பாமாயில் + துவரம் பருப்பு.. ஆகஸ்ட்டில் ரேஷன் கடைகளில் கிடைக்குமா? ராதாகிருஷ்ணன் சொன்ன ஸ்வீட் நியூஸ்
சென்னை: தமிழகத்தில் நடப்பு ஜூலையில் பல ரேஷன் கடைகளில் பாமாயில், பருப்பு என்பது பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் வரும் மாதத்தில் பருப்பு, பாமாயில் ரேஷன் கடைகளில் அனைவருக்கும் வழங்கப்படுமா? என்பது பற்றி உணவு மற்றும் நுகர்வோர் நலத்துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் விளக்கி உள்ளார்.
நம் மாநிலத்தில் மொத்தம் 2.23 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த ரேஷன் கார்டுகளுக்கு 34,793 ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வெளிசந்தையை விட குறைந்த விலையில் ரேஷன் கார்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் ரேஷன் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த பொருட்களை அரசு மொத்தமாக டெண்டர் மூலம் கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் வாரியாக அனுப்பி வைக்கும். சில சமயங்களில் ரேஷன் பொருட்கள் டெண்டர் மற்றும் கொள்முதலில் தாமதம் ஏற்படும்.
அந்த சமயங்களில் ரேஷனின் குறிப்பிட்ட பொருட்கள் பொதுமக்களுக்கு கிடைக்காமல் போகும். அந்த வகையில் ஜூலை மாதத்தில் தமிழகத்தின் பல்வேறு ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயிலுக்க தட்டுப்பாடு ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தன. சில இடங்களில் பொதுமக்கள் ரேஷன் பொருள் விற்பனையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர்கள் தமிழக அரசை விமர்சனம் செய்ய தொடங்கினர்.
2 லட்சம் பெண்களுக்கு கூடுதலாக வருது கலைஞர் மகளிர் உரிமை தொகை.. மீண்டும் விரிவாக்கம்.. எப்போது?
இத்தகைய சூழலில் தான் ஆகஸ்ட் மாதத்தில் தமிழகத்தில் தட்டுப்பாடு இன்றி ரேஷன் கடைகள் மூலம் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் கிடைக்குமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்நிலையில் தான் சென்னையில் இன்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு நலத்துறையின் செயலாளரான ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பில் தனிக்கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 முதல் 3 நாட்களில் கடத்தல் அரிசிகள் பிடிபட்டுள்ளது. அரிசி கடத்தலை தடுக்கவும் போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை 5,631 வழக்குகள் அரிசி கடத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மண்ணெண்ணெய் கடத்தல் தொடர்பாக 12 வழக்கு, , எல்பிஜி சிலிண்டர் 716 வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 6.98 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 6,675 பேர் கைது செய்யபப்ட்டுள்ளனர். 1002 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நேரத்தில் பாமாயில், பருப்புக்கான டெண்டர் என்பது சற்று தாமதம் ஆனது. அதேவேளையில் ஜூன் சப்ளை முழுவதுமாக முடிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் பருப்பை பொறுத்தவரை 41 சதவீதமும், பாமாயிலை பொறுத்தவரை 40 சதவீதமும் நகர்வு செய்யப்பட்டுள்ளது. வரும் மாதத்துக்கான டெண்டர் 29 ம் தேதி இறுதி செய்ய்பட உள்ளது. அதன்பிறகு வரும் காலத்துக்கான டெண்டர் 3 மாதத்துக்கு முன்பாகவே இறுதி செய்யப்பட்டு தேர்தல் நேரத்தில் ஏற்பட்ட தாமதம் சரிசெய்யப்படும். இதனால் எதிர்காலத்தில் சிரமமின்றி ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு கிடைக்கும்’’ என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications