கலக்கப் போகுது இந்தியா..விண்வெளிக்கும் செல்லும் ஏஐ ரோபோ ‘வயோமித்ரா'.. இஸ்ரோ தலைவர் சொன்ன குட் நியூஸ்

Subscribe to Oneindia Tamil

கோவை: இந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆளில்லாத விண் ஏவூர்தியை அனுப்ப திட்டமிட்டுள்ளோம். அதில் வயோமித்ரா என்ற எந்திர மனிதரை அனுப்ப உள்ளோம். டிசம்பர் மாதம் இறுதியில் அது நடைபெறும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியுள்ளார். மேலும் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டம் 2027ஆம் ஆண்டு நடைமுறைத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.

கோவையில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இஸ்ரோ தலைவர் நாராயணன் விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ககன்யான் திட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த திட்டம் 2018 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த திட்டம்.

இந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆளில்லாத விண் ஏவூர்தி அனுப்ப திட்டமிட்டுள்ளோம். அதில் வயோமித்ரா என்ற எந்திர மனிதரை அனுப்ப உள்ளோம். டிசம்பர் மாதம் இறுதியில் அது நடைபெறும். இது முடிந்தவுடன் இரண்டு ஆளில்லா ராக்கெட்களை அனுப்ப உள்ளோம். 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மனிதர்களை அனுப்பவுள்ளோம்.

Uncrewed Gaganyaan Mission

ஐஎஸ்ஆர்ஓ

ககன்யான் திட்டத்தில் 85% சோதனைகள் நிறைவு பெற்றுள்ளது. மனிதர்களை அனுப்புவதற்கு பல்வேறு கட்ட சோதனைகள் மேற்கொள்ள வேண்டும், ராக்கெட்டில் விபத்து நடந்தால் மனிதர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதையும் ஆய்வு செய்து வருகிறோம். மேலும் இது ஐஎஸ்ஆர்ஓ மட்டுமல்லாமல் ஏரோ, NAVY உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்கிறார்கள். உலகத்தில் 9 இடங்களில் நாம் முதலிடத்தில் இருக்கிறோம்.

AI தொழில்நுட்பம்

நிலாவில் இருக்கக்கூடிய கேமராவில் சிறந்த கேமரா நம் நாட்டினுடையது தான். செவ்வாய் கிரகத்துக்கு அனுப்புவதிலும் வெற்றி அடைந்த முதல் நாடு இந்தியா தான். ராக்கெட் இன்ஜினியிலும் சாதனைகளை படைத்துள்ளோம். மேலும் நம் நாட்டில் 55 சதவிகிதம் பாமர மக்களின் விண்ணப்பங்கள் வர பெற்றுள்ளது. மாணவர்கள் அனைவரும் விண்வெளி சார்ந்த விஷயங்களில் ஆர்வமாக உள்ளனர். AI தொழில்நுட்பம் விண்வெளித் துறையிலும் வந்துவிட்டது. வயோமித்ரா என்பதும் ஏஐ டெக்னாலஜி தான் சந்திராயன் 4 நிலாவில் மாதிரிகளை எடுத்து வருவதிலும் AI ரோபோ தொழில்நுட்பத்தை பயன்படுத்த போகிறோம" என்றார்.

ககன்யான் திட்டம்

மனிதா்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் ககன்யான் திட்டம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) கனவுத் திட்டமாகும். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய விமானப் படையின் சுபான்ஷு சுக்லா, பிரசாந்த் நாயா், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் ஆகிய 4 குரூப் கேப்டன்கள் விண்வெளி வீரா்களாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். அவா்கள் அங்கு மூன்று நாள்கள் தங்கி, பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொள்வா். பின்னா், மீண்டும் பூமிக்குத் பாதுகாப்பாகத் திரும்புவாா்கள்.

ககன்யான் ஜி1

இதன்மூலம், அமெரிக்கா, ரஷியா, சீனாவுக்குப் பிறகு சொந்த விண்கலத்தில் மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பிய உலகின் நான்காவது நாடாக இந்தியா உருவாகும் விண்வெளிக்கு ஆள்களைக் கொண்டு செல்லும் ராக்கெட் திட்டத்தின் முதல் கட்டமாக, ககன்யான் ஜி1 என்னும் ராக்கெட்டை ரோபோடிக் உதவியுடன் டிசம்பரில் விண்ணுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது ராக்கெட்டில் செல்லும்போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால் விண்வெளி வீரா்களை பத்திரமாக மீட்டு வருவது, ஆய்வு முடிந்து கடலில் தரை இறங்கும் பாராசூட் தொழில்நுட்பம் என பல்வேறு நிலைகளில் ஆய்வுகளும், மாதிரி ஒத்திகைகளும் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+