பெரிய திருப்பம்! காலியான இஸ்ரேல் கூடாரம்! இன்னும் 15 நாட்கள் தாக்குபிடிப்பதே சிரமம்! ஈரான் அசத்தல்

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்: ஈரானின் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் திறமை இஸ்ரேலுக்கு இருந்தாலும், பாதுகாப்புக்கான செலவுகள் அதிகரித்திருப்பது அந்நாட்டிற்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த நாடு போரில் அடுத்த 10-15 நாட்கள் தாக்குபிடிப்பதே சிரமம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

ஏவுகணையை இடைமறித்து அழிக்க இஸ்ரேலுக்கு ஏறக்குறைய 3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகிறது. ஒரு இரவிற்கு மட்டும் இஸ்ரேலில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு சுமார் 285 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், இஸ்ரேல் எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்கும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

இஸ்ரேலின் பாதுகாப்பு குறித்த கவலைகள்

கடந்த வெள்ளிக்கிழமை அன்று, இஸ்ரேல் "ரைசிங் லயன்" என்ற ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. அதற்குப் பதிலடியாக ஈரான் சுமார் 400 பாலிஸ்டிக் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவியது. ஈரானின் ஆயுதக் கிடங்கில் இஸ்ரேலைத் தாக்கும் திறன் கொண்ட 2,000 ஏவுகணைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதிக உயரத்தில் உள்ள பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்க ஏரோ அமைப்பை இஸ்ரேல் பயன்படுத்தி வருகிறது. இஸ்ரேல் பெரும்பாலான ஏவுகணைகளை அழித்து இருந்தாலும், இதை எல்லாம் செய்ய இஸ்ரேலுக்கு அதிக செலவாகிறது.

மற்றொருபுறம், இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகளின் இருப்புகள் குறைந்து வருகின்றன. அதாவது ராக்கெட்டுகள், ஏவுகணை தடுப்பு அமைப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அமெரிக்காவிடமிருந்து உடனடியாக உதவி கிடைக்கவில்லை என்றால், ஈரான் இதே வேகத்தில் தாக்குதல் நடத்தினால், இஸ்ரேல் இன்னும் 10 அல்லது 12 நாட்களுக்கு தாக்குப்பிடிக்க முடியும் என்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இப்போதே இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்பு அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. விரைவில், எந்த ஏவுகணைகளை இடைமறிப்பது.. எந்த ஏவுகணையை தாக்க அனுமதிப்பது என்ற கடுமையான முடிவை இஸ்ரேல் எடுக்க வேண்டியிருக்கும்.. என்று அந்த வட்டாரம் மேலும் தெரிவித்தது.

ஈரானின் ராணுவ உள்கட்டமைப்பை அழித்துவிட்டதாக இஸ்ரேல் கூறினாலும், நீண்ட தூர ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் ஏவுகணைகளின் எண்ணிக்கை இஸ்ரேலுக்கு நாளுக்கு நாள் குறைந்து வருவதாக வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. இது இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்புகளின் நிலைத்தன்மை குறித்து கவலையை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

Israel arsenal can not even hold for next 10-15 days If Iran attack continues

டெல் அவிவ் அதிகாரிகள், "ஈரானின் ஏவுகணை ஏவுதளங்களில் மூன்றில் ஒரு பங்கை இஸ்ரேல் அழித்துள்ளது. மேலும், ஈரானிய வான்வெளியில் இஸ்ரேல் தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது" என்று குறிப்பிட்டனர். ஆனால், ஈரான் தனது ஏவுகணை இருப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவற்றை நிலத்தடி வசதிகளில் பாதுகாப்பாக மறைத்து வைத்திருக்கிறது என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இஸ்ரேலின் பாதுகாப்பில் ஐயன் டோம், டேவிட் ஸ்லிங், ஏரோ சிஸ்டம் மற்றும் அமெரிக்கா வழங்கிய பேட்ரியாட் மற்றும் THAAD பேட்டரிகள் அடங்கும். இஸ்ரேலின் ஒரு இரவு நேர ஏவுகணை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு 1 பில்லியன் ஷெக்கல் (285 மில்லியன் அமெரிக்க டாலர்) வரை செலவாகும் என்று மதிப்பிட்டுள்ளது. ஏரோ அமைப்பில் இருந்து ஏவப்படும் ஏவுகணையின் விலை மட்டும் 3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

இதே நிலை நீடித்தால் இஸ்ரேல் பொருளாதார ரீதியாக அழியும். இன்னும் அதிகபட்சம் 10-15 நாட்கள் மட்டுமே இஸ்ரேல் நீடிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+