செஞ்சி சிறுமி மாயம்.. தாயை நோட்டமிட்ட CBCID.. உள்ளே வந்த ஆட்டோ.. முடிச்சுகள் அவிழப்போகுது?

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமாவதி காணாமல் போன வழக்கு, இரண்டு வாரங்களைக் கடந்து தமிழகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கிறது.

உள்ளூர் போலீசார் 10 நாட்கள் தேடியும் எந்த முன்னேற்றமும் இல்லாததால், வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த சில தினங்களாக ஆலம்பூண்டியில் முகாமிட்டுள்ள சிபிசிஐடி தனிப்படையினர், தற்போது வழக்கின் மிக முக்கிய மையப்புள்ளியான சிறுமியின் தாய் பவானியிடம் 3-வது நாளாகத் தொடர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Gingee villupuram

சிபிசிஐடி அதிகாரிகள் கேட்ட அடுக்கடுக்கான கேள்விகளும், அதில் வெளிவந்த முரண்பாடுகளும் வழக்கின் மர்ம முடிச்சுகள் அவிழும் தருவாய்க்கு வந்துவிட்டதைக் காட்டுகின்றன.

தாயிடம் 3-வது நாளாக கிடுக்கிப்பிடி: என்னென்ன கேள்விகள்?

சிபிசிஐடி டி.எஸ்.பி கீதா தலைமையிலான அதிகாரிகள், சிறுமியின் தாய் பவானியை ஆட்டோவில் நேரில் வரவழைத்து பல மணி நேரம் துருவித் துருவி விசாரித்தனர். அவரின் வீட்டிற்கு சென்று ஆட்டோவில் அழைத்து அங்கிருந்து அப்படியே சிபிசிஐடி விசாரணை அலுவலகம் கொண்டு சென்றனர். இந்த விசாரணையில் அதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட மிக முக்கியமான 4 கேள்விகள் வழக்கின் போக்கையே மாற்றியுள்ளன:

1. திடீர் பிறந்தநாள் கொண்டாட்டம் ஏன்?

சிறுமிக்கு இப்போது 7 வயது முடிந்துள்ளது. ஆனால் கடந்த 6 ஆண்டுகளாக ஒருமுறை கூட சிறுமிக்கு அவரது குடும்பத்தினர் பிறந்தநாள் கொண்டாடியதில்லை. அப்படியிருக்க, அக்டோபர் 11-ஆம் தேதி இரவு மட்டும் வழக்கத்திற்கு மாறாகக் கேக் வெட்டி விமரிசையாகக் கொண்டாடியது ஏன்? இதுவரை இல்லாத இந்த திடீர் பிறந்தநாள் விழாவுக்கு யோசனை தந்தது யார்? இதில் ஏதேனும் உள்நோக்கம் இருந்ததா என்று அதிகாரிகள் துளைத்தெடுத்துள்ளனர்.

2. குழந்தையைத் தனியாகப் படுக்க வைத்தது ஏன்?

பொதுவாக அம்மாவுக்கு மிக அருகில் தூங்கும் 7 வயதுப் பெண் குழந்தை, அன்று இரவு மட்டும் தனியாக ஒரு ஓரத்தில் படுக்க வைக்கப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. வழக்கமாக ஜன்னல் மற்றும் கதவுகளை அடைத்துப் படுக்கும் வழக்கம் உள்ளவர்கள், அன்று இரவு மட்டும் "காற்று வரட்டும்" என்று வாசற்கதவைத் திறந்து வைத்துவிட்டுத் தூங்கியதாகக் கூறியதில் உள்ள உண்மை என்ன? நள்ளிரவில் எதிர்வீட்டுப் பெண் கேட்டபடி "அம்மா.. அம்மா" என்று குழந்தை அலறிய சத்தம், ஒரே அறையில் படுத்திருந்த தாயின் காதுகளில் விழாமல் போனது எப்படி என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டுள்ளது.

3. வேலைக்குச் செல்லாமல் தவிர்த்தது ஏன்?

வழக்கமாக தினசரி வேலைக்குச் செல்லும் பவானி, குழந்தை காணாமல் போவதற்கு முந்தைய நாளும், சம்பவம் நடந்த அன்றும் வழக்கமான வேலைகளுக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அதற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்தும் சிபிசிஐடி அதிகாரிகள் தீவிரமாகக் கேட்டுள்ளனர்.

4. சாமியாருடன் இருந்த தொடர்பு என்ன?

இந்த வழக்கின் மிகப்பெரிய புதிராக இருப்பது சாமியார் சரவணன் விவகாரம். ஆலம்பூண்டி பகுதியில் தங்கி இருந்த சரவணன் என்ற சாமியாருடன் பவானிக்கு இருந்த தொடர்பு என்ன? குழந்தை காணாமல் போன அதே தினத்தில் சாமியார் திடீரென ஊரைவிட்டு திருவண்ணாமலை வழியாக அரசூருக்குத் தப்பி ஓடியது ஏன்? பரிகார பூஜைகள் அல்லது குடும்பப் பிரச்சனைகளுக்காக சாமியாருடன் ஏதேனும் ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடந்ததா என்ற கோணத்திலும் கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

வாய்மொழியும் எழுத்துப்பூர்வமும் முரண்பாடு: சிக்கும் தாய்?

காவல்துறை வட்டாரங்களில் இருந்து கசியும் தகவல்களின்படி, தாய் பவானி ஆரம்பத்தில் உள்ளூர் போலீசாரிடம் கூறிய வாய்மொழித் தகவல்களுக்கும், தற்போது சிபிசிஐடி அதிகாரிகளிடம் எழுத்துப்பூர்வமாக அளித்த வாக்குமூலங்களுக்கும் இடையே கடுமையான முரண்பாடுகள் காணப்படுகின்றன.

ஒவ்வொரு முறையும் மாற்றி மாற்றிப் பேசப்படும் பதில்கள் மற்றும் மறைக்கப்படும் தகவல்களால், இந்தச் சம்பவத்தில் குடும்பத்திற்குத் தெரிந்த ஒருவரோ அல்லது மிக நெருக்கமானவர்களோ நேரடியாகத் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் சிபிசிஐடிக்கு பல மடங்கு அதிகரித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் சிசிடிவி ஆய்வு

ஒருபுறம் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடக்கும் அதே வேளையில், கூடுதல் பலமாக மேலும் 20 சிபிசிஐடி காவலர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். ஆலம்பூண்டியில் இருந்து வெளியேறும் பிரதான சாலைகள், செஞ்சி மற்றும் திண்டிவனம் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை அதிகாரிகள் வினாடி விடாமல் சலித்து வருகின்றனர். 600-க்கும் மேற்பட்ட செல்போன் அழைப்புகளின் பின்னணியும் தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது.

வெளிப்புறக் கடத்தல் கும்பல் என்பதைத் தாண்டி, குடும்பப் பின்னணி, சாமியார் விவகாரம் மற்றும் முரண்பட்ட வாக்குமூலங்களை மையமாக வைத்து சிபிசிஐடி விசாரணையை நகர்த்தி வருவதால், மாயமான சிறுமி எங்கே இருக்கிறார் என்ற உண்மை மிக விரைவில் உடைபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+