‛‛மாஸ்’’. அந்த 7 கருவிகள்! சூரியனை தோலுரிக்கும் ஆதித்யா எல்-1.. அடுத்த 5 ஆண்டு ரொம்ப முக்கியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இஸ்ரோ சார்பில் முதல் முறையாக சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் சுட்டெரிக்கும் சூரியனில் மறைந்திருக்கும் ரகசியங்களை அடுத்த 5 ஆண்டுகளில் ஆதித்யா எல்-1 விண்கலம் வெளிக்கொண்டு வரும் வகையில் 7 முக்கிய கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

அந்த கருவிகள் என்னென்ன? அந்த கருவிகள் மேற்கொள்ளும் பணிகள் குறித்த முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதன் விபரம் வெளிவருமாறு:

ISROs Aditya L-1 spacecraft has 7 Special Instruments to finds Suns Secrets

நிலவின் தென்துருவத்துக்கான சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக சூரியனை ஆய்வு செய்யும் வகையில் ஆதித்யா எல்-1 விண்கலம இன்று காலை 11.50 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் விண்ணில் சீறிப்பாய்ந்தது.

அதன்பிறகு அடுத்த ஒரு மணிநேரத்துக்குள் பிஎஸ்எல்வி - சி57 ராக்கெட்டில் இருந்து ஆதித்யா எல்-1 விண்கலம் தனியாக பிரிக்கப்பட்டு பூமியின் சுற்றுவட்டபாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இதையடுத்து விண்கலத்தின் புவி சுற்றுவட்டப்பாதை படிப்படியாக உயர்த்தப்படும்.

இதையடுத்து 125வது நாளில் ஆதித்யா எல்-1 விண்கலம் பூமியில இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் லாக்ரேஞ்ச் பாயிண்ட் 1 எனும் பகுதியில் சூரியனை நோக்கி நிலைநிறுத்தப்படும். அதன்பிறகு விண்கலத்தில் உள்ள 7 கருவிகள் ஆய்வை மேற்கொள்ள உள்ளன. சூரியனின் மேல்வளிமண்டம், வெளிப்புற அடுக்குகளை ஆய்வு செய்ய உள்ளது. இந்த 7 கருவிகளும் தனித்தனியான பணிகளை செய்ய உள்ளது. குறிப்பாக சூரியகாற்று என்பது ஒட்டுமொத்த உலகத்தையுமே முடக்கும் சக்தி கொண்டது என்பதால் அதுபற்றி தெளிவான ஆய்வை ஆதித்யா எல்-1 மேற்கொள்ள உள்ளது.

இந்த ஆதித்யா எல் 1 விண்கலம் என்பது 5 ஆண்டு வரை செயல்படும் என கூறப்படுகிறது. இதனால் 5 ஆண்டுகளும் ஆதித்யா எல்-1 விண்கலத்தில் உள்ள 7 கருவிகள் மேற்கொள்ள உள்ள அசத்தலான பணிகள் பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. ஆதித்யா எல்-1 விண்கலத்தில் Remote Sensing Payloads என்பது 4 வகையான கருவிகளை குறிக்கும். இதில் முதல் கருவி என்பது விசிபல் எமிஷன் லைன் கொரோனாகிராப் (VELC) என்பதாகும். இது சூரியனின் கொரோனா பகுதி குறித்த விஷயத்தை ஆய்வு செய்ய இருக்கிறது. மேலும் படமெடுத்து இஸ்ரோவுக்கு அனுப்பி வைக்க உள்ளது.

2வது கருவி சோலார் அல்ட்ரா வயலட் இமேஜிங் டெலஸ்கோப் (SUIT) என்பதாகும். இது சூரியனின் போட்டோஸ்பியர், குரோமோஸ்பிரயர் குறித்த ஆய்வுகளை செய்ய உள்ளது. இதன்மூலம் சூரியனின் செயல்பாடு, விண்வெளியின் காலநிலை விஷயங்களை அறிந்து கொள்ள முடியும்.

3வது கருவி என்பது சோலார் லோ எனர்ஜி எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் (SoLEXS) என்பதாகும். இது சூரியனின் மேற்பரப்பில் இருந்து வெளியேறும் எக்ஸ் கதிர்களை கவனித்து ஆய்வு செய்யும். அந்த கதிர்களின் பண்புகள் குறித்த முக்கிய விபரங்களை இஸ்ரோவுக்கு வழங்க உள்ளது. மேலும் சூரியக்காற்று (சூரியனில் இருந்து வெளிவரும் சூடான துகள்கள், மின்னூட்டத்துடன் கூடிய துகள்கள் பரவல்) தொடர்பான அம்சங்களையும் கண்காணித்து வழங்கும்.

4வது கருவி என்பது ஹை என்ரஜி எல்1 ஆர்பிட்டிங் எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்(HEL1OS) இது சூரியனில் இருந்து வெளிவரும் கடினமான எக்ஸ்ரே கதிர்கள் குறித்த தரவுகளை சேகரித்து வழங்கும். இதனை ஆராய்வதன் மூலம் சூரியகாற்றின் தாக்கம் குறித்து அறிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து ஆதித்யா எல்-1 விண்கலத்தில் In-situ Payloads என்பதில் 3 கருவிகள் உள்ளன. இதில் முதல் கருவி என்பது ஆதித்யா சூரிய காற்றின் துகள் பரிசோதனை (ASPEX) என்பதாகும். இது சூரியனில் இருந்து வெளிப்படும் வெப்ப துகள்களின் புரோட்டான்கள் உள்ளிட்ட மின்னூட்டம் பெற்ற துகள்களை ஆய்வு செய்ய உள்ளது. இந்த ஆய்வு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதன்மூலம் சூரியகாற்றின் தன்மையை முழுவதுமாக அறிந்து கொள்ளலாம். அதோடு சூரியகாற்று பூமிக்குள் நுழைந்தால் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும். இது 5வது கருவியாகும்.

6 வது கருவி என்பது ஆதித்யா பிளாஸ்மா அனலைசர் தொகுப்பு (PAPA) என்பதாகும். இது சூரிய காற்றில் உள்ள எலக்ட்ரான்கள் மற்றும் அதிக திறன் கொண்ட மின்னூட்டம் பெற்ற துகள்களை ஆய்வு செய்யும். இதன்மூலம் சூரியக்காற்றுக்கும், பூமியின் காந்த அடுக்குக்கும் (சூரியக்காற்றில் இருந்து நம்மை பாதுகாக்கும் போர்வை) இடையேயான தொடர்பு பற்றிய விஷயங்களை புரிந்து கொள்ள முடியும்.

7 வது கருவி என்பது அட்வான்ஸ் ட்ரை-ஆக்சியல் ஹை-ரெசல்யூஷன் டிஜிட்டல் மேக்னேட்டோமீட்டர். இது ஒரு காந்திமானியாகும். அதாவது சூரியனின் கொரோனா பகுதியில் உள்ள காந்த பண்புகளை அளவிடுவது தான் இதன் முக்கிய பணியாகும். சிஎம்இஎஸ் எனும் கரோனல் மாஸ் எஜெக்சன்ஸ் போன்ற நிகழ்வுகள் மற்றும் சூரிய காற்றால் பூமியில் தகவல் தொடர்பு உள்ளிட்டவை பாதிக்கப்படலாம். இதனை தடுக்கும் வகையில் இந்த ஆய்வு மிகவும் முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+