ஒர்க் பிரம் ஹோம் அரசியல் செய்கிறாரா விஜய்? பிறந்தநாளில் லிஸ்ட் போட்டு பதிலடி கொடுத்த தவெக கட்சியினர்
சென்னை: விஜய் வொர்க் பிரம் ஹோம் அரசியல் செய்வதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வந்த நிலையில், விஜய் பிறந்த நாளான இன்று இந்த விமர்சனங்களுக்கு தவெகவினர் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தை விஜய் நடத்தியது முதல் பல்வேறு நிகழ்ச்சிகளை பட்டியலிட்டு பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்க கூடிய விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கியுள்ளார். வரும் 2026 தேர்தலில் முதல் முறையாக அவரது கட்சி களம் காண உள்ள நிலையில், விஜய் வொர்க் பிரம் ஹோம் அரசியல் செய்வதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகின்றன. விஜய் பிறந்த நாளான இன்று இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் தவெகவினர், விஜய் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளை பட்டியலிட்டு வருகிறார்கள்.

ஒர்க் பிரம் அரசியல் விமர்சனம்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் ஒர்க் ப்ரம் ஹோமில் உள்ளார் என்கிற விமர்சனமும் அவர் மீது தொடர்ந்து திமுக தரப்பால் வைக்கப்பட்டு வருகிறது. அதாவது, விஜய் பொதுவெளியில் அதிகம் தலைகாட்டுவது இல்லை என்றும் பத்திரிகையாளர்களை சந்திப்பது இல்லை.. முக்கியமான விஷயங்களுக்கு கூட ட்விட்டரில் மட்டுமே பதிவிடுகிறார் என்பது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் விமர்சனமாக உள்ளது.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக
இந்நிலையில்தான் நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய்யின் 51-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. இந்த பிறந்த நாளை பயன்படுத்தி ஒர்க் ப்ரம் ஹோம் விமர்சனத்திற்கு சாட்டையடி கொடுத்துள்ளனர் விஜய் கட்சியினர். அதில் கடந்த 2008 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையின் எதிரே விஜய் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டதும், அதே நாளில் தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்ததையும் குறிப்பிட்டு பதிவிட்டு வருகிறார்கள்.

மெரினா ஜல்லிக்கட்டு
இதேபோல் கடந்த 2011 ஆம் ஆண்டு இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை கண்டித்து நாகப்பட்டினத்தில் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தை விஜய் நடத்தியதையும் பகிர்ந்துள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் தன்னெழுச்சியாக முன்னெடுத்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் விஜய் கலந்து கொண்டதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு
இதேபோல் நடிகர் விஜய் கடந்த 2017 ஆம் ஆண்டு அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அனிதா நீட் தேர்வால் மருத்துவ படிப்பில் சேர முடியாமல் உயிரிழந்த நிலையில் அவர் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிய சம்பவமும் விஜய் கட்சியினரால் நினைவு கூரப்பட்டுள்ளது.
அதேபோல் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாணவி ஸ்னோலின் இல்லத்திற்கு நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல் கூறியிருந்ஹார். கடந்த 2023 ஆம் ஆண்டு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை புரட்டிப் போட்டபோது நடிகர் விஜய் நேரில் வருகை தந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறியதோடு நிவாரண உதவிகள் வழங்கியது உள்ளிட்டவற்றையும் பட்டியலிட்டுள்ளனர்.
பரந்தூர் விமான நிலையம்
அரசியல் கட்சி தொடங்கிய பின்பு சென்னைக்கு அருகில் உள்ள பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக விளைநிலங்களை அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 900 -நாட்களைக் கடந்து போராடி வந்த விவசாயிகளை நேரில் சென்று சந்தித்து ஆதரவு தெரிவித்தவுடன் ஜனநாயகத்தின் வலிமையை உணர்த்தும் வகையில் அவர்களுக்காக குரல் கொடுத்ததையும் விஜயின் கட்சியினர் நினைவுகூர்ந்துள்ளனர். ஒர்க் ப்ரம் ஹோம் (வீட்டில் இருந்தே அரசியல்) என்கிற விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தினர் வெளியிட்டு இருக்கும் இந்த புள்ளி விவரம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
-
பேய் பிசாசு நலத்துறை அமைச்சர் ராகவா லாரன்ஸ்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. தெறிக்கும் மீம்ஸ்! -
விஜய்யை ஒருமையில் பேசிய சீமானுக்கு சிக்கல்? சென்னை போலீஸ் கமிஷனரிடம் தவெக வழக்கறிஞர் புகார் -
விஜயதரணியின் அடுத்த "ஜம்ப்".. விளவங்கோடு டூ தவெக மாஸ்டர் ஸ்கெட்ச்! காங்கிரஸ் எப்படி ஹேண்டில் பண்ணும் -
எந்த முதல்வரும் செய்யாத மூவ்.. உள்ளாட்சித் துறையை முதல்வர் விஜய் தன்வசம் வைத்திருப்பது ஏன்? பின்னணி -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
அடுத்த 3 நாட்களில் ரூ.3,000 வரும்.. வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்! விஜய்யின் மெகா திட்டம்! -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
வெள்ளை அறிக்கை எப்போது வரும்.. நிதி அமைச்சர் மரிய வில்சன் அப்டேட் -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
பரந்தூர் திட்டம் கைவிடப்படுகிறதா? விமான நிலையத் திட்டத்தில் அதிரடி திருப்பம் - விஜய் புதிய வியூகம்! -
50+ வீடியோ.. சேலம் மணிகண்டன்.. சிபிஎம், டிடிவி தினகரன் விஜய்க்கு வைத்த கோரிக்கை












Click it and Unblock the Notifications