பெரம்பூரில் விஜய் வெல்வாரா? ‘ஒன் இந்தியா' நேரடி கள ரிப்போர்ட்.. மக்கள் யார் பக்கம்? வீடியோ
சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் தவெக தலைவர் விஜய் பெரம்பூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் தான் அங்கு கள நிலவரம் எப்படி உள்ளது? விஜய்க்கு ஓட்டளித்து வெற்றி பெற வைப்பார்களா? என்பதை அறிய 'ஒன்இந்தியா' தமிழ் களத்தில் இறங்கியபோது மக்கள் சொன்ன கருத்துகளை இங்கு பார்க்கலாம்.
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளது. இந்த தேர்தலில் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தவெக சார்பில் சர்வேக்கள் எடுக்கப்பட்டது. அதில் பெரம்பூரில் தவெகவிற்கு சாதகமான சூழல் இருப்பதாகவும், இதனால் விஜய் தனது முதல் சட்டசபை தேர்தலில் அந்த தொகுதியில் களமிறங்க தயாராகி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த பெரம்பூர் தொகுதியை எடுத்து கொண்டால் அது வடசென்னை ஏரியாவில் உள்ளது. மொத்தம் 17 சட்டசபை தேர்தல்கள் நடந்துள்ளன. இதில் 9 முறை திமுக வெற்றி பெற்றுள்ளது. 3 முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், 2 முறை அதிமுக, இதுதவிர சோசியலிஸ்ட் கட்சி, காங்கிரஸ் தலா ஒரு முறையும், சுயேச்சை வேட்பாளர் ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளார். 2019 இடைத்தேர்தலில் வென்ற திமுகவின் ஆர்டி சேகர் மீண்டும் 2021 தேர்தலில் வெற்றி பெற்றார். இவர் தான் தற்போது சிட்டிங் எம்எல்ஏவாக இருக்கிறார்.
இப்படி திமுகவின் கோட்டையாக இருக்கும் இந்த பெரம்பூர் சட்டசபை தொகுதியில் விஜய் போட்டியிட்டால் வெல்வாரா? என்பது பற்றி அறிய 'ஒன்இந்தியா' தமிழ் நேரடியாக களத்துக்கு சென்று மக்களின் ஆதரவு யார் பக்கம் உள்ளது? என்பது பற்றி கருத்து கேட்டது. மக்கள் கூறிய கருத்துகளை கீழே உள்ள வீடியோவை பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி












Click it and Unblock the Notifications