இசக்கி சுப்பையா தலையில் விழுந்த இடி..உங்க இஷ்டத்துக்கு ஆட முடியாது! ஆசையில் மண் அள்ளிப் போட்ட ஆர்டர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தலில் வென்ற பிறகு தங்கள் பதவியை ராஜினாமா செய்த அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்ற சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. இந்த நிலையில் பதவி விலகலை வாபஸ் பெறக்கோரி இசக்கி சுப்பையா தாக்கல் செய்த மனுவை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதேபோல ராஜினாமாவை திரும்பப்பெறும் விதி எல்லை என சட்டப்பேரவை செயலர் அலுவலகம் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.

கடந்த 2026 தமிழக சட்டசபை தேர்தலில், அதிமுக சார்பில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குச் சென்ற அம்பாசமுத்திரம் தொகுதியின் இசக்கி சுப்பையா, பெருந்துறை தொகுதியின் ஜெயக்குமார், தாராபுரம் தொகுதியின் சத்தியபாமா மற்றும் மதுராந்தகம் தொகுதியின் மரகதம் குமரவேல் ஆகியோர் சமீபத்தில் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்.

Isakki Subbiah

சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அவர்களது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, நால்வரும் தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்தனர். இந்த நடவடிக்கை தமிழக அரசியலில் பெரும் விவாதத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதிமுக சார்பில் 25 எம்எல்ஏக்கள் கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உத்தரவை மீறி தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதை அடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி தரப்பு கோரிக்கை விடுத்தது, பின்னர் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் எடப்பாடி பழனிச்சாமி அந்த மனுவை வாபஸ் பெற்றார்.

இதற்கிடையே கொறடாவின் உத்தரவை மீறி வாக்களித்ததோடு தங்கள் பதவிகளை ராஜினாமா செய்த மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா உள்ளிட்ட 6 எம்எல்ஏக்களுக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்தது. திடீரென அவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு அதே நாளில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். இந்நிலையில் அவர் ராஜினாமா கடிதத்தை ஏற்ற சபாநாயகர் ஜேசிடி பிரபாகரின் உத்தரவை ரத்து செய்யக்கோரி அதிமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை இன்று விசாரணைக்கு வந்த போது பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக அரசு தரப்பு, இசக்கி சுப்பையா தரப்பு, அதிமுக தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இந்த வாதங்களைக் கேட்ட சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

இந்த நிலையில் தனது ராஜினாமாவை திரும்ப பெறுவதாகவும் இடைத்தேர்தல் தொடர்பான வழக்கு முடியும் வரை அம்பாசமுத்திரம் எம்எல்ஏவாக தான் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் எனவும் தொகுதியில் எம்எல்ஏ இல்லாததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் தான் தொடர்ந்து எம்எல்ஏவாக பணியாற்ற அனுமதிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதலாக மனு ஒன்றினை தாக்கல் செய்தார் இசக்கி சுப்பையா.

இதற்கிடையே பதவி விலகலை வாபஸ் பெறக்கூடிய எம்.எல்.ஏவாக தொடர அனுமதி கோரியின் தாக்கல் செய்த இசக்கி சுப்பையாவின் மனதை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக கூறியுள்ளது. மேலும் இசக்கி சுப்பையாவுக்கு பெரும் பின்னடைவைத் தரும் வகையில் ராஜினாமாவை திரும்பப் பெரும் விதி இல்லை எனவும், ஏற்கனவே அம்பாசமுத்திரம் தொகுதி காலியான தொகுதி என அறிவிக்கப்பட்டு விட்டது. எனவே இடைத்தேர்தல் மட்டுமே தீர்வு என சட்டப்பேரவை செயலர் அலுவலகமும் கூறியுள்ளது. இதனால் மீண்டும் பதவி ஏற்கலாம் என்ற இசக்கி சுப்பையாவின் கனவில் இடி விழுந்துள்ளது என்கின்றனர் அதிமுகவினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+