Zoho மீது பகீர் புகார்.. முன்னறிவிப்பு இன்றி 300 ஊழியர்கள் அதிரடி நீக்கம்? நிர்வாகம் தந்த விளக்கம்
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமாக உள்ள ஜோஹோ கொரோனா காலத்திலும் சரி தற்போதும் ஏஐ பயன்பாடு அதிகரிக்கும் போதும் சரி ஊழியர்களை பணி நீக்கம் செய்தது இல்லை. இதற்கிடையே தான் திடீரென 300 ஊழியர்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பணி நீக்கம் செய்யப்பட்டதாக வேகமாக தகவல் பரவி வரும் நிலையில் ஜோஹோ நிர்வாகம் முக்கிய விளக்கம் அளித்துள்ளது.
தற்போது ஐடி நிறுவனங்களில் ஊழியர்கள் பணி நீக்கம் என்பது அவ்வப்போது நடந்து வருகிறது. ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் டிசிஎஸ், காக்னிசண்ட், மைக்ரோசாப்ட் உள்பட பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வருகின்றன.

ஆனால் ஜோஹோ ஐடி நிறுவனம் அப்படி செய்வது இல்லை. கொரோனா பரவல் அதிகரித்தபோது பல நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய போதும், இப்போது ஏஐ பயன்பாடு அதிகரித்தாலும் கூட ஜோஹோவில் Layoff இல்லை. இதனை முன்னாள் சிஇஒ ஸ்ரீதர் வேம்பு உறுதி செய்துள்ளார். குறைவாக வருவாய் வளர்ச்சி இருந்தாலும் கூட பணி நீக்கம் என்பது இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
300 பேர் வரை பணி நீக்கம்?
இதனால் பலரும் ஜோஹோ ஐடி நிறுவனத்தில் பணியாற்ற விரும்புகின்றனர். இதற்கு முக்கிய காரணம் 'ஜாப் செக்யூரிட்டி' தான். இப்படியான சூழலில் தான் Blind செயலியில் ஒருவர் ஜேஹோவில் பணியாற்றியதாகவும் தற்போது 300 பேருடன் சேர்த்து தன்னையும் அந்த நிறுவனம் பணி நீக்கம் செய்ததாகவும் தெரிவித்துள்ளார். பிளிண்ட் செயலியில் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் தங்களின் அலுவலகங்களில் நடக்கும் விஷயங்களை பற்றி குறிப்பிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
பதிவில் இருப்பது என்ன?
அந்த வகையில் தற்போது ஒரு ஊழியர், ''ஜோஹோவில் நான் பணியாற்றினேன். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சமீபத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டேன். என்னுடன் சேர்ந்து பயிற்சி பெற்ற 300 பேர் வேலையில் இருந்து நீக்கப்பட்டனர். டிசிஎஸ், காக்னிசண்ட், கேப்ஜெமினி உள்ளிட்ட பிற நிறுவனங்களின் வாய்ப்புகளை நிராகரித்து ஜோஹோவை தேர்வு செய்தேன். பொருளாதார ரீதியாக சிக்கல்களை எதிர்கொள்ளும் குடும்பத்தில் பிறந்த எனக்கு இது வெறும் வேலை மட்டும் இல்லை. என்னுடைய குடும்பத்தினர் வாழ்வாதாரமாக இருந்தது. தற்போது பணி நீக்கம் என்னை மிகவும் பாதித்துள்ளது'' என்று கூறியுள்ளார்.
ஜோஹோ தந்த விளக்கம்
இந்த பதிவு அதிக கவனம் பெற்றது. பலரும் ஜோஹோ நிறுவனம் Layoff செய்வது இல்லையே. ஆனால் எப்படி 300 பேர் வரை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் தான் இந்த சம்பவம் பற்றி ஜோஹோ நிறுவனத்தின் பணியமர்த்துதல் மற்றும் எச்ஆர் பிரிவின் இணை இயக்குநர் முகமது சுஹைல் விளக்கம் அளித்துள்ளார்.
அதில், ''அந்த ஊழியர் நிறுவனத்தின் பயிற்சித் திட்டத்தையும் (internship programme), முழுநேரப் பணியையும் தவறாகக் குழப்பிக கொண்டுள்ளார். இவை இரண்டும் வெவ்வேறானவை. ஜோஹோ நிறுவனத்தில் முழுநேரமாக பணியாற்றும் ஊழியர்கள் யாரும் பணி நீக்கம் செய்யப்படவில்லை. இன்டர்ன்ஷிப் பயிற்சியில் உள்ளோருக்கு நிறுவனத்தில் முழுநேர பணி என்பது தானாக கிடைக்காது. அதேபோல் பணிக்கான உத்தரவாதத்தையும் வழங்காது.
என்ன நடந்தது?
2026ம் ஆண்டுக்கான பயிற்சித் தொகுப்பில் (intern cohort) 30% க்கும் அதிகமானோர் ஏற்கனவே முழுநேர பணி வாய்ப்புகளை பெற்றுள்ளனர் அல்லது தற்போது முழுநேர பணிக்கான மதிப்பீட்டில் உள்ளனர். மாறாக பணி வாய்ப்பு கிடைக்காதவர்கள் தாங்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறுவதில் உண்மை இல்லை. அது தவறானது. ஏனென்றால் சிறந்த திறமையை வெளிப்படுத்தியவர்கள் நிறுவனத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர் அல்லது சேர்க்கப்படுவார்கள்.
மற்றவர்கள் திட்டமிட்டபடி தங்கள் பயிற்சி திட்டங்களை முடித்து வேறு வேலைக்கு விண்ணப்பம் செய்ய முழு சுதந்திரம் உண்டு'' என்று கூறியுள்ளார். இதன்மூலம் இன்டர்ன்ஷிப் முறையில் நிறுவனத்தில் பயிற்சி பெற்றவர்களில் அதற்கான காலம் முடிவடைந்த பிறகு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதை, அந்த நபர் Layoff என்று பதிவிட்டு உள்ளதாக ஜோஹோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications