தமிழ்நாட்டில் வருது உள்ளாட்சி தேர்தல்! களமிறங்கும் தமிழக வெற்றிக் கழகம்? விஜய் எடுத்த பெரிய முடிவு?
சென்னை: தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்கான பணிகளை தொடங்கி உள்ளது மாநில தேர்தல் ஆணையம். இப்படிப்பட்ட நிலையில்தான் இதில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலை நடத்தும் வகையில் வாக்குப்பெட்டிகளை தயார் நிலையில் வைக்க மாவட்ட ஆட்சியர்களுக்குக் கடிதம் எழுதி உள்ளது. கடந்த 2019ல் 27 மாவட்டங்களில் தேர்தல் நடந்தது. தேர்வான நபர்களின் பதவி காலம் வரும் டிசம்பருடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில்தான் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகம்: இப்படிப்பட்ட நிலையில்தான் இதில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. விரைவில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இதற்காகத்தான் புதிய தேர்தல் கமிஷனராக அர்ச்சனா பட்நாயக் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என்கிறார்கள்.
அதோடு நேற்று நடந்த வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாமும் அதற்குதான் என்று கூறப்படுகிறது. அந்த முகாம்களில் கட்சி சார்பாக பங்கெடுத்தவர்கள் விவரம் வெளியாகி உள்ளது. அதில் திமுக 90%,அதிமுக 40%,சீமான் 8%,விஜய் கட்சி வெறும் 5% மட்டுமே பங்கேற்று உள்ளது. இதனால் உண்மையில் நடிகர் விஜயின் கட்சி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
உள்ளாட்சி தேர்தல்: 2024 சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகளை ஆளும் திமுக இப்போதே செய்ய தொடங்கிவிட்டது. மற்ற கட்சிகளுக்கு முன்பாக வேகமாக தேர்தல் பணிகளுக்கான காய்களை திமுக நகர்த்தி வருகிறது அதே சமயம் இன்னொரு பக்கம் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தலை நடத்துவது அல்லது தள்ளிப்போடுவது தொடர்பாக திமுக அரசு இறுதி முடிவு எடுக்காமல் இருக்கிறது. திமுக சீனியர்கள் யாருக்கும் இந்த தேர்தலை நடத்துவதில் விருப்பமில்லை. தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது.
சீனியர்கள்: இது குறித்து ஸ்டாலினிடம் பலமுறை வலியுறுத்தியும் வந்துள்ளனர் சீனியர்கள். அதே சமயம், மாவட்ட, ஒன்றிய அளவிலான திமுகவினரோ, டிசம்பரில் தேர்தலை நடத்தியாக வேண்டும் என தலைமைக்கு தங்களின் விருப்பத்தை தெரிவித்தபடி இருக்கின்றனர்.
இந்த நிலையில், ஊரக உள்ளாட்சிக்கான தேர்தலை நடத்துவதற்கு தயாராகும் வகையில், ஜனவரி 1, ஏப்ரல் 1 , ஜூலை 1, அக்டோபர் 1 ஆகிய மாதத் தேதிகளை அடிப்படையாகக் கொண்டு 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுக்க மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.












Click it and Unblock the Notifications