தருமபுரி சவுமியா.. ஜஸ்ட் மிஸ்ஸான "மினிஸ்டர்" பதவி.. அப்ப திருமாவளவன் சொல்றது உண்மையா? புகையும் பாமக
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி தருமபுரியில் தோல்வியுற்றதற்கான காரணங்கள் இணையத்தில் இன்னமும் அலசப்பட்டு வருகின்றன.
தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், பாஜக கூட்டணி படுதோல்வியை தழுவியது.. இதில், தருமபுரியில் திமுக வேட்பாளர் மணி வெற்றி் பெற்றிருந்தார்..

பாமக தொண்டர்கள்: இதே தொகுதியில், பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி போட்டியிட்ட நிலையில், வாக்கு எண்ணிக்கையின்போது, முன்னிலை வகித்து வந்து, திமுகவுக்கே டஃப் தந்திருந்தார்.. இதனால் பாமக தொண்டர்கள் பெரும் உற்சாகத்துக்கு ஆளானார்கள். ஆனாலும், சவுமியா அன்புமணி இறுதி சுற்றுகளில் தன்னுடைய வெற்றி வாய்ப்பை இழந்தார்..
சவுமியா, 21,300 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். திமுக வேட்பாளர் மணி 85,850 ஓட்டுகளைப் பெற்றார். அதாவது, பாமகவுக்கு வெறும் 46,175 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன.
நேற்றுமுன்தினம் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு ஒரு பேட்டி தந்திருந்தார்... அப்போது, தர்மபுரி தொகுதி முடிவுகள் குறித்தும் பேசியிருந்தார்..
திருமாவளவன்: "நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தர்மபுரி தேர்தலில் முன்னணி வகித்த பாமக அரூர் தொகுதி ஓட்டு எண்ணிக்கையின்போது, பாமகவை பின்னுக்குத் தள்ளி திமுகவை வெற்றி பெறச் செய்தது. இதற்கு உதவியது விசிகவின் ஓட்டுக்கள்தான்.. அதுபோலவே, வரவிருக்கும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வெற்றிக்கும் விசிக ஓட்டுகள் துணை நிற்கும்" என்று கூறியிருந்தார்.
பாமகவை தோற்கடித்ததே விசிகவின் ஓட்டுக்கள்தான் என்று திருமாவளவன் சொன்னதையே, பாமக தரப்பிலும் புகைந்து கொண்டிருக்கிறதாம்.. இதற்கெல்லாம் காரணம், தேர்தல் வியூகம் இன்னும் சரியாக அமைத்திருக்கலாம் என்கிறார்கள்.
பென்னாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி 3 சட்டசபை தொகுதிகளில் முதலிடத்தில் பாமக வந்தது.. பாலக்கோடு, மேட்டூரில் திமுகவை நெருங்கும் அளவுக்கு வாக்கு வித்தியாசமும் இருந்தது..
விசிக: ஆனால், அரூர் தொகுதியில் மட்டும் பாமக ஓட்டு குறைவதற்கு காரணம், விசிகதான்.. கடுமையான களப்பணிகளை அக்கட்சி மேற்கொண்டிருந்தது.. விசிகவுடன் நேரடியான மோதக்கூடாது என்பதற்காக சிதம்பரம் தொகுதியில், கடந்த 2 தேர்தல்களாக பாமக போட்டியிடவில்லை... ஒருவேளை சிதம்பரம் தொகுதியில் பாமக நேருக்கு நேர் மோதியிருந்தால், விசிக திணறியிருக்கும்.
பாமகவின் பலத்துக்கு ஈடுகொடுப்பதற்காகவே, களப்பணியில் முழுமையான கவனத்தை விசிக செலுத்தியிருக்கும்.. தங்கள் தலைவரை கடும் போட்டியில் இருந்து எப்படியாவது வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக, சிதம்பரத்திலேயே முழு கவனத்தையும் விசிகவினர் செலுத்தியிருப்பார்களே தவிர, அரூர் தொகுதியில் களப்பணியில் அதிரடி காட்டியிருக்க மாட்டார்கள்.
அமைச்சர் பதவி: சிதம்பரம் தொகுதியில் விசிகவுக்கு நெருக்கடி இல்லாத காரணத்தினால், அரூர் தொகுதியில் கடுமையாக பணியாற்றி சவுமியாவை வீழ்த்தியிருக்கிறார்கள்.. தேர்தலுக்கு வியூகம் அமைக்கும்போதே, இதை யோசித்து செயல்பட்டிருந்தால் சவுமியா இந்நேரம் அமைச்சராகி டெல்லி சென்றிருப்பார்" என்று ஆதங்கப்படுகிறார்களாம் பாமகவினர்.
தோல்வி காரணம்: பாமகவின் தோல்விக்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.. பாமக மாணவரணி மாநில செயலாளர் முரளி சங்கர் அரூர் தொகுதியை சேர்ந்தவர் என்பதால், மிகவும் செல்வாக்கு மிக்கவர்.. குறிப்பாக, தலித் மக்களிடையே, பெருவாரியான ஆதரவை பெற்ற பாமக நிர்வாகியும் ஆவார்..
ஆனால், இவரை விழுப்புரம் தொகுதி வேட்பாளராக அறிவித்தால், அரூரில் முரளி சங்கரால் சரியாக பணியாற்ற முடியாமல் போய்விட்டது. இவர் ஒருவேளை, அரூர் களப்பணியில் இறங்கியிருந்தால், பாமக நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும் என்கிறார்கள் பாமகவினர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications