நீங்க தூங்கும் போது.. உங்களை தெரியாமல் ஒட்டுக்கேட்கும் வாட்ஸ் ஆப்? ஏன்?.. மஸ்க் வேற பயமுறுத்துறாரே!
சென்னை: அமெரிக்காவில் ஒருவர் வாட்ஸ் ஆப் தன்னை ஒட்டுக்கேட்பதாக புகார் அளித்துள்ளார். அதிலும் தான் தூங்கும் போதும் கூட வாட்ஸ் ஆப் தன்னை ஒட்டுக் கேட்பதாக அவர் கூறி உள்ளார்.
கடந்த சில வருடங்களுக்கு முன், பேஸ்புக் தான் பேசுவது எல்லாவற்றையும் கேட்பதாக கூறி போலீஸ் நிலையத்தில் அமெரிக்கர் ஒருவர் பேஸ்புக் நிறுவனத்துக்கு எதிராக புகார் அளித்து இருந்தது பெரிய அளவில் கவனம் பெற்றது. மேலும் இதில் தான் செய்வது எல்லாவற்றையும் பேஸ்புக் கண்காணிப்பதாகவும் கூறியிருக்கிறார்

அவர் என்னவெல்லாம் பேசுகிறாரோ அதை எல்லாம் பேஸ்புக் விளம்பரமாக அவரது டைம் லைனில் காட்டியதை அடுத்து அவர் இவ்வாறு புகார் அளிக்க முடிவு செய்து இருக்கிறார். மேலும் இதேபோல் பல பேர் பேஸ்புக் தங்கள் பேசுவதை கேட்பதாக சமீப காலங்களில் கூறிவருகின்றார்.
பேஸ்புக்கில் நாம் மைக்ரோபோன் பயன்படுத்த அனுமதி கொடுத்து இருப்போம். அதை வைத்து நாம் பேசும் விஷயங்களில் பொருட்களின் பெயர்கள் இருந்தால் அதை அப்படியே விளம்பரமாக காட்டும்.
பேஸ்புக்கில் சமீப காலமாக அனைவருக்கும் இந்த விஷயம் நடந்து வருகிறது. நாம் எதைப்பற்றி அடிக்கடி பேசுகிறோமோ அதை பற்றி எல்லாம் பேஸ்புக் நமக்கு விளம்பரங்கள் காண்பிப்பதாக கூறப்படுகிறது.
உதாரணமாக நாம் பீட்ஸா பற்றி பேசினால் உடனே பேஸ்புக் டைம்லைனில் பீட்ஸா குறித்த விளம்பரம் வரும். முதலில் நாம் கூகுளில் சர்ச் செய்யும் விஷயங்கள் மட்டுமே பேஸ்புக்கில் அதிகமாக விளம்பரமாக வந்தது. அப்போது பேஸ்புக்கும் , கூகுளுக்கு கூட்டணி வைத்து இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது நாம் பேசும் விஷயங்களை கூட பேஸ்புக் கண்காணிப்பதாக புகார் வருகிறது.
இது பேஸ்புக்கின் கிளை நிறுவனமான இன்ஸ்டாகிராமிலும் நடந்து வந்தது. அங்கேயும் இதேபோல் விளம்பரம் காணப்பட்டது. ஆனால் இதெல்லாம் கூட விளம்பரத்திற்காக மார்க் ஜுக்கர்பெர்க் செய்யும் சித்து விளையாட்டு என்று கடக்கலாம்.

நாம் பேசுவதில் உள்ள ஆங்கில வார்த்தைகளை கேட்டு, அதை வைத்து விளம்பரம் கொடுக்கிறாங்க என்று வைத்துக்கொள்ள முடியும்.
இந்த நிலையில்தான் அமெரிக்காவில் ஒருவர் வாட்ஸ் ஆப் தன்னை ஒட்டுக்கேட்பதாக புகார் அளித்துள்ளார். அதிலும் தான் தூங்கும் போதும் கூட வாட்ஸ் ஆப் தன்னை ஒட்டுக் கேட்பதாக அவர் கூறி உள்ளார்.
வாட்ஸ் ஆப்: அதன்படி அவர் அதிகாலையில் தூங்கும் போது வாட்ஸ் ஆப் அவரை ஒட்டுக்கேட்டு உள்ளதாம். அவர் வாட்ஸ் ஆப்பில் ஆடியோ அனுப்புவதற்காக மைக்ரோபோன் அனுமதி கொடுத்துள்ளார். இந்த நிலையில் அவர் ஆடியோ அனுப்பாத சமயங்களில் கூட மைக்ரோபோனை வாட்ஸ் ஆப் உபயோகித்து உள்ளது.
உதாரணமாக அவர் அதிகாலையில் தூங்கிக்கொண்டு இருந்த போது அதிகாலை 4 மணி, 5 மணிக்கு எல்லாம் மைக்ரோபோனை வாட்ஸ் ஆப் ஆன் செய்து கேட்டு உள்ளது. அதாவது அவர் ஆடியோ அனுப்பாத நேரங்களில், அவர் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்தாத நேரங்களில், அவர் தூங்கும் நேரங்களில் கூட வாட்ஸ் ஆப் மைக்ரோபோனை பயன்படுத்தி உள்ளது.
அதிலும் சில முறை 20 நிமிடங்கள் கூட விடாமல் வாட்ஸ் ஆப் ஒட்டுக்கேட்டு உள்ளது. பேஸ்புக்காவது விளம்பரத்திற்காக இப்படி செய்கிறது என்று கூறலாம். ஆனால் வாட்ஸ் ஆப் ஏன் இப்படி செய்கிறது என்று தெரியவில்லை.
இது தொடர்பாக நெட்டிசனின் புகாரை பகிர்ந்து ட்விட்டர் நிறுவன தலைவர் எலான் மஸ்க் வாட்ஸ் ஆப்பை நம்ப கூடாது என்றுள்ளார்.
WhatsApp cannot be trusted https://t.co/3gdNxZOLLy
— Elon Musk (@elonmusk) May 9, 2023
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications