பாஜகவை எதிர்க்க விஜய்க்கு திராணி இல்லை.. குரியன் ஜோசப் குழுவை கலைக்க இதுதான் காரணம்! கனிமொழி அட்டாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிலரை மகிழ்ச்சிப்படுத்தவே ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் குழுவை தவெக அரசு கலைத்திருக்கிறது என்று திமுக எம்பி கனிமொழி விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டின் உரிமைகள் மீது விஜய்க்கு அக்கறையில்லை என்று கூறிய கனிமொழி, மத்திய பாஜக அரசை எதற்குமே எதிர்த்து நின்று கேள்வி கேட்பதற்கு தங்களுக்கு திராணி இல்லை என்பதையும் தவெக அரசு நிரூபித்துவிட்டதாக கூறியுள்ளார்.

மத்திய - மாநில அரசு உறவை வலுப்படுத்துவதற்கான குழுவை தமிழக அரசு கலைத்து உத்தரவிட்டுள்ளது. மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளை ஆராய்ந்து மாநில உரிமைகளை பாதுகாக்கவும், கூட்டாட்சியை வலுப்படுத்தவும் திமுக ஆட்சியின் போது குழு அமைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

Kanimozhi

இந்த குழுவை கலைத்த தமிழக அரசு, இனி மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளை மாநில சட்ட ஆணையமே நேரடியாக கையாளும் என்று தெரிவித்துள்ளது. இதற்கு பாஜக வரவேற்பு தெரிவித்துள்ளது. திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் சென்னையில் திமுக எம்பி கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது கனிமொழி பேசுகையில், கலைஞர் ஆட்சி காலத்திலும் கூட மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகள், உரிமைகளை ஆய்வு செய்து குழு உருவாக்கப்பட்டு, அதன் அறிக்கைகளை பயன்படுத்தி இருக்கிறோம். நம்ம உரிமைகளுக்கு போராட அந்த அறிக்கை அடிப்படையாக இருந்துள்ளது. இத்தனை ஆண்டுகளில் பல மாற்றங்கள் நடந்துள்ளன. இதனால் திமுக ஆட்சியில் குழு உருவாக்கப்பட்டது.

ஆழமாக புரிந்து கொண்டு, நாம் கேட்க கூடிய மாற்றங்கள், முன் வைக்க கூடிய விஷயங்கள் இருக்க வேண்டும் என்றும் குழு உருவாக்கப்பட்டது. முதற்கட்டமாக குரியன் ஜோசப் குழு அறிக்கையை தமிழக அரசிடம் கொடுத்துள்ளது. இப்படியான சமயத்தில், இந்த குழுவை கலைத்ததற்கு சில பேரை மகிழ்ச்சி அடைய வைப்பதற்கு தான். அவர்களுக்கும் பயம் உள்ளது.

தமிழ்நாட்டின் மீதும், தமிழ் மக்களின் உரிமைகள் மீதும், மாநிலத்தின் உரிமைகள் மீதும் இந்த ஆட்சியில் இருக்க கூடியவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை.. கவலையும் இல்லை.. மத்திய பாஜக அரசை எதற்குமே எதிர்த்து நின்று கேள்வி கேட்பதற்கு தங்களுக்கு திராணி இல்லை என்பதையும் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+