இன்னும் 1,000 கோடி ஆண்டுகள்தான்.. அப்புறம் பூமி இருக்காது! இஸ்ரோ விஞ்ஞானி நிகர் ஷாகி ஷாக்
சென்னை: இன்னும் 1,000 கோடி ஆண்டுகளுக்கு பின்னர் சூரியன் விரிவடைய தொடங்கும் என்றும் அதன் பின்னர் சூரிய குடும்பமே இருக்காது என்று ஆதித்யா எல்1 திட்ட இயக்குநர் நிகர் ஷாஜி கூறியுள்ளார்.
நாம் யார்? எங்கிருந்து வந்தோம்? எதற்காக வந்திருக்கிறோம்? என்கிற கேள்விதான் எல்லா மனிதனையும் தற்போதுவரை உலுக்கிக்கொண்டிருக்கிறது. இதற்கான விடையை தேட நாம் வந்த வழியை நோக்கி பயணிக்க வேண்டும். அதாவது பூமி, சூரிய குடும்பம், அண்டம், பால்வழி அண்டம், விண்மீன் திரள்கள், பிரபஞ்சம் என அனைத்தையும் ஆராய வேண்டும். இதற்கான ஆய்வு ஒரு பக்கம் நடந்துக்கொண்டே இருக்கிறது. அதேபோல சூரியன் பற்றிய ஆய்வும் மறுபுறம் நடந்துக்கொண்டிருக்கிறது.

நம்முடைய சூரியன் மிகவும் தனித்துவமானது. வானத்தில் நாம் பார்க்கும் ஒவ்வொரு நட்சத்திரமும் ஒரு சூரியன்தான். சூரியன்களில் பல வகைகள் உண்டு. நம்முடைய சூரியன் மஞ்சள் குள்ளகோள் என்று அழைக்கப்படுகிறது. சிவப்பு, வெள்ளை நிறத்தில் கூட சூரியன்கள் உண்டு. நம்முடையது மஞ்சள் குள்ளகோள் வகையை சேர்ந்தது. இருப்பினும் நமது சூரியன் வெண்மை நிறத்தில்தான் இருக்கும். இது மிதமான அளவில் வெப்பத்தையும் ஒளியையும் வெளியேற்றும். அதனால்தான் பூமியில் உயிர்கள் தோன்றியுள்ளன. அந்த வகையில் நம் சூரியன் தனித்துவமானதுதான்.
ஆனால் சூரியனும் ஒரு நாள் இறந்து போகும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சூரியனில் இருக்கும் ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து ஹீலியமாக மாறுகிறது. ஒரு கட்டத்தில் ஹைட்ரஜன் அனைத்தும் தீர்ந்து போனபின் ஹீலியம் எரிபொருளாக பயன்படும். அதுவும் தீர்ந்து போனவுடன் சூரியன் சுருங்க தொடங்கும். ஆனால் இது சுருங்குவதற்கு முன்னர் விரிவடைய தொடங்கும். இது ஒட்டுமொத்த சூரிய குடும்பத்தையும் பாதிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த இஸ்ரோவின் ஆதித்யா எல்1 திட்ட இயக்குநர் நிகர் ஷாஜி, "சூரியக் குடும்பம் உருவாகி ஏற்கனவே 450 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த குடும்பம் செயல்படத் தேவையான எரிபொருள், இன்னும் 500 கோடி ஆண்டுகளில் முடிவடைந்துவிடும். அதன்பின், சூரியன் விரிவடைந்துகொண்டே வந்து ஒட்டுமொத்த சூரியக் குடும்பத்தையும் அழித்துவிடும். இன்னும் 1000 கோடி ஆண்டுகளுக்கு பிறகு, சூரியக் குடும்பமும், பூமி உள்ளிட்ட பிற கோள்கள் எதுவுமே இருக்காது" என்று கூறியுள்ளார்.
இந்த பிரபஞ்சத்தில் இரண்டு நட்சத்திரங்கள்தான் அதிகமாக இருக்கின்றன. இதனை பைனரி ஸ்டார்ஸ் என்று சொல்வார்கள். ஆனால், நமது சூரிய குடும்பத்தில் மட்டுமே ஒரேயொரு நட்சத்திரமாக சூரியன் இருக்கிறது. இதுவும் ஒரு வகையில் நல்லதுதான். ஏனெனில் தற்போது சூரியனிலிருந்து நாம் பெறும் வெப்பம் போதுமானதுதான். இதுவே இரண்டு நட்சத்திரங்கள் இருப்பின் அது பூமியை அதிக வெப்பமடைய வைத்து உயிர்கள் வாழ்வதற்கு தகுதியற்ற இடமாக இதை மாற்றிவிடும்.
ஆனால் நமது சூரிய குடும்பத்தில் உள்ள வியாழன் கோள் ஒரு தோல்வியடைந்த நட்சத்திரம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இருப்பினும் விண்வெளியில் இருந்து வரும் பல விண்கற்கள் பூமியில் விழாமல் பாதுகாப்பது இந்த வியாழன் கோள்தான். ஏனெனில் இதன் ஈர்ப்பு விசை அதிகம். எனவே இதன் அருகில் எந்த விண்கற்கள் சென்றாலும் அதை வியாழன் இழுத்து பிடித்து வைத்துக்கொள்ளும். எனவே பூமி தப்பித்துள்ளது. இப்படி சூரிய குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோளும் பூமியை காப்பாற்றுகிறது என்று சொல்லலாம்.
ஆனால் இன்றும் 1,000 கோடி ஆண்டுகள் கழித்து சூரியனின் எரிபொருள் தீர்ந்த பிறகு. அது விரிவடையும். இப்படி விரிவடையும் போது புதன், வெள்ளி, பூமி போன்ற கோள்களை அது தனக்குள்ளே விழுங்கி விடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அப்படியெனில் 1,000 கோடி ஆண்டுகளுக்கு பின்னர் பூமி இருக்காது. எனவேதான் மேலை நாடுகள் விண்வெளி ஆய்வில் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications