பட்ட குடும்பத் தலைவிகள், இந்த உரிமைத்தொகையை பெற தகுதியுடைவர்கள் ஆவார்கள். ரூ.2.5 லட்சத்துக்கு கீழ் ஆண்டு வருமானம், 5 ஏக்கருக்கு குறைவான நிலம், ஆண்டுக்கு 3,600 யூனிட்டுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள் என பல்வேறு அளவுகோல்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

மேலும், சொந்த பயன்பாட்டுக்கு கார், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் வைத்திருப்பவர்கள், முதியோர் உதவித்தொகை, கைம்பெண் ஓய்வூதியம் பெறுவோர் உரிமைத்தொகை பெற முடியாது என்றும் விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் முதியோர் ஓய்வூதியம் மற்றும் கைம்பெண்களுக்கான உதவித்தொகையை உயர்த்த அரசு முடிவெடுத்துள்ளது.
முதியோர் - கைம்பெண் உதவித்தொகை: கணவன் அல்லது மனைவி போன்ற மிக நெருங்கிய உறவுகள் இல்லாமல் இருப்பவர்கள் மற்றும் மிக நெருங்கிய உறவுகள் அல்லது பிள்ளைகள் இருந்தும் அவர்களது ஆதரவு கிடைக்காமல் துன்பப்படும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் 'ஆதரவற்ற முதியோர்' என குறிப்பிடப்படுகின்றனர். 60 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற முதியோர்களுக்கு தமிழ்நாடு அரசு மாதம்தோரும் ரூ.1000 வீதம் வழங்கி வருகிறது.
திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் முதியோர் உதவித்தொகை 1000 ரூபாயில் இருந்து 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் கடந்த பின்னும் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படாத நிலையில், தற்போது மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்கும் நேரத்தில் முதியோர் மற்றும் கைம்பெண்கள் உதவித்தொகையை உயர்த்த முதல்வர் ஸ்டாலின் முடிவெடுத்துள்ளார்.

அமைச்சர் பரபர அறிவிப்பு: கேபினட் கூட்டம் முடிவடைந்ததும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டத்திற்கு உதவித்தொகை ரூ.1,000-ல் இருந்து ரூ.1200 ஆக உயர்த்தி வழங்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மாற்றத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.1000-லிருந்து ரூ.1500 ஆக உயர்த்தப்படும். ஆகஸ்ட் மாதம் முதல் இந்த உயர்வு நடைமுறைப்படுத்தப்படும். தமிழ்நாட்டில் சுமார் 30 லட்சம் பேர் சமூக நல பாதுகாப்பு திட்டங்கள் மூலமாக பயனடைகின்றனர்.
சமூக நலத் திட்டங்களுக்கு ரூ.845 கோடி கூடுதலாக செலவாகும். ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்து காத்திருக்ககூடியவர்களுக்கும் விரைவில் ஓய்வுதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications