“உங்க சர்வீஸ் புடிச்சு இருக்கு..” முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை பாராட்டிய இஸ்ரோ விஞ்ஞானி முத்துவேல்
சென்னை: தன்னை தொடர்புகொண்டு வாழ்த்திய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சேவைகளை பாராட்டி இருக்கிறார் சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீர முத்துவேல்.
சந்திரயான் 3 திட்டம் பெறும் வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார். அதில், ''சந்திரயான் - 3 விண்கலம் வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டு உள்ளது. இஸ்ரோவுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன். 4 வது நாடாக இந்தியாவை நிலாவில் தடம் பதிக்கும் வகையில் சந்திரயானை நிலைநிறுத்தி வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டு உள்ளது.

இதற்கு பாடுபட்டு புதுமை படைத்த ஒட்டுமொத்த குழுவிற்கும் பாராட்டு தெரிவிக்கிறேன். இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு பெரிய பாய்ச்சல் இது.'' என்று குறிப்பிட்டு இருந்தார். அவரது மற்றொரு பதிவில் "வெற்றிகரமாக சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கியது தமிழ்நாட்டிற்கு ஒரு பெரிய சாதனை உணர்வைக் தருகிறது.
மயில்சாமி அண்ணாதுரை, வனிதா மற்றும் வீரமுத்துவேல் ஆகிய தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகளால் 3 சந்திராயன் பயணங்களும் வழிநடத்தப்பட்டு உள்ளன. இவர்களின் அர்ப்பணிப்பும் அறிவும் நம் அனைவரையும் ஊக்குவிக்கிறது. இவர்களின் அடிச்சுவடுகளை தமிழ்நாட்டின் இளம் திறமையாளர்கள் பின்பற்றி நமது இந்தியாவின் முன்னேற்றப் பயணத்தில் பங்களிக்க நான் கேட்டுக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில், சந்திரயான் 3 திட்ட இயக்குநரான விழுப்புரத்தை சேர்ந்த வீர முத்துவேலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டலின் அலைபேசியில் தொடர்புகொண்டு பேசி வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். "'அறிவியல் தமிழர்' வீரமுத்துவேல் அவர்களை வாழ்த்தி மகிழ்ந்த தருணம்!" என்று குறிப்பிட்டு போனில் பேசிய வீடியோவையும் முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
அதில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "நான் சிம். வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள், சந்திரயான் விண்கலம் வெற்றிபெற்றது தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி, இந்தியாவுக்கே உலக அளவில் பெருமை தேடி கொடுத்து இருக்கிறீர்கள். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உங்களின் அப்பாவின் பேட்டியை பார்த்தேன்.
ரொம்ப பெருமைப்பட்டு இருக்கிறார். நீங்கள் தமிழ்நாட்டுக்கு வரும்போது தகவலை மட்டும் கொடுங்க. நான் உங்களை சந்திக்கிறேன். கட்டாயம் சந்திக்கலாம். எல்லோருக்கும் வாழ்த்து சொல்லுங்க." என்றார்.
இதற்கு பதிலளித்த வீர முத்துவேல், :நீங்க கால் செய்தது ரொம்ப சந்தோசம். எல்லோரிடமும் சொல்கிறேன். உங்களுடைய சர்வீஸ் எல்லாம் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது சார். நான் ரோவரை இப்போது வெளியில் எடுத்துக்கொண்டு இருக்கிறேன். அதனால் அதிகம் பேச முடியவில்லை. கடந்த சில நிமிடங்களாகவே வேலைகளில் இருந்தேன். உங்க கிட்ட பேசிய ரொம்ப சந்தோசம் சார். நன்றி." என்றார்.
மீண்டும் அவரிடம் பேசிய ஸ்டாலின், "தமிழ்நாட்டுக்கு வரும்போது சொல்லுங்க. மீட் பண்ணுவோம்." என்று சொல்லி அழைப்பை துண்டித்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications