எதிர்க்கட்சிகளின் அரசியல்! உளவுத் துறை எச்சரிக்கை! விஜய்யின் பசும்பொன் பயணம் ரத்து?

Subscribe to Oneindia Tamil

சென்னை: உளவுத் துறை, போலீஸ் எச்சரிக்கையை அடுத்து முதல்வர் விஜய் பசும்பொன் பயணத்தை ரத்து செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான காரணத்தை பார்க்கலாம்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 119ஆவது ஜெயந்தி விழா, 64 ஆவது குரு பூஜை வரும் 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

Vijay pasumpon

இதையொட்டி துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பசும்பொன்னுக்கு வருகை தரவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக ஹெலிபேட்டில் முன்னேற்பாடு பணி நடைபெற்று வருகிறது.

அது போல் தமிழக முதல்வர் விஜய், அமைச்சர்கள், திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், நாதக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், ஏராளமான பொதுமக்கள் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளனர். இதற்கான முன்னேற்பாடுகளும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் உளவுத் துறை, போலீஸாரின் எச்சரிக்கையே தொடர்ந்து பசும்பொன் செல்லும் பயணத்தை முதல்வர் விஜய் ரத்து செய்துள்ளதாக தகவல் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தவெக நிர்வாகிகள் கூறியிருப்பதாவது: பசும்பொன்னில் ஆண்டுதோறும் தேவர் குருபூஜை நிகழ்வில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவது வழக்கம்.

அங்கு முதல்வர் செல்லும் போது கூட்டம் அதிகமாகி சிறு அசம்பாவிதம் நடந்தாலும் எதிர்க்கட்சிகள் அதை பெரிதுப்படுத்தி அரசியல் செய்யக் கூடும். எனவே பசும்பொன் செல்வதை தவிர்க்குமாறு உயரதிகாரிகள் விஜய்யிடம் கூறியுள்ளனராம். அது போல் உளவுத் துறையும் அதே ஆலோசனையை வழங்கியுள்ளது. இதையேற்று பசும்பொன் பயணத்தை முதல்வர் தவிர்த்துள்ளார். இவ்வாறு அந்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+