”இளைய காமராஜர் விஜய்” செய்தியாளர்கள் கேட்ட கேள்வி.. டக்கென பதில் சொன்ன சீமான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கல்வி விருது வழங்கும் விழாவில், விஜய்யை பார்த்து இளைய காமராஜர் என்று ஆசிரியர் ஒருவர் கூறியதையடுத்து, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் இதனை டிரெண்ட் செய்து வந்தனர். இந்த நிலையில் இது பற்றி சீமானிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, காமராஜர் 50 படம் நடித்து முதலமைச்சராக வரவில்லை.. அரசியலுக்கு வரவில்லை.. என்று சீமான் கூறினார்.

நேற்று முன் தினம் நடந்த கல்வி விருது வழங்கு விழாவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ - மாணவிகளுக்கு விஜய் பரிசு வழங்கினார். அப்போது கடலூரை சேர்ந்த தலைமையாசிரியர் ஒருவர் பேசுகையில், விஜய் கைகளால் பரிசு வாங்குவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த பரிசு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து அனைவரிடமும் இதனை என் மகன் சொல்லி வருகிறார். என் மகனுக்கு சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களுக்கு நன்றி.

is-vijay-the-young-kamraj-seemans-response-to-the-question

இளைய காமராஜர் விஜய்?

சாதாரணமாக கோவிலில் தொடர்ந்து தர்மம் செய்பவர்களுக்கு தர்ம பிரபு என்று சொல்வார்கள். அதையே தொடர்ச்சியாக செய்தால், வாழும் வள்ளல் என்று கூறுவார்கள். அப்படித்தான், கல்விக்கு இவ்வளவு பெரிய தொண்டு செய்வதால், இளைய தளபதி என்ற பட்டத்துடன் சேர்த்து இளைய காமராசர் என்றும் அவரை அழைக்கலாம் என்று கூறினார். விஜய்யே இதை கேட்டு ஒரு நொடி சிரித்தார்.

எனினும் அவர் விஜய்யை பார்த்து இளைய காமராஜர் என்று கூறியதை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் டிரெண்ட் செய்து வந்தனர். சமூக வலைத்தளங்களிலும் இளைய காமராஜர் விஜய் என்ற கேப்ஷன் பரவி வந்தது. இந்த நிலையில் தான் இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

சீமான் சொன்ன பதில்

இந்த மாதிரி இதையெல்லாம் கேட்க நேரிடும் என்று நினைத்து தான் ரொம்ப நாளைக்கு முன்னாடியே செத்துப் போயிட்டார்.. அதில் இதுக்கு மேல பேச ஒன்னுமில்லை. இளைய காமராஜர் என்று சொன்னார் அல்லவா அவருக்கு காமராஜர் யார் என்றே தெரியாது.. அந்த ஆசிரியருக்கு காமராஜர் யார் என்று தெரியவில்லை.. அவர் என்ன படித்தாரோ.. காமராஜரை படிக்க வில்லை.. காமராஜர் 50 படம் நடித்து முதலமைச்சராக வரவில்லை.. அரசியலுக்கு வரவில்லை.. எதையாவது பேசியிட வேண்டியது.. இவ்வாறு அவர் கூறினார்.

அதிமுக - தேமுதிக கூட்டணி பற்றி

தேமுதிக கூட்டணியில் இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறிய சில மணி நேரங்களில், நாங்கள் கூட்டணி பற்றி பிறகு தான் சொல்வோம் என்று பிரேமலதா கூறியிருப்பது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு சீமான் பதில் அளித்து கூறியதாவது:-

இது அவங்க, அவர்களுடைய கட்சி.. அவங்க, அவர்களுடைய கட்சியின் உரிமை.. அதில் எப்படி நான் கருத்து சொல்ல முடியும்.. நான் யாருடனும் கூட்டு சேரவில்லை. எனக்கு சாப்பாட்டில் மட்டும் தான் கூட்டு பொறியல் எல்லாம்.. சண்டைன்னா தனியா தான் போவேன்.. தனித்து தான் போடுவேன். இதனால் என்னை இந்த ஆட்டத்தில் சேர்ப்பது தவறு.. என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+