ஏகப்பட்ட மர்மங்கள்.. அது என்ன சூரிய "கொரோனா".. ஆதித்யா எல்1 இதை ஆய்வு செய்வது ஏன்? ஷாக் பின்னணி
சென்னை: சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 அனுப்பப்பட்டுள்ள நிலையில் சூரியனின் கொரோனா பாகம் குறித்த விவாதம் எழுந்துள்ளது. இந்த பாகம் குறித்து இங்கு விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது.
ஆதித்யா எல்1 திட்டம் பல்வேறு காரணங்களுக்காக சூரியனை நோக்கி அனுப்பப்படுகிறது. அதில், சூரியனின் கொரோனா பகுதியை ஆய்வு செய்வது இதன் முக்கிய நோக்கம் ஆகும்.

சோலார் கொரோனா என்பதுதான் சூரியனின் வெளிப்புற பகுதி ஆகும். இதைத்தான் ஆதித்யா எல் 1 ஆய்வு செய்ய உள்ளது. அதேபோல் சூரிய கதிர்களையும் ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 களமிறங்கி உள்ளது. இந்த ஆதித்யா சூரியனில் இருந்து எல் 1 பாயிண்ட் தூரத்தில் இருக்கும்.
சூரியனை தொடாது: கிட்டத்தட்ட சூரியன் பூமிக்கு இடையிலான தூரம் 151 மில்லியன் கிலோ மீட்டர் ஆகும். கிட்டத்தட்ட சூரியனில் இருந்து 149 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தில் இந்த ஆதித்யா எல் 1 நிலைநிறுத்தப்படும். கிட்டத்தட்ட 4 மாதங்கள் பயணம் செய்து ஆதித்யா எல் 1 சூரியனின் இந்த எல் 1 பாயிண்டை சென்றடையும். நாசாவின் பார்க்கர் இதற்கு முன் சூரியனில் இருந்து 7.8 மில்லியன் கிலோ மீட்டர் அருகில் சென்றது. அதன்பின் தற்போது இஸ்ரோ சார்பாக ஆதித்யா எல் 1 அனுப்பப்பட உள்ளது.
நாசா பார்க்கர்: கடந்த 2021 ல் சூரியனின் வெளிப்புற வளிமண்டலம் என்று கருதப்படும் அதன் வெளிப்புற சுற்றுவட்டப்பகுதிக்குள் நாசாவின் பார்க்கர் சோலார் ப்ரோப் நுழைந்தது. மனித குல வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாக இது பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் நாசா மூலம் கடந்த 2018ல் விண்ணில் ஏவப்பட்டது பார்க்கர் சோலார் ப்ரோப் (The Parker Solar Probe). இந்த The Parker Solar Probe சூரியனை குறித்து ஆராய்வதற்காக விண்ணில் ஏவப்பட்டது. சூரியனின் தன்மை எப்படி இருக்கிறது, அதன் வெளிப்புறம் எப்படி இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதற்காக இது விண்ணில் ஏவப்பட்டது.
இந்த நிலையில்தான் சூரியனின் வெளிப்புற வளிமண்டல பகுதியை நாசாவின் The Parker Solar Probe தொட்டுள்ளது. அதாவது சூரியனில் இருந்து 3.8 மில்லியன் மைல் தொலைவிற்கு அருகில் The Parker Solar Probe சென்றுள்ளது. சூரியன் தொடக்கத்தில் உருவான இடமாக கருதப்படும் பகுதிக்குள் இந்த The Parker Solar Probe சென்றுள்ளது. இந்த The Parker Solar Probeல் 4.5 இன்ச் தடிமானம் கொண்ட கார்பன் காம்போசைட் ஷீல்ட் ஒன்று உள்ளது. இதுதான் சூரியனில் இருந்து வரும் வெப்பத்தை தடுத்து The Parker Solar Probeஐ காப்பாற்றுகிறது. சூரியனின் வெப்பத்தில் ஐஸ் கிரீம் போல The Parker Solar Probe உருகாமல் தடுப்பது இந்த ஷீல்ட்தான்.
இந்த ஷீல்டின் வெளிப்புறம் மட்டும் 1377 டிகிரி செல்ஸியஸ் வரை செல்ல கூடியது. சூரியனின் வளிமண்டலத்தின் வெளிப்பகுதியை கொரோனா என்று அழைப்பார்கள். அதாவது நமது வளிமண்டலம் எப்படி உயரத்தின் அடிப்படையில் ஸ்ட்ரேடோஸ்பியர், ட்ரோபோஸ்பியர், என்று பிரிக்கப்பட்டு இருக்கிறதோ அதேபோல் சூரியனின் வெளிப்புற வளிமண்டலம் கொரோனா என்று அழைக்கப்படுகிறது.
இந்த கொரோனாவிற்குள்தான் நாசாவின் The Parker Solar Probe புகுந்துள்ளது. இந்த கொரோனா பகுதி சூரியனின் அருகாமை வளிமண்டலத்தை விட அதிக வெப்பநிலையுடன் இருக்கும். இங்கே இருக்கும் புழுதி, வேகம் காரணமாக சூரியனின் அருகாமை பகுதியை விட இந்த பகுதி அதிக வெப்பநிலையாக இருக்கும். இதைத்தான் இஸ்ரோவின் ஆதித்யா எல் 1 ஆய்வு செய்ய உள்ளது.
சூரிய மேல் வளிமண்டல (குரோமோஸ்பியர் மற்றும் கரோனா) இயக்கவியல் பற்றிய ஆய்வு. குரோமோஸ்பிரிக் மற்றும் கரோனல் வெப்பமாக்கல் பற்றிய ஆய்வு, அயனியாக்கம் செய்யப்பட்ட பிளாஸ்மாவின் இயற்பியல், கரோனல் எரிப்பு பற்றிய ஆய்வு உள்ளிட்ட ஆய்வுகளை ஆதித்யா எல் 1 மேற்கொள்ள உள்ளது.
ஆதித்யா எல்1: விண்ணில் ஏவுவதற்கான 24 மணிநேர கவுன்டவுன் நேற்று காலை 11.50 மணிக்கு தொடங்கியது. 100-127 நாட்கள் பயணித்து L1 சுற்றுவட்டப்பாதையை அடைந்து, சூரிய புயல், ஈர்ப்பு விசை, கதிர்வீச்சை ஆய்வு செய்ய உள்ளது ஆதித்யா L1 . இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு விண்கலன் இது. சூரியனை ஆய்வு செய்ய, இன்று காலை 11:50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா விண்கலத்தில் இருந்து புறப்பட திட்டமிடப்பட்டுள்ளது. PSLV-XL(C57) ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்த விண்கலம் ஏவப்பட்ட உள்ளது.
ஆகஸ்ட் 30 , சூரியனை ஆய்வு செய்ய வடிவமைக்கப்பட்ட ஆதித்யா-எல் 1 மிஷன், ஒத்திகை மற்றும் உள் சோதனைகளை வெற்றிகரமாக முடித்ததாக இஸ்ரோ கூறியது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications