கூடுதல் கட்டணம் தாங்க! தமிழ்நாட்டிற்கு டெல்லி நெருக்கடி? எதிர்த்த மாநில அரசு! உயரும் மின் கட்டணம்?
சென்னை: தமிழ்நாட்டிடம் விற்கப்படும் மின்சாரத்தின் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக மின்சார வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வருடம் ஜூலை மாதம் தமிழ்நாட்டில் மின் கட்டணங்களில் மாற்றம் செய்யப்பட்டது. 200 யூனிட்டுகளுக்கு மேல் 2 மாதங்களுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.27.50 உயர்த்தப்பட்டது. 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு ரூ.72.50 உயர்த்தப்பட்டது.

400 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு ரூ.147.50 உயர்த்தப்பட்டது. 500 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு ரூ.297.50 உயர்த்தப்பட்டது. 600 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு ரூ.155 உயர்த்தப்பட்டது.
அப்போது இந்த மின் கட்டண உயர்வு சர்ச்சையான நிலையில், மத்திய அரசு கொடுத்த அழுத்தம்தான், மின்கட்டண உயர்விற்கு காரணம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்து இருந்தார். அதில், ஏழை மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்தான் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் மானியத்தை நிறுத்துவோம் என்று மத்திய அரசு அழுத்தம் கொடுத்தது.
எரிசக்தி துறை அமைச்சகம் சார்பாக இந்த அழுத்தம் தரப்பட்டது. நீங்கள் மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் அரசு மானியத்தை நிறுத்துவோம். நீங்கள் நிறுத்தவில்லை என்றால் மத்திய மின் துறை திட்டத்தை நாங்கள் உங்கள் மாநிலத்தில் நிறைவேற்ற மாட்டோம் என்று கூறியிருந்தது. ஆனால் முதல்வர் ஸ்டாலின் 1 வருடமாக மின்சார கட்டணத்தை உயர்த்தாமல் இருந்தார்.
1 வருடமாக அவர் மின் கட்டணத்தை மாற்றாமல் இருந்தார். இந்த நிலையில்தான் கடந்த மின்சாரத்துறை கூட்டத்தில் மத்திய அரசு எங்களிடம் அழுத்தம் கொடுத்தது. நீங்கள் மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் கண்டிப்பாக மானியம் தர மாட்டோம் என்று தெரிவித்ததாக கூறினார். நான் இதன்பின் டெல்லி சென்று பேசிய போதும் எங்களிடம் கறாராக பேசினார்கள். மின் கட்டணத்தை உயர்த்தினால்தான் திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்றும் கூறினார்கள்.
28 முறை மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசுக்கு அழுத்தம் கொடுத்தது. தனியார் மின் நிறுவனங்களுக்கும் இதற்காக கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டது. அதாவது மின் கட்டணத்தை தமிழ்நாடு அரசு மாற்றவில்லை என்றால், தமிழ்நாடு அரசுக்கு நீங்கள் மின்சாரம் கொடுக்க கூடாது என்று மத்திய அரசு தனியார் நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுத்துவிட்டது.
அந்த அளவிற்கு அவர்கள் பிரஷர் கொடுத்ததே மின்சார உயர்விற்கு காரணம். வேறு வழியில்லாமல் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறோம். மற்ற மாநிலங்களை விட குறைவாகவே மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது, என்று கூறி இருந்தார்.
மீண்டும் உயர்வு: இந்த நிலையில் மீண்டும் தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. ஆனால் இந்த முறை வீடுகளுக்கு எந்த விதமான மின் கட்டணமும் உயர்த்தப்படவில்லை.
பொதுவாக வருடா வருடம் மின் கட்டணத்தில் 4.7 சதவிகிதம் வரை உயர்த்தப்பட வேண்டும். மின்சார உற்பத்தி மற்றும் பணவீக்கத்தை வைத்து இந்த உயர்வு மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் கடந்த செப்டம்பர் மாதம் உயர்வு செய்யப்பட்டு விட்டதால் இந்த முறை மின் கட்டணம் 2.18 சதவிகிதம் மட்டுமே உயர்த்தப்பட்டு உள்ளது. அதுவும் கூட தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் மட்டுமே உயர்த்தப்பட்டு உள்ளது.
மீண்டும் உயர்த்த அழுத்தம்: இந்த நிலையில்தான் தமிழ்நாட்டிடம் விற்கப்படும் மின்சாரத்தின் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக மின்சார வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி தற்போது தனியாரிடம் இருந்தும், அனல் மின் நிலையங்களிடம் இருந்தும், எரிபொருள் மையங்களிடம் இருந்தும் தமிழ்நாடு தனது கூடுதல் தேவைக்கு மின்சாரம் வாங்குகிறது. இதில் அனல் மின் நிலையங்களிடம் இருந்தும், எரிபொருள் மையங்களிடம் இருந்தும் சேர்த்து ஒரு யூனிட் 4 ரூபாய்க்கு வாங்குகிறது. ஒரு அனல் மின் நிலையத்தின் ஆயுட் காலம் 25 ஆண்டுகள்.
அனல் மின் நிலையங்களிடம் இருந்து ஆயுட்காலம் முடிந்தும் கூட மின்சாரம் வாங்கப்படுகிறது . இப்படி ஆயுட்காலம் முடிந்தும் மின்சாரம் தரும் அனல் மின் நிலையங்களிடம் இருந்து மின்சாரம் வாங்க கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அழுத்தம் தருகிறதாம். அதாவது அனல் மின் நிலையங்களிடம் இருந்தும், எரிபொருள் மையங்களிடம் இருந்தும் சேர்த்து ஒரு யூனிட் 7 ரூபாய்க்கு வாங்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டு உள்ளதாம்.
அதனால் தற்போது மின்சாரம் விற்கும் விலையை விட கூடுதல் விலைக்கு விற்கப்பட வாய்ப்புகள் உள்ளன.மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு மாநில அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications