“நூலக புத்தக கொள்முதலில் ஊழல் செய்த திமுக மண்டியிட்டு மன்னிப்பு கேட்கவேண்டும்” - அமைச்சர் ராஜ்மோகன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "இந்தியாவின் முதல் AI ஊழலை திமுக செய்திருக்கிறது, நூலகங்களில் ஊழல் செய்த திமுகவினர் மாணவர்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கவேண்டும்" என அமைச்சர் ராஜ்மோகன் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த திமுக ஆட்சியின் போது கோவை காந்திபுரத்தில், ரூ.300 கோடி செலவில், பெரியார் அறிவுலகம் என்ற பெயரில் பிரமாண்ட நுாலகம் கட்டும் பணி துவங்கப்பட்டு நடைபெற்றது. தவெக ஆட்சிக்கு வந்த பின், கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி, முதல்வர் ஜோசப் விஜய், பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்தார். பெரியார் அறிவுலகத்துக்கு நுால்கள் வாங்கியிருப்பதில் பெரிய அளவில் ஊழல் நடந்து இருப்பதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டினார்.

Rajmohan Accuses DMK of AI-Based Scam Demands Apology Over Library Corruption

அகல் விளக்கு என்ற பதிப்பகத்தின் மூலம் போலியான பெயர்களில், முழுக்க முழுக்க தவறான தகவல்களுடன் புத்தகங்கள் தயார் செய்யப்பட்டு பெரியார் அறிவுலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. 300 ரூபாய் கூட மதிப்பில்லாத புத்தகங்களை 1,500 ரூபாய் - 2,000 ரூபாய் என விலை வைத்து விற்பனை செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. போலி நூல்களை விநியோகித்துக் கோடிக்கணக்கில் ஊழல் செய்தவர் யார்? இதன் பின்னணியில் இருந்தவர்கள் யார் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த முறைகேடு திமுக ஆட்சியில் நடைபெற்றது என தவெக தரப்பு குற்றம்சாட்டியது. அதேசமயம், தவெக ஆட்சிக்கு வந்தபிறகுதான், குறிப்பிட்ட நூல்கள் நூலகத்துக்கு வாங்கப்பட்டுள்ளன என்றும், அகல் விளக்கு பதிப்பக புத்தகத்தில் புத்தகம் நூலகத்திற்கு வந்த தேதி ஜூன் 22 என இருப்பதாகவும் திமுக குற்றம்சாட்டியது.

இந்நிலையில், பெரியார் அறிவுலகத்திற்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் திமுக அரசு தான் மிகப்பெரிய ஊழலில் ஈடுபட்டதாகவும், இந்தியாவின் முதல் AI ஊழலை திமுக செய்திருக்கிறது என்றும் அமைச்சர் ராஜ்மோகன் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், "கோவை பெரியார் அறிவுலகத்திற்கு புத்தகங்களை வாங்க திமுக ஆட்சியில் கொள்முதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிலேயே முதல்முறையாக நடந்துள்ள AI ஊழல். அகல் விளக்கு பதிப்பகத்திற்கு புத்தக கொள்முதல் ஆணையை திமுக அரசு வழங்கியது.

கோவை பெரியார் நூலகத்திற்காக அகல்விளக்கு பதிப்பகத்திற்கு பிப்ரவரி 14ல் ஆர்டர் கொடுக்கப்பட்டு, 7 நாட்களில் புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன. 7 நாட்களில் புத்தகங்களை வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுன் ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வந்ததோ குப்பையை விட மோசமான 40 பெட்டி புத்தகங்கள்.

அடுக்கி வைக்கும்போது சீலிடப்பட்டது தான் ஜூன் மாதம். தவெக ஆட்சிக்கு வந்தபின் அறிவுலகம் திறப்பு விழாவிற்காக புத்தகங்களை அடுக்கி வைக்கும் போது போடப்பட்ட சீல்களை, திமுகவினர் தற்போது மடைமாற்றம் செய்து பேசுகின்றனர். AI மூலம் எழுதப்பட்ட புத்தகங்களை தலா ரூ.50 கோடிக்கு பல்வேறு நூலகங்களுக்கு வாங்க கொள்முதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

நூலகங்களில் ஊழல் செய்துவிட்டு திமுகவினர் எப்படி கூச்சமே இல்லாமல் நடமாடுகின்றனர்? இந்தியாவின் முதல் AI ஊழலை திமுக செய்திருக்கிறது. புத்தகங்களுக்காக கமிஷன் பெற்றவர்களுடம் இருந்து பணத்தை திரும்பப் பெறுவோம். திமுக ஆட்சியில் நூலக புத்தக ஊழல் குறித்து விசாரிக்க சிறப்பு குழு அமைக்கப்படும்.

திருச்சி காமராஜர் அறிவுலகம், கடலூர் அஞ்சலை அம்மாள் அறிவுலகம் உள்ளிட்ட நூலகங்களுக்கு புத்தகங்களை வாங்கவும் திமுக ஆட்சியில் ஆணை போடப்பட்டது. திமுக தமிழக மக்களிடம் மண்டியிட்டு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். தெம்பு, திராணி, ஆண்மை இருந்தால் திமுக ஊதுகுழல்கள் இதை மறுக்க முடியுமா?" என சவால் விடுத்துள்ளார் அமைச்சர் ராஜ்மோகன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+