இஸ்ரோவின் 101 ராக்கெட் தோல்வி.. காரணம் இதுதான்! விஞ்ஞானிகள் விளக்கம்
சென்னை: இஸ்ரோ சார்பில் இன்று 101வது ராக்கெட் விண்ணுக்கு ஏவப்பட்டிருந்தது. ஆனால் ஏவுதல் முயற்சி தோல்வி அடைந்திருப்பதாக இஸ்ரோ தலைவர் தெரிவித்திருக்கிறார். அதே நேரம், தோல்விக்கான காரணத்தையும் குறிப்பிட்டிருக்கிறார்.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக திட்டம் தோல்வியடைந்திருப்பதாகவும், இந்த விவகாரம் குறித்து முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மீண்டும் ராக்கெட் ஏவப்படும் எனவும் இஸ்ரோ தலைவர் கூறியிருக்கிறார்.

இன்று அதிகாலை 5.59 மணிக்கு PSLV-C61 ராக்கெட் மூலம் EOS-09 செயற்கைகோளை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. மொத்தம் 4 கட்டங்களாக ராக்கெட் பிரிய வேண்டும். இதில் 3வது கட்டத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கிறது. எனவே ஏவுதல் தோல்வி அடைந்திருக்கிறது. 232வது கி.மீ தூரத்தில் ராக்கெட் சென்றுக்கொண்டிருந்தபோது இந்த தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 232 கி.மீ என்பது, ராக்கெட் செலுத்தப்பட்ட 8 நிமிடம் 13வது நொடியாகும்.
இந்த தோல்விக்கான முழுமையான காரணம் இன்னும் தெரியவில்லை. தோல்வி குறித்து பகுப்பாய்வு நடத்தப்பட்டு, முழுமையான காரணம் கண்டுபிடிக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியுள்ளார்.
மேலும், "நான்கு கட்டங்களாக ராக்கெட் பிரிய வேண்டும். மூன்றாவது கட்டத்தில் திட எரிபொருள் மோட்டார் செயல்பட வேண்டும். வளிமண்டலத்திற்கு வெளியே நடைபெறும் நிகழ்வு இது. வளிமண்டலத்திற்கு உள்ளே எனில் புவி ஈர்ப்பு விசை அதிகமாக இருக்கும். எனவே அதற்கு எதிராக உந்து சக்தியும் அதிகமாக இருக்க வேண்டும். ஆனால், வளிமண்டலத்திற்கு வெளியே எனில், அதிக உந்து சக்தி தேவையில்லை. ஆனால் இந்த ராக்கெட்டில் 240 கிலோ நீயூட்டன்கள் உந்துதல் வெளியாகியுள்ளது" என்று கூறியுள்ளார்.
இது கூட தோல்விக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் 4வது கட்டத்தில் ராக்கெட் தனது உயரத்தை குறைக்க வேண்டும். இதற்கு உந்துதல் குறைவாக இருக்க வேண்டும். இதற்கு அடுத்த கட்டத்தில் செயற்கைக்கோள் வெளி வர வேண்டும். ஆனால் 4வது கட்டத்தில் மிஷன் தோல்வி அடைந்திருக்கிறது.
இந்த ராக்கெட்டில் வைத்து அனுப்பப்பட்ட செயற்கைக்கோள், மிகவும் துல்லியமான படங்களை அனுப்பும் திறன் கொண்டது. பகல், இரவு நேரங்களிலும் கூட இது மிகச் சிறப்பாக செயல்படக்கூடியது. இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில், இந்த செயற்கைக்கோள் சில முக்கிய தகவல்களை நமக்கு வழங்கும் என்கிற நம்பிக்கையில் ஏவப்பட்டிருந்தது. தற்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக திட்டம் தோல்வி அடைந்திருக்கிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications