குறுக்கே வந்த விஜய்.. முதல்வர் ஸ்டாலின் - மு.க.அழகிரி சந்திப்பில் நடந்தது என்ன? ஓ இதுதான் மேட்டரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்வதற்காக 28-ந்தேதி முதல்வரின் இல்லத்தில் அவரை சந்தித்து வாழ்த்துச் சொன்னார் மு.க.அழகிரி. தனது பேரனுடன் (கயல்விழியின் மகன்) சென்று சகோதரரை அழகிரி வாழ்த்தினார். நீண்ட மாதங்களுக்குப் பிறகு ஸ்டாலினும் அழகிரியும் சந்தித்தது பரபரப்பானது.

ஸ்டாலினை பிறந்த நாளில் அழகிரி சந்தித்தது, பாசத்தினால் என்றாலும் முக்கிய விசயத்திற்காகவே இந்த சந்திப்பு நடந்துள்ளது என்கிறார்கள் தகவலறிந்துள்ள திமுகவின் சீனியர்கள். அதாவது, கட்சியிலிருந்து நீக்கப்பட்டப்பிறகு தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார் அழகிரி. கலைஞரின் மறைவுக்குப் பிறகு இந்த ஒதுங்குதல் சற்று கூடுதலாகவே இருந்தது.

mk stalin vijay azhagiri

ஸ்டாலின் அழகிரி சந்திப்பிற்கு என்ன காரணம்

அழகிரியின் ஆதரவாளர்கள் பலரும் ஸ்டாலினின் ஆதரவாளர்களாக மாறி, அரசியல் செய்து வந்தனர். இதனால், அழகிரியை சந்திக்கும் திமுகவினரின் எண்ணிக்கை குறைந்தது. இந்த சூழலில், அழகிரியின் மகன் துரை தயாநிதி, மிகமோசமான உடல்நிலை பாதிப்புக்கு ஆளானது அழகிரியை நிலைகுலைய வைத்தது. அண்ணன் மகன் மீது அளவுக்கடந்த பாசம் வைத்திருக்கும் ஸ்டாலினையும் இது மிகவும் பாதித்தது.

மருத்துவ மனைக்குச் சென்று அழகிரிக்கு ஆறுதல் சொன்னதோடு துரை மீண்டு வருவார் ; நீங்கள் தைரியமாக இருங்கள்; கவலைப்படாதீர்கள் என்று அவரை தேற்றினார். உடல் நலம் தேறிய நிலையில், அவரை அமெரிக்காவிற்கு மேல் சிகிச்சைக்காக துரையை அனுப்பி வைத்தார் ஸ்டாலின். அமெரிக்காவில் இருக்கும் நடிகர் நெப்போலியனின் பராமரிப்பில் தான் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக துரை தயாநிதி இருந்து வருகிறார்.

அழகிரி அரசியல்

அவருக்கு உலகின் தலை சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதில், மிகவும் நன்றாக இருக்கிறார் துரை. மகனை அருகில் இருந்து கவனித்து வந்த அழகிரி, சமீபத்தில் தான் சென்னைக்கு வந்தார். அவரை வரச்சொன்னதும் ஸ்டாலின் தான். 20 நாட்களுக்கு முன்பு, துரையின் நலம் விசாரிக்க அழகிரியிடம் ஸ்டாலின் பேசியிருக்கிறார். அப்போது துரையிடமும் பேசினார் ஸ்டாலின். அப்போதுதான், 'அரசியல் ஈடுபாடில்லாமல் அப்பா (அழகிரி) மிகவும் தனிமையில் இருப்பதாக நினைக்கிறார் சித்தப்பா.

தனிமையில் இருக்கும் அண்ணன்

அவரை நீங்கள் அழைத்துப் பேச வேண்டும். இதுவரை எனக்காக எல்லாத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு இருந்தார். இப்போது நான் குணமாகிவிட்டேன். இனியும் அவர் தனிமையாக இருக்க வேண்டாம் என தோணுது சித்தப்பா' என்று ஸ்டாலினிடம் துரை தயாநிதி சொல்லியிருக்கிறார். இதனை அடுத்தே, அழகிரியை வீட்டுக்கு அழைத்தார் ஸ்டாலின். பிறந்த நாளையொட்டி அழகிரியும் சந்தித்து விட்டுச் சென்றுள்ளார். அந்த சந்திப்பில், தென்மாவட்டங்களில் திமுகவினரின் உள்கட்சி அரசியல் கட்டுக்கடங்காமல் இருப்பதும் (கோஷ்டி பிரச்சனைகள்), விஜய்யின் அரசியல் பிரவேசமும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வோட் பேங்கில் பாதிப்பு ஏற்படலாம் என ஏற்கனவே ஸ்டாலினிடம் சொல்லப்பட்டிருப்பதால் அதை அழகிரியிடம் விவாதித்துள்ளார் ஸ்டாலின்.

விஜய் பற்றி பேச்சு

அதற்கு, விஜய் தனித்துப் போட்டியிடுவது உறுதியாக இருக்கும் வரையில் திமுகவுக்கு எந்த பாதிப்பும் வராது. தேர்தல் களப்பணிகளில் திமுக தொண்டர்களுக்கு மிஞ்சிய சக்தி எந்த கட்சியினருக்கும் இருக்கப்போவதில்லை. அதனால் மீண்டும் திமுக ஆட்சிதான் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் அழகிரி. ஒரு கட்டத்தில், தென்மாவட்டங்களை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை உங்களிடம் தரலாம் என நினைக்கிறேன் என ஸ்டாலின் சொல்ல, பொறுப்பு கொடுத்துத்தான் நான் இயங்க வேண்டும் என்பதில்லை தம்பி. கட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கழகம் ஜெயிக்க நான் உறுதுணையாக இருப்பேன் என சொல்லியிருக்கிறார் அழகிரி'' என்று திமுகவின் சீனியர்களிடம் இந்த தகவல் பரவியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+