மன்சூரலிகானை விடுங்க.. ஸ்டாலினுக்கு போன மேட்டர்.. உதயநிதி "அங்கேயே" கிளம்பி போறாராமே.. அதிர்ந்த பாஜக
சென்னை: நீட் விவகாரம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் சூழலில், இதை அனலை தணிக்கும் முயற்சியில் திமுக இறங்கி உள்ளது.. இதையடுத்து, இன்னொரு அதிரடி முடிவையும் விரைவில் அறிவிக்க உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து சில பிரத்யேக செய்திகள் நமக்கு கிடைத்துள்ளன.
நீட் தேர்வு விவகாரத்தில் அமைச்சர் உதயநிதிக்கு எதிரான விமர்சனங்கள் குவிந்தபடியே இருக்கின்றன.. அதிலும் சில நாட்களுக்கு முன்பு, நீட் தேர்வினால் மகனுடன் சேர்ந்து, தந்தையும் தற்கொலை செய்துகொண்ட விவகாரம், திமுக மீதான கோபத்தை இன்னும் அதிகப்படுத்தியது.

மாணவர்களையும் தாண்டி, குடும்ப உயிர்களையும், இந்த நீட் குழிதோண்டி பறிக்கிறதே என்ற ஆதங்கம் பொதுமக்களிடம் அதிகமானது.. இப்படிப்பட்ட சூழலில்தான், உதயநிதி தன்னுடைய போராட்டத்தை அறிவித்தார்..
ஆர்ப்பாட்டம்: நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காமல் காலத்தைக் கடத்தி வருவதை கண்டித்து, தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
இந்த போராட்டத்தின்போது, மாணவி அனிதா தொடர்பான காணொலி திரையிடப்பட்டபோது, அமைச்சர் உதயநிதி கண்கலங்கி அழுதார்.. "கையோடு கிளிசரினை கொண்டு போகல, அதான் ஒருசொட்டு கண்ணீர்கூட உதயநிதிக்கு வரல" என்றார் மாஜி அமைச்சர் ஜெயக்குமார்.
எனினும் இந்த ஆர்ப்பாட்டத்தில் உதயநிதியின் பேச்சு பலராலும் உற்று கவனிக்கப்பட்டது.. "5 வருஷமா இதை பற்றி பேசிட்டு இருக்கேன்.. ஆளுநர் நீட்டுக்கு பயிற்சி வகுப்பு நடத்தினார். அதில் பேசிய ஒரு மாணவியின் தந்தை அம்மாசியப்பன், "நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்" என்றார். ஆனால் ஆளுநர் திமிராக "முடியாது" என்றார். ஆளுநர் என்பவர் தபால்காரர்தான்... ஆளுநருக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறதா என்ன?
கண்ணீர் பேச்சு: 21 உயிர்களை நீட்டுக்காக பலிகொடுத்துள்ளோம்.. இதெல்லாம் தற்கொலையல்ல, கொலை... இதுக்கு காரணம் மத்திய பாஜக அரசு.. அதற்கு துணை நின்றது அதிமுக... இனி தமிழகத்தில் நிச்சயம் நீட் தேர்வு ரத்தாகும்.. ராகுல் காந்தி இதற்கான உறுதியை தந்துள்ளார்.. இந்த போராட்டம் இத்துடன் நிற்காது. அடுத்த போராட்டம், கட்சி தலைவர் அனுமதி பெற்று டெல்லியில் நடத்தப்படும்" என்றார் உதயநிதி
அன்று உதயநிதி அறிவித்த, இந்த விஷயம்தான் தற்போது, விஸ்வரூபமெடுத்து வருகிறது.. காரணம், சென்னையில் நடந்த போராட்டத்தில், தமிழக கல்லூரி மாணவ-மாணவிகளை பெருமளவில் திமுக மாணவரணி திரட்டவில்லையாம்.. மேலும் இந்த உண்ணாவிரத போராட்டம் தமிழக மாணவர்களிடம் எதிர்பார்த்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லையாம்.. இதெல்லாம் உதயநிதி ஸ்டாலினிடம் எடுத்து சொல்லப்பட்டுள்ளது. அதேபோல முதல்வர் ஸ்டாலினுக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
திமுக நிலைப்பாடு: இந்த நிலையில், நீட் தேர்வுக்கு எதிரான திமுகவின் நிலைப்பாட்டை தேசிய அளவில் கவனத்தை ஈர்ப்பதற்காக டெல்லியில் உதயநிதி தலைமையில் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்க திமுக தலைமை ஆலோசித்திருக்கிறது. டெல்லியில் நடத்த திட்டமிட்டுள்ள அந்த போராட்டம் பரபரப்பாக பேச வேண்டும் என்றும் ஆலோசித்துள்ளது அறிவாலயம்.
அந்த வகையில், உதயநிதி தலைமையிலான அந்த போராட்டத்தில், 'இந்தியா' கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் கலந்துகொள்ள வைக்கவேண்டும் என்கிற யோசனை ஸ்டாலினிடம் சொல்லப்பட்டிருப்பதால், கூட்டணி கட்சிகளின் தலைவர்களிடம் பேசி வருகிறதாம் திமுக மேலிடம்.. ஆனால், சிலர் மட்டுமே இதற்கு ஓகே சொல்லியிருக்கிறார்களாம்.. பலர் ஓகே சொல்லவில்லை. இருந்தாலும், கூட்டணியில் உள்ள பெரும்பான்மையான கட்சிகளின் ஆதரவைப்பெறும் முயற்சியில் திமுக தீவிரமாக இறங்கியுள்ளது.
உண்ணாவிரத போராட்டம்: " அனைவரையும் ஒப்புக்கொள்ள வைக்கும் முயற்சி வெற்றிப்பெற்றதும், டெல்லியில் நடக்கவிருக்கும் நீட் எதிர்ப்பு உண்ணாவிரத போராட்டத்துக்கு தேதி குறிக்கப்படும்" என்று உறுதியுடன் சொல்கிறது அறிவாலய வட்டாரம்.
இதனிடையே, சமீபத்தில் நடிகர் மன்சூர் அலிகான் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் நேற்றிலிருந்து தற்போது வரை இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது..
"கார்ப்பரேஷன் ஸ்கூல்ல படிச்ச தமிழன்கள்தான் இவ்வளவு சாதிச்சுருக்காங்க... அப்படின்னா, நீட் கீட்டுலாம் தூக்கி போடுங்க... என்ட்ரன்ஸ் எக்ஸாம் எதுவுமே வைக்கக்கூடாது. தமிழ்நாட்டு பாடநூல் தான் இந்தியா முழுமைக்கும் வைக்கணும். சில விஷயங்களை மாத்திட்டு அவங்க சாதனை பண்ண மாதிரி பண்றாங்க இல்லையா? அது அவங்களுக்கே கேவலமான விஷயம்" என்று ஆவேசத்துடன் கூறியிருந்தார்.
மிகுந்த ஈர்ப்பு: மன்சூரலிகானின் இந்த பேச்சுக்கு பெரும் ஆதரவு குவிந்துவரும்நிலையில், தலைநகரிலேயே சென்று ஆர்ப்பாட்டம் நடத்தபோவதாக, திமுக முன்னெடுத்துவரும் யோசனைகள், தமிழக அரசியல் களத்தில், மிகுந்த கவனத்தை குவித்து வருகிறது.
அதுமட்டுமல்ல, ஏற்கனவே உதயநிதியின் விஸ்வரூப எழுச்சியாலும், "ஒற்றை செங்கல்" விமர்சனத்தாலும் கடுப்பில் உள்ள பாஜக மேலிடம், தற்போது தலைநகருக்கே வந்து, உதயநிதி போராட்டத்தை நடத்த உள்ளதால், மேலும் எரிச்சலாகி உள்ளதாம்.. எனினும், நீட் விவகாரத்தில், அதிமுக, பாஜகவை நேரடியாகவே திமுக குற்றஞ்சாட்டி உள்ளதால், இதனை பாஜகவும், அதிமுகவும், எப்படி எதிர்கொள்ள போகின்றன என்ற எதிர்பார்ப்பும் எழுகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications