ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இஸ்ரோவின் 100வது குழந்தை.. GSLV F15 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது!
சென்னை: இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 100வது ராக்கெட்டை விண்ணில் ஏவி புதிய சாதனையை படைத்திருக்கிறது. இந்த ராக்கெட்டில் 2 செயற்கைக்கோள்கள் விண்ணில் சென்றிருக்கின்றன.
இந்தியா தனது 100வது ராக்கெட்டை விண்ணில் ஏவி இருக்கிறது. இதற்கான கவுண்டவுன் நேற்று அதிகாலை தொடங்கியது. 100வது ராக்கெட், இதன் மூலம் விண்வெளி துறையில் இஸ்ரோ புதிய சாதனையை படைத்திருக்கிறது.

GSLV F15 என பெயரிடப்பட்டிருக்கும் இந்த ராக்கெட், NVS-02 எனும் பெயரில் 2 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு கொண்டு செல்கிறது. இந்த செயற்கைக்கோளின் நோக்கம் நேவிகேஷனை துல்லியமாக கொடுப்பதுதான். இந்தியாவை விட்டு 1500 கி.மீ தொலைவில் நீங்கள் இருந்தால் கூட, எங்கு இருக்கிறீர்கள் என்பதை இந்த செயற்கைக்கோள் துல்லியமாக கண்டுபிடித்து சொல்லிவிடும்.
இந்த செயற்கைக்கோள்கள் இரண்டு நோக்கங்களுக்காக விண்ணில் ஏவப்படுகிறது. ஒன்று Standard Positioning Service (SPS). அதாவது நாம் பயன்படுத்தும் ஜபிஎஸ் (GPS) சேவைதான் இது. ஜிபிஎஸ் சேவையை மேம்படுத்த இந்த SPS பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் 5-10 மீ அளவுக்கு துல்லியமாக நாம் ஜிபிஎஸ்-ஐ பயன்படுத்த முடியும். அதேபோல இதை பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். மட்டுமல்லாது 24/7 இதன் சேவை கிடைக்கும்.

இரண்டாவது Restricted Service (RS) என அழைக்கப்படுகிறது. இது முழுக்க முழுக்க ராணுவ தேவைக்காக பயன்படுத்தப்படுகிறது. இதை பயன்படுத்தி தேடும்போது நீங்கள் எங்கிருந்தாலும் கண்டுபிடிக்கப்படுவீர்கள். SPS/GPS சேவையை விட இது மிகவும் துல்லியமானதாக இருக்கிறது. பாதுகாப்பு, தேடுதல், எல்லை ஊடுருவல் உள்ளிட்டவற்றிற்காக இந்த செயற்கைக்கோள் தரவுகள் பயன்படுத்தப்படும்.
ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இஸ்ரோவின் 100வது குழந்தை:
தற்போது ஏவப்பட்டிருக்கும் ராக்கெட் இஸ்ரோவின் 100வது ராக்கெட் கிடையாது. ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்படும் 100வது ராக்கெட்டாகும். ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து முதல் முதலாக கடந்த 1979ம் ஆண்டு ஆக.10ம் தேதி முதல் ராக்கெட் ஏவப்பட்டது. SLV-3 E10 என்பதுதான் இதன் பெயர். இதில் ரோகினி டெக்னாலஜி பேலோட் வைத்து அனுப்பப்பட்டது. இந்தியாவின் முதல் விண்வெளி ராக்கெட் 'SLV-3'-ன் செயல்திறனை கண்காணிக்க அனுப்பப்பட்டது. ஆனால் முதல் முயற்சி பாதிதான் வெற்றியடைந்தது.

அதன் பிறகு இஸ்ரோவின் தலைவராக முன்னாள் குடியரசு தலைவரான ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பொறுப்பேற்றார். அவர் தலைமையில் 1980 ஜூலை மாதம் 19ம் தேதி SLV-3E2 ராக்கெட் ஏவப்பட்டது. அந்த முயற்சி முழு வெற்றியை கொடுத்தது. அதன் பிறகு 2 SLV ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. பின்னர் 4 ASLV ராக்கெட்டுகள், 62 PSLV வகை ராக்கெட்டுகள், 16 GSLV வகை ராக்கெட்டுகள், 7 LMV3 ராக்கெட்டுகள், 3 SSLV ராக்கெட்டுகள், 1 RLV வகை ராக்கெட் இதுவரை ஏவப்பட்டிருக்கிறது.
இவற்றில் , 2008ல் ஏவப்பட்ட சந்திரயான் -1 (PSLV-C11), 2019ல் ஏவப்பட்ட சந்திரயான் -2 (GSLV-Mk III - M1), 2023ல் ஏவப்பட்ட சந்திரயான்-3 (LVM3 M4/) ஆகியவை மிக முக்கியமான மிஷன்களாக இருக்கிறது.

சந்திரயான் மிஷன்களை தவிர, 2013ல் ஏவப்பட்ட செவ்வாய் ஆர்பிட் மிஷன் (PSLV-C25), சூரியனை ஆய்வு செய்ய 2023ல் அனுப்பப்பட்ட ஆதித்யா-எல்1 மிஷன் (PSLV-C57) ஆகியவை ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்துதான் ஏவப்பட்டிருக்கிறது. வெளி கிரகத்தை ஆய்வு செய்யவும், சூரியனை ஆய்வு செய்யவும் அனுப்பப்பட்ட முதல் ராக்கெட்டுகள் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்துதான் சென்றிருக்கின்றன.
மட்டுமல்லாது கடந்த 2017ம் ஆண்டு இங்கிருந்து இஸ்ரோ, 104 செயற்கைக்கோள்களை Cartosat-2 series மிஷனில் PSLV-C37 ராக்கெட்டில் அனுப்பியது. இதன் மூலம் 2021வரை, ஒரே ராக்கெட்டில் அதிக செயற்கைக்கோள்களை அனுப்பியது இந்தியாதான் என்கிற பெருமையை தக்கவைத்திருந்தது. 2021க்கு பின்னர் எலான் மஸ்க் ஸ்பேஸ் எக்ஸ் மூலம் 143 ராக்கெட்களை அனுப்பி இந்த சாதனையை முறியடித்தார்.

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றி மட்டும்தானா? என்றால் கிடையாது. தோல்வியும் நிறைய இருக்கிறது.
1. 2006ல் GSLV-F02 ராக்கெட்டில் ஏவப்பட்ட இன்சாட் -4சி ராக்கெட் ஏவுதல் தோல்வி
2. 2010ல் GSLV-D3, GSAT-4, GSLV-F06, GSAT-5P ஆகிய ராக்கெட் ஏவுதல்கள் தொடர்ந்து தோல்வி
3. 2021ல் கூட புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை GSLV-F10 ராக்கெட்டில் வைத்து அனுப்பியபோது தோல்வி
தோல்விகள் சில இருந்தாலும் வெற்றிகளைதான் ஸ்ரீஹரிகோட்டா அதிகம் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் இன்றும் இந்த வெற்றி தொடர்கிறது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications