வாக்காளர்களிடையே நெகட்டிவ் தாக்கத்தை ஏற்படுத்தியதா.. விஜய்-சங்கீதா கேஸ்? CNN கருத்துக்கணிப்பில் ஷாக்
சென்னை: தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், சிஎன்என் நியூஸ் 18 செய்தி ஊடகம் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டிருக்கிறது. இதில் விஜயின் சமீபத்திய தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சைகள் வாக்காளர்களை பாதித்திருக்கிறதா? என்கிற கேள்விக்கு மக்கள் பதிலளித்துள்ளனர்.
முன்னதாக தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யார் என்கிற கேள்விக்கு, 41.2% மக்கள் மு.க.ஸ்டாலின் என்றும், 37.5% மக்கள் எடப்பாடி பழனிசாமி எனவும், 14.9% மக்கள் விஜய் என்றும் பதிலளித்திருந்தனர்.

அதேபோல விஜயின் சமீபத்திய தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சைகள் வாக்காளர்களை பாதித்திருக்கிறதா? என்கிற கேள்விக்கும் மக்கள் பதிலளித்துள்ளனர்.
- ஆம் பயங்கரமான நெகடிவ் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது என - 38.7%
- குறைவான நெகடிவ் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது என - 10.4%
- அப்படியெல்லாம் நெகடிவ் தாக்கங்களை ஏற்படுத்தவில்லை என - 32%
- பாசிடிவ் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது - 2.8%
- கருத்து இல்லை என - 16.1% மக்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
முன்னதாக விஜய் மனைவி சங்கீதா, விஜய்யிடமிருந்து விவாகாரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் நடிகை ஒருவருடன் விஜய் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும், இது குறித்து கேள்வி எழுப்பும்போது, தன்னை பொருளாதார ரீதியில் ஒடுக்குவதாகவும், எனவே தனக்கு விவாகரத்து வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த மனு, மக்கள் மத்தியில் விஜய்க்கான செல்வாக்கை வெகுவாக குறைத்தது. இதைத்தான் சிஎன்என் செய்தி ஊடகம் வெளியிட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications